அடுத்தடுத்து வேட்பாளர்கள் விலகல்.. கலக்கத்தில் பாஜக

0
348

அடுத்தடுத்து வேட்பாளர்கள் விலகல்.. கலக்கத்தில் பாஜக

மத்திய அமைச்சரும், காசியாபாத் எம்.பி.யுமான வி.கே.சிங் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். முன்னாள் ராணுவ ஜெனரலான இவர், புதிய வழிகளில் தேசத்திற்காக உழைக்க தனது ஆற்றலை பயன்படுத்த உள்ளதாக கூறியுள்ளார். ஏற்கெனவே, கவுதம் கம்பீர், ஜெயந்த் சின்ஹா, பிகாஜி தாகூர், சத்யதேவ் பச்சௌரி, ரஞ்சன் பென் என வேட்பாளர்கள் விலகும் பட்டியல் நீண்டு கொண்டே செல்வதால் பாஜக கலக்கமடைந்துள்ளது.

மணிப்பூர் கலவரம்- 2024 தேர்தலில் பின்வாங்கிய பாஜக!

மணிப்பூர் குக்கி பழங்குடிகளுக்கு எதிராக
ஒன்றிய, மாநில பாஜக அரசுகள் நடத்திய கலவரம்
மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து
மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர்(வெளிப்பகுதி) யில்
2019 ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 5 இடங்களில்
ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக
மாநில கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து
நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து பின்வாங்கியது!

சொந்தமா வேட்பாளரை கூட நிறுத்த வக்கு இல்லாத பாஜக!
40 ம் நமதேன்னு சொல்ல வெட்கமா இல்லையா?

விருதுநகர் – ராதிகா சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து பாஜக
நாமக்கல் – கே.பி. ராமலிங்கம், திமுகவில் இருந்து பாஜக
திருநெல்வேலி – நயினார் நாகேந்திரன், அதிமுகவில் இருந்து பாஜக
சிதம்பரம் – கார்தியாயினி, அதிமுகவில் இருந்து பாஜக
சென்னை வடக்கு – பால் கனகராஜ், தமிழ் மாநில கட்சியில் இருந்து பாஜக
புதுச்சேரி- நமச்சிவாயம், காங்கிரசில் இருந்து பாஜக
நாகப்பட்டினம் – எஸ்ஜிஎம் ரமேஷ், அதிமுகவில் இருந்து பாஜக
வேலூர் – ஏ.சி. சண்முகம், புதிய நீதிக் கட்சி
பெரம்பலூர் – பாரிவேந்தர், இந்திய ஜனநாயக கட்சி
தென்காசி- ஜான் பாண்டியன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்
சிவகங்கை- தேவநாதன் யாதவ், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம்