பா.ஜ.க. எதையும் மக்கள் நல சார்ந்து செய்யவில்லை. அதனால் தனது சாதனையாக எதனையும் சொல்லமுடியாமல் பொய்களை அவிழ்த்துவிட்டும் வருகிறது. அவசரஅசவரமாக கட்டி முடிக்கப்பட்ட ராமர்கோயில், நிறைவேற்றப்பட்ட சிஏஏ சட்டம் போன்றவை பா.ஜ.க. தோல்வி பயத்தில் இருப்பதையே காட்டுகிறது. பக்தி மற்றும் இஸ்லாம் வெறுப்புணர்வு மூலம் இந்துக்களின் ஓட்டை வாங்கப் பார்க்கிறது.
மத மற்றும் பிராந்திய அளவில் சாதி பொரும்பாண்மையை அரசியலை முன்னெடுத்து கலவரங்களை ஏற்படுத்துவதுதான் பா.ஜ.க.வின் அடுத்த செயல்திட்டம்.
குறிப்பாக
மார்ச் 1 அன்று பெங்களுருவில் ராமேஸ்வரம் கஃபே என்ற இடத்தில் குண்டு வெடித்தது. இதில் 9 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கை தேசிய புலானாய்வு முகமை விசாரிக்கிறது. சிசிடிவி காமிராவில் வெளியான நபரின் புகைப்படத்தை வெளியிட்டு என்ஐஏ குற்றவாளியை கண்டுபிடிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பை வேண்டி சமூக வளைதளங்களில் விளம்பரம் செய்துள்ளது.
இந்த நிலையில் பெங்களூருவில் ஒரு போராட்டத்திற்கு கலந்து கொள்ள வந்த மாநிலங்களுக்கான ஒன்றிய அமைச்சர் திருமிகு. ஷொபா, ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பை தமிழ் நாட்டோடு, தமிழர்களோடு தொடர்பு படுத்தி பேசி இருக்கிறார்.
”தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் குண்டு வைக்க பயிற்சி பெற்றுக்கொண்டு இங்கே வந்து குண்டு வைக்கின்றனர்’ என்று ராமேஸ்வரம் குண்டு வெடிப்பை தமிழர்களோடு தொடர்பு படுத்தி பேசி உள்ளார். மேலும், அவர் சமூக வளைதளத்தில், ” ஸ்டாலின் அவர்களே, உங்கள் ஆட்சியில் தமிழகம் என்ன ஆனது? உங்களின் (சிறுபான்மையினரை) திருப்திப்படுத்தும் அரசியல், இரவும் பகலும் இந்துக்கள் மற்றும் பிஜேபி தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகளை ஊக்கப்படுத்தியுள்ளது. நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு இருக்கும்போது ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளின் அடையாளங்களைக் கொண்ட குண்டுவெடிப்புகள் அடிக்கடி நடைபெறுகிறது. உங்கள் தகவலுக்காக, ராமேஸ்வரம் கஃபே வில் வெடிகுண்டு வீசியவர் உங்கள் கண்காணிப்பின் கீழ் கிருஷ்ணகிரி காடுகளில் பயிற்சி பெற்றவர்.” என்று எழுதியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு கர்நாடகாவில் வாழும் லட்சக்கணக்கான தமிழர்களுக்கு எதிராக மாற்றி தமிழர்களுக்கும், கன்னடர்களுக்கு ஒரு மோதலை உருவாக்கும் முயற்சியாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.
அதேபோல்
மார்ச் 12 அன்று உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பெண் சாமியார் ஷிப்ரா பதக் (39). இவர், தனது தந்தை, சகோதரர் உள்ளிட்ட ஆறு பேருடன் அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு பாதயாத்திரை புறப்பட்டார். இவர்கள் கடந்த 8ம் தேதி பரமக்குடி வந்து பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வு எடுத்தனர்.
பின்னர் 9ம் தேதி ராமேஸ்வரம் நோக்கி பாதயாத்திரை கிளம்பிச் சென்றனர். அப்போது, பரமக்குடி அருகே அரியனேந்தல் பகுதியில் 6 பேர் கும்பல் வழிமறித்து, ‘ராமர் தமிழகத்தில் இருக்கிறாரா’ என கேள்வி எழுப்பி தாக்குதல் நடத்தி, கார் கண்ணாடியை உடைத்ததாக உச்சிப்புளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் பரமக்குடி டிஎஸ்பி நரேஷ் (பொ) தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்ததில் ஷிப்ரா பதக் கொடுத்த புகாரில் உண்மை இல்லை எனவும் தாக்குதல் சம்பவம் எதுவுமே நடைபெறாத நிலையில், இவர்களே கார் கண்ணாடியை உடைத்ததும் தெரியவந்தது.
சமீபத்தில்
வடமாநிலத்தொழிலாளர்கள் மீது தமிழ்நாட்டில் தாக்குதல் நடைபெறுகிறது என்று பொய்யான பரப்புரையை வடமாநிலங்களில் செய்து தமிழர்களுக்கு எதிரான மனநிலையை உருவாக்க பார்த்தது. தமிழக காவல்துறை துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு அதனை முறியடித்தது.
புல்வாமா தாக்குதல், மணிப்பூர் கலவரம், ஹரியானா, உ.பி.கலவரம், டெல்லி கலவரம் என திட்டமிட்டு தேர்தல் வெற்றிக்கு மத மற்றும் பிராந்திய அளவில் சாதி பொரும்பாண்மையை அரசியலை முன்னெடுத்து கலவரங்களை ஏற்படுத்துவதுதான் பா.ஜ.க.வின் அடுத்த செயல்திட்டம். அதனை மக்கள் முறியடிக்க வேண்டும். அதற்கு ஊடகங்கள் மக்களின் பக்கம் நின்று உண்மைத் தன்மைகளை மக்களிடம் எடுத்துச்செல்ல வேண்டும்.