ஆரிய மாயை

0
393

சி.என். அண்ணாதுரை எழுதிய இந்நூலை சென்னை மாநில அரசு தடை செய்ததோடு அவருக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனையும், 700 ரூபாய் அபராதத்தையும் விதித்தது. “இச்சிறு நூல், அண்ணா அவர்கள் பல சமயங்களிலே எழுதிய கட்டுரைகளைத் தொகுத்தும், பல ஆய்வாளர்களின் நூல்களிலிருந்து பல கருத்துகளை மேற்கோள் காட்டியும் அதன் வழியாக ஆரியர்களின் வரலாற்றையும் அடக்குமுறைகளையும் தெளிவாக அனைவருக்கும் புரியும் வண்ணம் விளக்கியிருந்தார். அவருடைய இத்தகைய ஒப்பீடும் ஆரியர் திராவிடர் கலாச்சாரங்கள் வேறு வேறு என்பதை வேதகாலம் முதற்கொண்டு வேற்று நாட்டு மன்னர்கள் படையெடுப்புக் காலம் வரை திராவிடம் தனி நாடாகவே இருந்தது என்பதையும் அவர்கள் படையெடுத்து வந்து வீழ்த்தவில்லை; ஊடுருவி வீழ்த்தினார்கள் என்பதையும் தென்னிந்தியாவில் சமஸ்கிருதத்தைப் புகுத்த பன்னெடுங்காலம் தொட்டு இன்று வரை அவர்கள் முயற்சிப்பதையும் அவர் இந்நூலில் நிறுவியுள்ளார்.
அதோடு அண்ணா, பெரியார், அம்பேத்கார் உள்ளிட்ட பல்வேறு ஆய்வாளர்களுக்கும் முன்பே ஆரிய திராவிட வரையறைகள் வேதங்கள் மற்றும் ஸ்மிருதிகளில் இருப்பதையும் அண்ணா விளக்கியுள்ளார்.
ந.ரமேஷ் குமார்
பதிப்பாசிரியர்

ஆரிய மாயை

ஆசிரியர்
அறிஞர் அண்ணா

 

நிதர்சனம் பதிப்பகம்
9791103949
விலை ரூ.150/-