துடி துடித்துக்கொண்டிருக்கும் ஊடக, பத்திரிகையாளர்கள்: இறங்கி வருவாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்

0
420

கட்டிங் பார்ட்டிகளாகவே மாறிவிட்டார்கள் பெரும்பாண்மையான நிருபர்கள். சமீபத்தில் வெட்டப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் திருப்பூர் மாவட்ட நியூஸ் ஜெ, நியூஸ் 7 தொலைக்காட்சிகளின் செய்தியாளர் நேசபிரவும் அதில் விதிவிலக்கல்ல.

மாமூல் வாங்குவதில் உள்ள போட்டிதான் அவர் தாக்கப்படுவதற்கு காரணம். அதில் ஈகோவும் முக்கியக் காரணமாக இருக்கிறது. அவர் கொலை செய்யப்படுவதற்கு பின்னால் அந்த கொலையிலிருந்து முக்கிய குற்றவாளிக்கு தான் தப்பி விடலாம் என்ற கணக்கும் அப்படி மாட்டிக்கொண்டால் ஜாமீன் பெற்று பிறகு வெளியே வந்துவிடலாம் என்ற தைரியத்தை நாம் ஆராய வேண்டியிருக்கிறது.

நேசபிரபுவை கொல்ல கூலிப்படை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதுவும் பல நாட்களாக பின்தொடர்ந்திருக்கிறார்கள். காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை. ஆக காவல்துறையின் பங்கு இருப்பதும் அதாவது குற்றவாளிக்கு உடந்தையாக இருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

இதில் நேரடிச் சாட்சிகள் சொல்ல பெரும்பாலும் யாரும் துணிய மாட்டார்கள். அதனால் இறுதியில் குற்றம் நிருபிக்கப்படாது. விடுதலை கிடைத்துவிடும். கொலை செய்வது ஒரு கும்பம். பிடிபடும் அல்லது சரண்டர் ஆவது வெறொரு கும்பாக இருக்கும். இத்தகைய குற்றவாளிகளிடம் காவல்துறையின் விசாரணையும் கடுமையாக இருக்காது. முக்கிய மூல காரணமாக அந்த ஏவலாளியான குற்றவாளி தப்பிக்கவிடப்படுவார். இதுதான் இங்கே குற்றங்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம். காவல்துறையை கவனித்துவிட்டால் எந்த குற்றமும் செய்யலாம் என்ற புள்ளியை நாம் யாரும் விவாதிப்பதில்லை.

பொதுவாக குற்றங்கள் நடைபெற்றால் அது காவல்துறைக்கு புகராக செல்லும். அல்லது தகவலாக செல்லும். நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் இப்போது புகார்கள் மற்றும் தகவல்கள் பணம் பெறும் வாய்ப்பாக காவல்துறை பயன்படுத்திக்கொண்டு புகார்தாரரை அல்லது தகவல் தெரிவிப்பவரை காட்டிக் கொடுத்துவிட்டு என்ன வேண்டுமானாலும் செய்துகொள். மீண்டும் அவர்கள் காவல்நிலையத்திற்கு புகார் தெரிவிக்கவே அல்லது உயர் அதிகாரிகளிடம் புகார் செல்லவோ துணியக் கூடாது என்று குற்றவாளிகளிடம் பணம் பெற்று அந்த பொறுப்பையும் குற்றவாளிடமே ஒப்படைத்துவிடுகிறார்கள். அதுதான் மிரட்டலாகவும் அடுத்த கட்டத்திற்கு கொலையிலும் போய் முடிகிறது.

இதன் பின்னர் காவல்துறை உயர் அதிகாரிகள் அழுத்தம் இருந்தால் நேர்மையாக அதிகாரி வாய்த்தால் விசாரணை முறைப்படி நடக்கும். உண்மை குற்றவாளி தண்டிக்கப்படுவார்.
நேசப்பிரபு குற்றங்களை செய்தியாக்காமல் இருப்பதற்கு பணம் பெறுவது தற்போது வெளிச்சமாகி உள்ளது.

ஆக நிர்வாகத்தில் இருக்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் தன் கடமையை செய்ய தவறும்போது இதனை மக்களிடம் வெளிச்சம் போட்டுக்காட்டி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் சூழலை நிர்பந்தத்தை ஏற்படுத்தும் அரிய கடமைமை செய்ய வேண்டிய ஊடக, பத்திரிகையாளர்கள் அவர்களோடு கைகோர்ப்பது ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்குகிறது.
நேசபிரபு குற்றவாளிதான் என்றாலும் கொலை அதற்கு தீர்வல்ல. அதனால் உண்மை குற்றவாளி யாராக இருந்தாலும் கைது செய்யப்பட்டு வழக்கம்போல லாக்கப் டிரிட்மெண்ட் மேற்கொள்ள வேண்டும்.

காவல்துறை சீர்திருத்தத்திற்கு முதல்வர் மனமுவந்து முன்வர வேண்டும்.

ஊடக மற்றும் பத்திரிகை நிறுவனங்கள் நிருபர்கள் மற்றும் பணியாளர்கள் குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும். அரசு சார்பில் நடத்தப்படும் நிகழ்விற்கு பயணப்படி மற்றும் ஊக்கத் தொகையை உயர்த்த வேண்டும். பத்திரிகை மற்றும் ஊடக நலவாரியத்தை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அப்போதுதான் நிருபர்கள் கையேந்தாமல் மக்களின் பக்கம் நிற்க முடியும். இத்தகைய சூழலை ஏற்படுத்த அரசும் ஊடக பத்திரிகை சங்கங்களுடன் ஒரு சிறப்பு கலந்துரையாடலை மேற்கொள்ள வேண்டும்.

இதையும் தாண்டி தன் இன்னுயிரை பணையம் வைத்து, வறுமை, பெரும் சிரமத்தை தாண்டி நிருபர்கள் மூலம் செய்தி மற்றும் ஊடகத்தில் வெளியாகும் சிறிய செய்திகளை ஆராய குழு அமைத்து அதன் மீது நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும்.