கோவையில் பாஜக அண்ணாமலைக்கு எதிரான முதல் குரல்.

0
265

“மோடி ஆட்சி தொடரலாமா?” என்ற தலைப்பில், தமிழ்நாடு பொது மேடை 2024 அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கு, மாவீரன் பகத்சிங் நினைவு நாளான மார்ச் 23 ஆம் நாள் கோவையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்குத் தமிழ்நாடு பொது மேடை அமைப்பின் மாநிலச் செயற்குழுவைச் சார்ந்த
கண. குறிஞ்சி தலைமை வகித்தார். வழக்குரைஞர் முருகேசன் வரவேற்புரை நல்கினார்.

சுய ஆட்சி இந்தியாவின் தேசியத் தலைவர் கிறிஸ்டினா சாமி அவர்கள் கருத்துரை ஆற்றிய பின், உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாட்டுக்கு மோடி தொடர்ந்து இழைத்து வரும் துரோகங்களை எண்ணற்ற தரவுகளுடன் தனது விரிவான உரையில் பட்டியலிட்டு விளக்கினார்.

பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை, கோவையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் கட்டுத்தொகையைக் கூடப் பெற முடியாத அளவுக்கு மிகவும் மோசமாகத் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

தமிழ்நாடு பொது மேடையின் துணை ஒருங்கிணைப்பாளர் செந்தில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு. இராமகிருஷ்ணன் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் தொடர்ந்து விரிவுரை ஆற்றினர்.