சென்னையில் கடந்த ஆண்டு (2023) செப்டம்பர் 2ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில், சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியிருந்தார். இந்த மாநாட்டில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவும் பங்கேற்றிருந்தார். திமுக எம்.பி ராசாவும் சானாதானத்தை ஒழிக்க வேண்டும் என பேசி வருவதால் எந்த தகுதியின் அடிப்படையில், இவர்கள் பதவியில் நீடிக்கிறார்கள் என விளக்கமளிக்க உத்தரவிடக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ – வாரண்டோ வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்து முன்னணி மாநில செயலாளர் மனோகர், அமைச்சர் உதயநிதிக்கு எதிராகவும், மற்றொரு செயலாளர் கிஷோர் குமார், அமைச்சர் சேகர்பாபுவிற்கு எதிராகவும், மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் ஆ.ராசாவிற்கு எதிராகவும் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகளை நீதிபதி அனிதா சுமந்த் வழக்கை தண்டையின்றி முடிந்துவைத்து பல்வேறு விஷமத்தனமாக கருத்துகளை பதிவிட்டுள்ளார். அதனை விரைவில் நீதிமன்ற பதிவிலிருந்து நீக்க வேண்டும்.
இதுபோன்ற வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் விசாரிக்கப்படாமல் இருக்கும் வழக்கை முந்திரிக்கொட்டைத்தனமாக விசாரனைக்கு எடுத்துக்கொண்டதும் அவர் குறிப்பிட்ட பல ஆலோசனைகள் அவர் ஆர்.எஸ்.எஸ்.கும்பல் பின்னணியில் இருப்பதையும் உறுதி செய்கிறது.
தீர்ப்பில் உள்ள முரண்கள்
1.
”அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம். அது முழுமையான புரிதலுடன் இருக்க வேண்டும். அந்த கருத்துகள் எந்த ஒரு நம்பிக்கைக்கும் அழிவை ஏற்படுத்துவதாக இருக்க கூடாது. அரசியல் சட்டத்தின் அடிப்படையிலேயே கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்” – நீதிபதி அனிதா சுமந்த்
பதில் விளக்கம்: நீதிபதி அவர்கள் இதனை மனசாட்சி இருந்தால் அவர்கள் பொருத்திப்பார்க்க வேண்டும். அதோடு சனாதன இழிவுகளை நம்பிக்கை என்றும் மதிப்புமிக்கவையானதாக உருவகம் செய்வது தவறானது.
2.
சனாதன தர்மத்தை எய்ட்ஸ், கொரோனா, மலேரியா போன்ற நோய்களுடன் ஒப்பிட்டு பேசியதை பொருத்தவரை, இந்துத்துவத்தை பற்றிய புரிதல் இல்லாததையே காட்டுகிறது – நீதிபதி அனிதா சுமந்த்
பதில் விளக்கம்: சாதி, தீண்டாமை கொடுமைகளை இந்த சனாதனத்தை இந்தியாவில் கடைசி பிராமணர் இருக்கும் வரை ஒழிக்க முடியாது என்று சொன்னார் அம்பேத்கார். நீதிமன்றத்தில் நாடாளுமன்ற, பாராளுமன்ற மற்றும் சட்டசபை என அனைத்து நிர்வாகப் பரிவிலும் பா.ஜ.க. என்னும் அரசியல் பின்னணியில் இருக்கிற ஒரு குறிப்பிட்ட பிரிவினர் இன்னும் திருந்தாமல் இருக்கிறார்கள் என்பதுதான் அம்பேத்காரின் விளக்கம்.
மலேரியா, காலரா, எய்ட்ஸ், கொரோனா முற்றிலும் ஒழிக்கட்டு விட்டது. அதைப்போல இந்த கேடுகேட்ட மக்களுக்கு நீங்கு விளைவிக்கக்கூடிய தீயவற்றை அழிப்பதில் அரசியல்வாதியின் கடமை. தேவதாசி ஒழிப்பு, உடன்கட்டை ஏறுதல் போன்ற பல கூறுகள் அடங்கிய சனாதனத்தின் மிச்சம் சொச்சம் உள்ளவற்றையும் ஒழிக்க வேண்டும் என்று குறிப்பிட்டதில் தவறொன்றும் இல்லை.
அப்போது ஒழிக்கப்பட்ட அல்லது நீக்கப்பட்ட மாராப்பு அணிதல், தேவதாசி ஒழிப்பு, உடன்கட்டை ஏறுதல், குழந்தைத் திருமணம், பலதார மணத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று சொல்கிறாரா நீதிபதி.
3.
அ) சனாதனம் என்பது அழிவற்ற, நிலையான, ஒழுக்க நெறி. – நீதிபதி அனிதா சுமந்த்
பதில் விளக்கம்:
நாயக்கர்கள் ஆட்சிக் காலத்தில் பொது நீர்நிலைகளை குறிப்பிட்ட பிரிவினர் பயன்படுத்த தடை புதிதாக பிறப்பிக்கப்பட்டது. இன்றைக்கும் அது இல்லை. (ஆனால் ஊரில் செருப்பு போட்டு நடக்க மடியாத சூழல் இன்றும் நிலவுகிறது.)
திருமணம் புரிந்துக்கொள்ளவும் போரில் பங்கேற்கவும் தடை இருந்தது. கண்காணிக்க முடியாமை மற்றும் போரின் அவசர நிலை கருதி அது தளர்வு பெற்றது.
வீட்டின் பூச்சி பூச, ஐன்னல், நிலைக்கதவு, மேற்கூரை அமைக்க தடை இருந்தது. பின்னர் அது தகர்க்கப்பட்டது.
பல்லக்கில் செல்ல, இடுப்புக்கு மேலே ஆடை உடுத்த தடை இருந்தது. தேவதாசி முறை, உடன்கட்டை ஏறுதல், சிறுமிகளை கிழவன் திருமணம் முடிப்பது, ஆண்கள் பலதார மணம், கோயிலில் சில பிரிவினர் நுழையத் தடை என சனாதனம் இப்போது சொல்வது போல சொல்லிவந்தது. ஆனால் ஆங்கிலேயர்கள் இதனை பலவற்றை கொடுமை என்று சொல்லி களைந்தனர். தேவதாசி முறை, கோயல் நுழைவை நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் அரசதிகாரம் மூலம் நிறைவேற்றினர்.
இதுபோன்ற சனாதனம் பலமுறை மீறப்பட்டு வந்திருக்கிறது. இதனையும் அப்போது ஒழுங்கம், பழக்கவழக்கம், நம்பிக்கை என்றுதான் சொல்லப்பட்டது. அதனை ஆங்கிலேயர்களும் நீதிக்கட்சி ஆட்சியிலும் அதிகாரத்தில் இருந்து மானுட நேயத்துடன் நிறைவேற்றினார்கள்.
உலகம் அப்போதெல்லாம் அழியவில்லை.
இதனால் அவர்கள் சொல்வதுபோல நிலையானது, மாற்ற முடியாதது இல்லை சனாதனம் என்பதை நாம் அனைவரும் பரிந்துக்கொள்ள வேண்டும்.
ஆ) சாதியக் கொடுமைகளுக்கு சனாதனத்தை பழி கூற முடியாது. – நீதிபதி அனிதா சுமந்த்
பதில் விளக்கம்: வர்ணம் மற்றும் வர்ணக்கலப்பில் பிறந்தவர்களை சாதியாகவும் அவர்களின் கடமைகளை வரையறுத்ததாக கிருஷ்ணர் மீது பழி சுமத்தி அதை நம்ப வைத்தது பிராமணர்களே. அதற்கு ஆதாரமாக பல்வேறு விற்பன்னர்களின் கதாகாலப்சேதங்கள் ஆன்லைனில் வலம் வந்துக்கொண்டிருக்கிறது.
இனியும் பொய் சொல்லி தப்பிக்க முடியாது.
இ) பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்படவில்லை. தொழிலில் அடிப்படையில் சமூகம் சமூகமாக செயல்பட உருவாக்கப்பட்டது. – நீதிபதி அனிதா சுமந்த்
பதில் விளக்கம்: அப்படி என்றால் ஏன் நீதிமன்றத்திலும் கோயில் கருவறையிலும் பிற சமூகத்தவர்கள் ஏன் அனுமதிக்கப்படுவதில்லை. சமூகம் சமூகமாக செயல்பட உருவாக்கப்பட்டது என்று நீதிபதியே கூறுவதிலிருந்து ஒவ்வொரு சகத்திற்கு ஒவ்வொரு விதிகள் இருப்பதை அவரே ஒத்துக்கொள்கிறார்.
ஈ) சாதி கடந்த நூற்றாண்டில்தான் உருவாக்கப்பட்டது. – நீதிபதி அனிதா சுமந்த்
பதில் விளக்கம்: களப்பிர்களின் இறுதிக்காலம் மற்றும் பல்லவர்களின் உச்ச அதிகாரம் செலுத்திய கி.பி.6 ஆம் நூற்றாண்டில் தொடக்கத்தில் பிராமணர்களின் ஆதிக்கம் தலைதூக்கிய போது சாதி தொழிலின் அடிப்படையில் உருவாகி அது குழுவாகி தொடர்ந்து அவர்களின் சந்ததியினரும் அதே தொழிலை செய்யக்கூடியவர்களாக மாறி பின்பு அது நிலைப்பெற்று விட்டது. இதற்கு பிராமணர்களின் மேலாதிக்கம்தான் காரணம்.
ஆச்சாரக்கோவை தொடங்கி அதன் பிறகு மனு பலவிதமாக மாற்றம் கண்டு பல்வேறு இதிகாச புராணங்கள் வழியே சமூக ஒழுங்கு கட்டமைக்கப்பட்டு அரசின் சபைகளில் அது நிறைவேற்றப்பட்டது.
அன்று முதலில் மன்னர்களுக்கு சடங்கு செய்பவர்களாகவும், பின்பு கோயில் பணி செய்பவராகவும் பின்னர் ஊர், சபை, வாரியத் தலைவராகவும் நீதிமான்களாகவும் பின்னர் அமைச்சராகவும் தளபதியாக உயர்ந்த பிராமணர்கள் மன்னர்களுக்கு குருவாகவும் நிகழ்ந்தனர்.
இன்றைக்கு எடப்பாடி, பழனிச்சாமி போலவே நம் மன்னர்கள் அன்று நெகிழ்வுத் தன்மையோடு பெரும்பாண்மையானோர் நிகழ்ந்தனர். இந்த சனாதனம் களப்பிரர்கள் ஆட்சியின் இறுதியில் பல்லவர்கள் தொடங்க இறுதியில் நாயக்கர்கள் ஆட்சியில் உச்சம் பெற்றது.
அதன் பிறகு வெள்ளைக்காரன் ஆட்சியில் அலுவல் பணிகளில் பெரும்பாண்மையாக பிராமணர்கள் மட்டுமே இருந்தனர். இடஒதுக்கீட்டை அமல்படுத்தி வெள்ளைக்காரர்கள் அதிகாரத்தை பிரித்தார்கள். அதன் பிறகு நீதிக்கட்சி ஆட்சியில் சட்ட வடிவம் பெற்றது. அவர்களின் அதிகாரத்தில் மண் விழுந்தது.
இப்போது அந்த இடஒதுக்கீட்டையும் எதிர்க்கிறார்கள். கோயில் கருவறை நுழையும் மறுக்கிறார்கள்.
இதுபோன்ற அநிதியான தீர்ப்புகள் பிராமணர்கள் அல்லாதார்கள் வந்தால் தீர்ப்பு வழங்க வாய்ப்பு இல்லாமல் போய்விடும் என்பதால் நீதிமன்ற பணிகளில் இடஒதுக்கீட்டில் வெற்றிப் பெற்றவர்களின் ஆணையை ரத்து செய்திருக்கிறார்கள் உயர்நீதிதின்ற நிதிபதிகள்.
ஆக சனாதனத்தை தூக்கிப் பிடிக்கும் நீதிபதிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும்.
வெள்ளைக்காரர்கள் காலத்திற்கு முந்தைய காலத்தில் மன்னர்களை கைக்குள் போட்டுக்கொண்டு அவர்களே நாட்டை நிர்வாக அடுக்கிலும் நீதிவழங்கலிலும் இருந்து ஏமாற்றியதுபோல தற்போது அரசியல் அதிகாரத்திலும் நிர்வாக மற்றும் நீதித்துறையிலும் கோலோச்சிக்கொண்டு இன்று வரை ஏய்த்து வருகிறார்கள்.
இவர்களுக்கு ஒரு முடிவு கட்டுவது எப்போது…
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் ஒரு பிராமணர் நிலையிலிருந்து இறங்கி வந்து தலித் சூழலில் மனதளவில் மாறி சனாதனத்தின் படி வாழ்ந்து காட்டி நிரூபிக்கத்தயாரா?






