திமுக ஆட்சிப்பொறுப்பேற்றதும் பல திட்டங்கள் வகுக்கப்பட்டு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அதில் அங்கம் வகிக்கும் அனைத்து அங்கத்தினர்கள் குறிப்பாக கட்சிக்காரர்கள் தொடங்கி அனைத்து மட்ட பொறுப்பாளர்கள், அதிகாரிகள், டெண்டர்தாரர்கள் தொடங்கி அரசின் நிர்வாகத்தில் உள்ள அனைத்து மட்ட அலுவலர்களும் ஏய்க்கும் வேலையை தொடங்கிவிட்டனர். அதோடு அவர்கள் ஏக போக அதிகாரம் பெற்றவர்களாகவும் அவர்களை கண்காணிக்கும் தண்டனை வழங்கும் நடைமுறைகள் சொற்பமாகிவிட்டதால் அவர்களை அதிகார திமிர் அதிகமாகிவிட்டது.
தேர்தல் நெருங்குவதால் மக்களிடமிருந்து குறைகளை, கோரிக்கை தானாகப் பெற்று அனைவரையும் வேலைவாங்கி அதனை நிவர்த்தி செய்து நற்பெயரை எடுக்க வேண்டும். மக்களை சுரண்டும், அடாவடி செய்யும் நிர்வாகிகளை கண்டிக்க வேண்டும். அரசு துறை அதிகாரிகள், அலுவலர்களை தண்டிக்க வேண்டும். இல்லை என்றால்
மூன்றாவதாக ஒரு கட்சி இங்கே அதிகாரத்திற்கு வந்துவிடும் சூழல் ஏற்படும்.