தென்மாவட்டத்தில் பா.ஜ.க. வெற்றிப் பெற்றால் கலவர பூமியாக மாறும்…

0
664

தற்போது அரசியல் சூழலில் தென்மாவட்டத்தில் திராவிட ஆதரவு முக்குலத்தோர்களிள் ஆதிக்கம் செலுத்தினால் வெற்றிப் பெற்றால் பெரிய பாதிப்பு இல்லை. ஆனால் சானாதனத்தை ஏற்றுக்கொண்ட சாதிய இயக்க மற்றும் இந்த அடிப்படைவாதம் பேசும் முக்குலத்தோர்கள் வெற்றிப் பெற்றால் பள்ளர்களின் மீது ஒடுக்குமுறை அதிகரிக்கும். இப்போதே இம்மானுவேல் சேகரனாரின் பிறந்த நாளை, இறந்த நாளை பிறந்த நாள், இறந்த நாள் என்று குறிப்பிட்டே கொண்டாட வேண்டும் என்றும் தேவர் என்னும் மகானுக்கு அழைக்கப்படுவதுபோல் ஜெயந்தி என்கிற பெயரில் கொண்டாடக்கூடாது என்று குரல் கொடுத்து வருகிறார்கள்.

அவர் கிறிஸ்த்துவ சமயத்தை பின்பற்றியிருந்தார் என்பதால் இம்மானுவேல் சேகரனாருக்கு விழா எடுப்பதையுத் தடுக்கும் சூழல் கண்டிப்பாக பா.ஜ.க. அங்கு வெற்றிப்பெற்றால் கண்டிப்பாக உருவாகும். பள்ளர்களின் மீது வன்கொடுமைகளும் அதிகரிக்கும். ஆகையால் பா.ஜ.க.வை சேர்ந்தவர் தமிழகத்தில் எங்கு வெற்றி பெற்றாலும் சாதிய, மதக் கலவரத்திற்கு குறைவிருக்காது.
வீரம் மிக்க உழைப்பாளியாக இருக்கும் பள்ளர்கள் யோசித்து முடிவெடுத்து ஒட்டை பா.ஜ.க.வுக்கு போடுவதை தவிர்க்க வேண்டும்.

சமூக ரீதியில் தலித் மக்கள் என்று சொல்லக்கூடிய மக்கள் கோயில் பூசர்களாகவும், நிர்வாகியாகவும், காலத்தை கணிப்பவராகவும், மருத்துவராகவும் பின்னாளில் வரி வசூலிப்பவராகவும் இருந்துள்ளார். ஆரியர்கள் வருகைக்கு பின் அவர்களின் அதிகாரத்தை சடங்கு, பூஜை உள்ளிட்ட தொழில்களை பறித்துக்கொண்டார்கள். இன்றைக்கு பிராமணர்கள் இருக்கும் சமூக தகுதி தலித்துக்களுக்கு இருந்துள்ளது.

ஸ்டீல் (Steel F.A.-India through Ages) என்பவர் “பழங்காத்தில் இந்தியா’’ என்ற தம்முடைய நூலில் ஆதிதிராவிடர்களிடமிருந்து அடிமை வேலைகளை ஆரியர்கள் வாங்கிக் கொண்டார்கள். மதம் சம்பந்தமான காரியங்களில் ஈடுபடக்கூடாது என்று தடுத்துவிட்டார்கள். போர்க்கருவிகளைப் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர்களைக் கட்டுப்படுத்திவிட்டார்கள் என்கிறார்.

ஆக தலித்துகளான பள்ளர், பறையர் சமூகத்தவர்கள் பிராமணர்கள் என்கிற தனது சாதியின் பெயரை ஒற்றாக பெய முயற்சிக்க வேண்டும். குறைந்தபட்சம் பள்ளர் சமூகத்தவர்கள் ஏற்கனவே வேளாளர் என்ற பெயரை ஒட்டாக பெற்றது போல் பறையர்கள் பிராமணர் என்கிற பெயரை பெற தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.
தங்களின் சமூக இறுப்பையும் மரியாதையையும் இழந்துவிட்டு உரிமைகளுக்கு சேர்ந்து போராட வேண்டிய பள்ளர், பறையர் சமூகத்தவர்களை பிரித்தாளும் வேலையையும் செய்கிறது பா.ஜ.க.

ஆக பிராமணர்களின் ஆதிக்கத்தை இந்தியா முழுவதும் நிலைநிறுத்தப் பார்க்கிற பா.ஜ.க.வின் அரசியல் சதியை பள்ளர்கள் புரிந்துக்கொள்ளாமல் சதியில் சிக்கி வருகிறார்கள்.

பள்ளர் சமூகத்தவர்கள் தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம் மற்றும் பட்டியலின வெளியேற்றம் என்ற வெற்று கோரிக்கையை முன்வைத்து தமிழகத்தில் பா.ஜ.கவுக்கு ஆதரவு அளித்தனர். அதில் தேவேந்திர குல வேளாளர் அடையாளத்தை தந்து பட்டியலின வெளியேற்றத்தை தவிர்த்துவிட்டது பா.ஜ.க. பள்ளர் சமூக இயக்கங்கள் தங்களது சுய நலத்திற்காக பா.ஜ.க. ஆதரிக்க சொன்ன காரணம் மற்றும் கூற்றுப்படி பெயர் மாற்றம் மற்றும் பட்டியல் வெளியேற்றம் இரண்டையும் தந்திருக்க வேண்டும். ஆனால் பா.ஜ.க. அளித்த பெயர் மாற்றம் எந்த வித பலனையும் தராது. பெயர் மாற்றத்திற்கு பிறகு எந்த வித சமூக மாற்றமும் ஏற்படவில்லை என்பது கடந்த 5 வருடமாக நிகழ்ந்த பள்ளர் சமூகத்தினர் மீது நடத்தப்பட்ட பல்வேறு தீண்டாமை வன்கெடுமை மற்றும் அடக்குமுறை சம்பவங்களே சாட்சியாக இருக்கின்றன.

ஜான் பாண்டியன் மற்றும் கிருஷ்ணசாமி தங்களை தலித்துக்கள் என்று சொல்லக்கூடாது என்று சொல்வதற்கு பின்னால் பறையர்களை காயப்படுத்துவதோடு பள்ளர்கள் ஓட்டு திருமாவளவனுக்கு சென்றுவிடக்கூடாது என்ற நோக்கமும் முக்கிய காரணம். ஆனால் அவர்களது அடிவருடிகள் அந்தப் பொய்யை மறைக்க தங்களை கடவுளாகவும், மன்னர்கள் நிலைக்கும் பொய்யாக பல சித்தரிப்புகளை செய்து தமிழ் சமூகத்தில் ஏனைய பிற சமூகத்தினருடன் பகைமை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

பள்ளர்களும் தலித்துகள் தான் என்பதற்கான ஆதராங்கள்…

கடையர், கடைசியர் என்போர் கூலிகள் என்று (சிலம்பு10:127-131) உள்ளிட்ட பல பாடல்களும் விளக்குகின்றன. பறையர், பள்ளர்களை கடைசியர் என்றும் கைவினைஞர்கள் என்றும் இரு சமூகத்தை தேவநேயப் பாவாணர் குறிப்பிட்டுள்ளார். இதனையே பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியும் குறிப்பிட்டுள்ளார். சீவக சிந்தாமணியின் உள்ளடக்கத்தில் இது தெளிவாக தெரிகிறது.

மேலும் கிணைப்பறையே இன்று பள்ளர் கூட்டியக்கத்தில் உறுமி என்று வழங்கி வருகிறது என்கிறார் தேவநேயப் பாவாணர்.
இங்கு கருங்கை வினைஞர் என்பதற்குப் பள்ளர், பறையர் என அடியார்க்கு நல்லாரும், அரும்பத உரையாசிரியரும் பொருள் கண்டுள்ளதாக அவர்களது உரைகளிலிருந்து அறிகிறோம்.

திருச்சி மேனுவலில் எப்.ஆர்.ஹெம்மிங்வே கடையர் அல்லது கொட்டுக்காரர் என்றும் பள்ளக்கூத்தாடிகள் இருந்ததையும் குறிப்பிடுகிறார்.

நாவலோ நாவலென நாடறிய முறையிட்ட
ஏவலோர் போர்க்களத்தில் எதிர்நிற்பர்
என்னும் பகுதி ஏரெழுபதுள்(59:1-2) இடம்பெற்றுள்ளது. அதாவது, அறுவடைப்பணி முடிந்ததும் அதில் உழைப்பைச் செலுத்திய பெருமக்கள், கூலியைப் பெறுவதற்காகக் களத்தில், நிலக்கிழார்களின் முன்னால் நின்றுகொண்டிருப்பர் என்னும் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு உழைக்கும் மக்கள், ‘ஏவலோர்’ எனக் குறிக்கப்பட்டுள்ளமை நோக்கத்தக்கது.

வயல் வேலைகளைக் கூலிக்குச் செய்பவராகவும் பண்யைடிமைகளாகவும் அவர்களின் தலைவன் பண்ணை விசாரிப்பானாகவும் இருந்து நிலவுடையாளருக்கு உற்பத்தினை வசூல் செய்து கொடுத்துள்ளதும் பதிவாகியுள்ளது.

சிற்றூர், பேரூர், முதூர் என்ற வரையறைக்குள் உழகுடிகள் ஊரின் நடுவே இல்லாமல் வெளிப்புறத்தில் வசித்துள்ளனர் என்பதற்கு பல சங்கப் பாடல்கள் இருக்கின்றன.
புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை என்ற ஊரின் சிவன்கோவிலில் கி.பி.1228 இல் பாண்டியர் காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டில் உயர்சாதியினரைத் தனியாகவும் குடிமக்கள் என்று மற்றவர்களைத் தனியாகவும் பெயர் குறிப்பிட்டு எழுதியுள்ளனர்.

13-ஆம் நூற்றாண்டு கண்டதேவி ஹிஜிரா கல்வெட்டு சாதிகள் பற்றிப் பேசுகிறது. அதுபோல அதே நூற்றாண்டைச் சேர்ந்த திருவரங்கம் கல்வெட்டு (434) நிலவுடமையாளர் மற்றும் உழுகுடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேரா.தி.சு.நடராஜன் அவர்கள் குறிப்பிடும்போது…
தொல்காப்பியம் உள்ளிட்ட சங்கநூல்கள் உழைக்கும் மக்களைத் தாழ்த்தப்பட்டவர்களாகச் சித்திரிக்கின்றன. இழிசினன் (புறநானூறு, 82,287,289), இழிபிறப்பாளன், புலையன் (புறம்,360), புலைத்தி (புறம், 259,311) முதலிய சொற்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. துடியெனும் இசைக்கருவியை இசைக்கிறவனைப் புறநானூறு (170) சித்திரிக்கின்றது.

‘இழி பிறப்பாளன் கருங்கை சிவப்ப
வலி துரந்து சிலைக்கும் வன்கட் கடுந்துடி.’
இந்தப் பாடலுக்கு அப்படியே பொருள் தருவது திறனாய்வாகாது. அவனுடைய கைகளைக் ‘கருங்கை’ என்று அடைகொடுத்துச் சொல்லுவதையும், கைகள் ‘சிவப்ப’ என்று சிறப்பித்துச் சொல்லப்படுவதன் காரணத்தையும், ‘துடி’ என்ற இசைக்கருவிக்குக் கொடுக்கின்ற அடைமொழிக்குரிய அவசியத்தையும் சொல்லவேண்டும். அப்போதுதான் அது தலித்திய வாழ்க்கையைக் காட்டும் திறனாய்வாக ஆகமுடியும்.

பெரியபுராணத்தில் திருநீல கண்ட யாழ்ப்பாணர், திண்ணன், திருநாளைப் போவார் எனும் நந்தன் ஆகிய மாந்தர்கள் நாயன்மார்களாக வருகிறார்கள். இவர்களின் சித்திரங்கள் வரலாற்றுப் பின்புலங்களோடும் காரண காரியங்களோடும் ஆராயப்படுகின்ற போது, தலித்தியத் திறனாய்வின் பயன் சிறப்படையும். இப்படிப் பழைய இலக்கியங்கள் சிலவற்றில் ‘இழிசினர்’ அல்லது ஒடுக்கப்பட்டோர் வருகின்றனர். பிற்காலத்திய பள்ளு இலக்கியங்களில், தலித்துகள் (பள்ளர்) தலைமை இடம் பெறுகின்றனர். ஆனால் இவர்களை அல்லது இவர்களின் உழைப்புகளைப் போற்றுவதற்காக இல்லை; அவர்கள் பெரிய பண்ணையார்களுக்கு விசுவாசமாக நடந்துகொள்ளவேண்டும் என்ற உட்குறிப்பு இவற்றிலே உண்டு.

பள்ளு இலக்கியம் பற்றித் திறனாய்வாளர் கோ. கேசவன் கூறும் கருத்து தலித்தியத் திறனாய்வுக்கு முன்னோடியாக அமைகிறது என்கிறார்.

வெங்கட் சாமிநாதன் அவர்கள் குறிப்பிடும்போது…
பள்ளர் சமூகத்தில் பிறந்த திருநாளைப் போவார் என்று சிறப்பிக்கப்படும் நந்தனாரும் ஒருவர். நந்தனார் கோயில் தாளவாத்தியங்களுக்கு தேவையான பதனிடப்பட்ட தோல், நரம்பு, கோரோஜனை முதலிய பொருட்களைத் தயாரித்து அளிக்கும் வேலையைச் செய்து வந்தவர். (தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 1, வெங்கட் சாமிநாதன் December 31, 2010)

பேரா. ஆ. சிவசுப்ரமணியன் அவர்கள் குறிப்பிடும்போது…
பள்ளன் விருத்தி(தெ.இ.க.8 க.எ.151) என்றும், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டத்திலுள்ள காரையூர் திருமாங்கனி ஈஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டொன்று ஊரைப்பாதுகாக்கும் பணியில் பறையர் ஒருவர் நியமிக்கப்பட்டதை குறிப்பிடுகிறது. ஆதனமழகியான் என்பவருக்கு காரையூர்ப் பறையன் என்றுபட்டம் கட்டி பாதுகாவல் உரிமையை ஊரார் வழங்கியுள்ளனர். இதற்காக அவரிடமிருந்து நூற்றுப் பத்துப் பணம் பெற்றுள்ளனர். இக்காவல்பணிக்காக இடையர்கள் நெய்யும், வலையர் முயலும், பள்ளர் பறையர் கோழியும் அவருக்கு வழங்கவேண்டுமென்று ஊரவர்கள் முடிவுசெய்துள்ளனர். (IPS 843)

17ம் நூற்றாண்டு செப்பேடு (21-5-1696) பின்வரும் மூன்று செய்திகளை நமக்குஉணர்த்துகிறது. 1. புதிய ஊர்களை வேளாண்மை செய்ய ஏற்கனவே இருந்த தங்கள் உடைமையான அம்பலத்தை விற்கும்படி குடும்பர்கள் மூவருக்கும்சேதுபதி மன்னன் கட்டளையிட்டுள்ளான். 2. புதிய ஊரில் வேளாண்மை செய்ய உழவர்களான பள்ளர்களும் கைவினைத் தொழில் செய்ய கம்மாளர்களும் குடியேற்றப்பட்டுள்ளனர். 3. கம்மாளர்களுக்கு வழங்கியதை விட குறைவான பணமே பள்ளர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் இவர்கள் நிலத்துடன் கொடையாக வழங்கப்பட்டுள்ளனர். அல்லது விற்பனை செய்யப்பட்டுள்ளனர் என்பதனை சேதுபதிசெப்பேடுகளில் இடம் பெறும் பின்வரும் வரிகள் உணர்த்துகின்றன. பள்ளுப்பறை சகலமும் சர்வ மானியமாக (இராசு.1994;208) பள்ளுப்பறை இறை, வரி ,ஊழியம்….ஆண்டனுபவித்துக் கொள்ளவும் (மேலது, 242) பள்ளுப்பறை…சந்திராக்கமாக அனுபவிச்சிக் கொள்வாராகவும் (மேலது, 451) பள்ளுப்பறை சகலமும் ஆண்டு கொள்வது (மேலது, 528)

திருமயம் வட்டம் மேலத்தானையம் மாரியம்மன் கோவிலுக்கு முன்பாக இருக்கும் கல்தூணில் பொறிக்கப்பட்ட கல்வெட்டொன்றுவீரசின்னு நாயக்கர் என்ற குறுநில மன்னன் காலத்தில் விருதுகள் தொடர்பாக பள்ளருக்கும் பறையருக்கும் இடையே நிகழ்ந்த பூசலைத்தெரிவிக்கிறது. வெள்ளானை, வாழை, கரும்பு ஆகிய விருதுகள் தங்களுக்கு மட்டுமே உரியதென்றும் பறையர்களுக்கு இல்லையென்றும்கூறி, கொதிக்கும் நெய்யில் பள்ளர் கைமுக்கினராம். அவர்கள் கை சுடாமையால் இவ்விருதுகள் பள்ளருக்கு மட்டுமே உரியதென்று தீர்ப்புவழங்கப்பட்டதாக இக்கல்வெட்டு தெரிவிக்கிறது (IPS 929).

மேளமடிப்பது தொடர்பாக பள்ளர், பறையர் என்ற இருவகுப்பினருக்கும் இடையே நடந்த பிணக்கில் உடன்பாடு ஏற்பட்டதாக திருமயம்வட்டம் பேரையூர் நாகநாத சுவாமி கோவில் கல்வெட்டொன்று குறிப்பிடுகிறது(IPS (IPS: Inscripts of Pudukkottai State) 976). என்கிறார் பேரா. ஆ. சிவசுப்ரமணியன்.

எம்.சி.ராஜா அவர்கள் குறிப்பிடும்போது
தமிழ் மாவட்டங்களில் பறையர், பள்ளர், வள்ளுவர் என்றும், கிழக்குக் கரையிலுள்ள தெலுங்கு மாவட்டங்களில் மாலா, மாதிகா என்றும், மேற்குக் கரையில் செருமார், ஹோலியர் என்றும் கீழ்ச்சாதி மக்களென்றும் அழைக்கப்படுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

‘தென்னிந்திய மானிட இன இயல்’ என்ற நூலில் எட்கர் தர்ஸ்டன் அன்றைய அடிமைகள் பற்றி எழுதுகிறார்,” 1871 இல் சென்னை மாநில மக்கள் கணக்கெடுப்பு கமிசனர் அடிமைத்தனம் பற்றிய தனது குறிப்பில் பின்வருமாறு கூறியுள்ளார். பள்ளர்கள் பண்ணை வேலை மட்டுமே பார்ப்பவர்கள். இவர்கள் குடியிருப்புக்காக எங்கும் தனியிடம் ஒதுக்கப்பட்டுப் பள்ளிச்சேரி என வழங்கப்படுகிறது. பள்ளர் சாதிப் பெண்கள் இடுப்புக்கு மேல் உடலை மறைப்பதில்லை என்றிருந்த அடிமைக் காலத்தின் வழக்கம் இன்று வழக்கொழிந்தாகி விட்டது.” என்ற பல செய்திகளை எட்கர் தர்ஸ்டன் பதிவு செய்கிறார். தஞ்சை மாவட்டத்தில் பள்ளர் இனப் பெண்கள் மேலாடை அணியும் உரிமை இல்லை என்பதையும் தர்ஸ்டன் பதிவு செய்கிறார்.
தமிழக ஆய்வரண் பெங்களூர் குணா தனது இந்திய தேசியமும் திராவிட தேசியமும் என்ற நூலில் “1843 ஆம் ஆண்டில் வெள்ளையராட்சி பண்ணையடிமை ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இதனால் பள்ளரும் பறையரும் ‘பண்ணையடிமைகள்’ என்றழைக்கப்படுவது போய் பண்ணையாட்கள் என்று பெயர் சூட்டப்பெற்றனர் என்கிறார்.

“தமிழகத்தில் காலனியமும் வேளாண் குடிகளும்“ என்ற நூலில் அடிமை விவசாயக் கூலிகள்” (Agrestic Servidute) பற்றி ஏ.கே. காளிமுத்து சுட்டுகிறார், “பொதுவாக தமிழகச் சாதியக் கட்டமைப்பில் தாழ்த்தப்பட்ட சாதியினரான பள்ளர், பறையர்கள் அடிமை விவசாயக் கூலிகளாக இருந்தனர். இவ்வடிமைகள் ‘பண்ணையாட்கள்’ அல்லது ‘படியாட்கள்’ என்றழைகப்பட்டனர். கிராமங்களில் உள்ள நிலங்கள் ‘மிராசி’ என்ற நிலப்பிரப்புக்களின் கூட்டுக்குழுவிற்குச் சொந்தமாக இருந்தமையால் அந்நிலங்களில் பயிர் செய்யும் பள்ளர் பறையர் என்ற அடிமைச் சாதியினர் அக்குழுவிற்கே சொந்தமாவர் என்கிறார்.

1819 ஆம் ஆண்டு அறிக்கையில் மாவட்ட ஆட்சியர் திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றைய மாவட்டங்களில் ‘பள்ளர்கள்’ கடுமையாக நடத்தப்படுவதைப்போல் தனது மாவட்டத்தில் இல்லையென்றும் என்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் வேளாண்மைக்குப் பயன்படும் நீர்நிலைகளைப் பராமரிக்கும் பணியில் பண்ணையடிமைகள் நிலவுடைமையாளர்களால் ஈடுபடுத்தப்பட்டனர். இது குறித்து அம்மாவட்டத்தின் ஆட்சித்தலைவர் 1830 ஆம் ஆண்டில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்,

மிராசுதாரர்களின் அடிமைகளாகிய பள்ளர்களே பெரும்பாலும் இந்த வேலைக்கு அமர்த்தப்பட்டனர்”.
திருநெல்வேலியில் 1835-36ல் நிலவுடையாளருக்கு 500 அடிமைகள் இருந்தார்கள்.

பண்ணையடிமைகள் தங்களை விடுவித்துக் கொள்ள விரும்பினால் அப்போதைய நிலவரப்படி உள்ள அடிமையின் விலையைவிட இரண்டு மடங்கு கொடுக்க வேண்டும்.
1800 ல் தஞ்சை மாவட்ட கலெக்டர் பள்ளர், பறையர் குல அடிமைகள் அம்மாவட்டத்திலிருந்து வெளியேறி வேறு நிலவுடைமையாளர்களிடம் பணிபுரிவதைத் தடுத்து உத்தரவிட்டுள்ளனர்.
1828 ல் பிராமண நிலவுடைமையாளரிடம் பணிபுரிந்த சில பள்ளர்குல அடிமைகள் திருச்சி மாவட்டத்திலிருந்து கோவை மாவட்டத்திற்கு வந்துவிட்டனர். அவர்கள் அப்பிராமண நிலக்கிழாரிடம் திருப்பி வருவதற்கு கட்டுப்பட்டவர்கள் என திருச்சி கலெக்டர் கோவை கலெக்டருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஆக பள்ளர்கள் சமூக அடுக்கில் ஒடுக்குமுறையை பறையர்களுடன் சேர்ந்து எதிர்கொண்டனர் என்பதும் 1930 வாக்கில் கோயில் நுழைவு போராட்டத்தில் முக்குலத்தோர்களால் கடுமையாக தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட வரலாற்றையும் மறைக்க முடியாது.

ஆக தலித் என்ற கோட்பாட்டின் படி கிறிஸ்தவ முஸ்லீம் போன்ற சிறுபான்மை மக்களோடு பறையர் சமூகத்தவருடன் இணைந்து பள்ளர்கள் இணைந்து தொடர்ந்து தங்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிர்கொள்ள ஒன்றுபட்டு இந்திய தேசத்தை காக்க வேண்டும்.