அக்னிப்புரட்சி பத்திரிகையின் ஆசிரியர் நாராயணசாமி அவர்களை சமூக விரோதிகள் கொலை செய்யும் நோக்கத்துடன் வெட்டி உள்ளனர். இந்த சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். அதுபோல காவல்துறையை பயன்படுத்தியும் பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்படும் கைதுகள் மற்றும் லாக்அப் சித்ரவதைகளையும் தமிழக அரசு தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும். ஆட்சியாளர்கள் பெரும் பணக்கரர்கள் மட்டுமே பத்திரிகை ஊடக துறையில் கோலேச்ச வேண்டும் என்ற நோக்கி அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்பல கெடுபிடிக்களை செய்து வருவதற்கு பின்னால் உள்ள சதிகள் தற்போது வேறு வேறு ரூபங்களில் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. பத்திரிகை மற்றும் ஊடகவாதிகள் இதனை புரிந்து ஒற்றுமையாக இருந்து இந்த சதிகளை முறியடிக்க வேண்டும்.
