பிடிஆர் எனும் சிந்தாந்தம்

0
469

பழனிவேல் தியாகராஜன் மிகப்பெரிய சம்பளத்தையும் வெளிநாட்டு வாழ்க்கையையும் விட்டு திராவிட இயக்கம், சிந்தாந்தம் சார்ந்து செயல்படவும் குடும்பப் பாரம்பரிய பணியை தொடரவும் தம் மண்சார்ந்து மக்கள் நலன் சார்ந்து இயங்கவே தமிழ்நாட்டிற்கு வந்தாரே அன்றி அதிகார மிக்க பணிக்காகவோ அல்லது எம்.எல்.ஏ., அமைச்சர் போன்ற பதிவிக்கோ ஆசைப்பட்டவர்கள் இல்லை என்பதை அவருடைய செயல்பாட்டை வைத்து மக்கள் புரிந்துக்கொண்டுள்ளனர். நிதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டபோதோ அல்லது தற்போது துறை மாற்றம் செய்யப்பட்டபோதோ அல்லது கட்சியில் ஐடி விங் பணி வழங்கப்பட்டப்போதோ எந்த வித உணர்ச்சி மிகுதியான அல்லது அதிருப்தி என்றொரு செய்கையையோ பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் காட்டவில்லை என்பதிலிருந்து அவர் அரசியல் சூழலையும் கூட்டு முயற்சியில் உண்டாகும் சிக்கல்களையும் நன்கு உணர்ந்திருக்கிறார்.
அவர் எத்தப் பணியை கொடுத்தாலும் எந்த பதவியில் அவரை அமர வைத்தாலும் அதில் நேர்மையாகவும் உறுதியோடு நிறை குறைகளை கண்டுணர்ந்து புரிந்து தெளிந்து சிறப்பாக செயல்பட்டு முத்திரை பதிக்கும் இயல்பு கொண்டவர் தியாகராஜன்.

வெளிநாட்டில் பெரும் நிறுவனத்தில் பணியாற்றியபோதும் தற்போது கடந்த சட்டமன்ற மற்றும் அமைச்சர் பணி மட்டுமல்லாமல் கட்சிப்பணியிலும் எந்த முயற்சியை எடுத்தாலும் மாற்றங்கள் முன்னெடுத்தாலும் தடங்கள் ஏற்படும் என்றும் தலைமையின் முழு தலையீடும் ஆதரவும் இருந்தால் மட்டுமே ஒரு புள்ளியை கூட வைக்கமுடியும் என்கிற உண்மையை அவரே சொல்லியிருக்கிறார். இந்த எதார்த்தத்தை அவர் புரிந்து வைத்துள்ளார் என்பது தெள்ளத்தெளிவாகிறது.

மாபெரும் இயக்கம் மற்றும் அமைப்பின் கொள்கை மற்றும் அங்கம் வகிப்பவர்கள் அனைவரின் ஒருங்கிணைப்பிற்காக அவர் நயந்து போகிறாரே தவிர எந்த விதமாக ஆசையும் எதிர்பார்ப்பும் அவருக்கு இல்லை. இயல்பாக அச்சம் கொள்ளும் குணமும் அவருக்கு இல்லை.

எல்லோரும் மனிதர்கள்தான். எல்லோரிடமும் நிறை குறைகள் இருக்கும். அதையும் தாண்டி அனைத்து தரப்பு மற்றும் அனைத்து விதமானவர்களின் பங்களிப்பையும் ஒருங்கிணைப்பையும் ஏற்றே செல்ல வேண்டும் என்ற புரிதலை கொண்டவர்.

பிடிஆர் புத்தனாகவோ அல்லது ஏசுவாகவே இந்த மண்ணில் பிறந்தவரல்ல. எல்லோரையும் மனமாற்றம் செய்ய வைத்துவிட்டு பின்பு திருந்தி விட்டு எந்த பணியையும் அவரால் செய்யமுடியாது. அந்தளவிற்கு சுப்ரீம் பவரை கடவுள் அவருக்கு வழங்கவில்லை.

ஏன்… புத்தர், அம்பேத்கார், பெரியார்… பல கடவுள் அவதாரங்கள் பிறந்தும் கூட இங்கே எல்லோரும் திருத்தி தூய்மையான வாழ்க்கையை பின்பற்ற வில்லை. நல்லொழுக்கங்களை கடைப்பிக்கவில்லை. இந்த காலக்கட்டத்தில்தான் பிடிஆரும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார். வாழ்க்கையில் தான் மட்டும் நல்லவனாக வாழ இந்த சமூகம் எப்படி அனுமதிக்கும். அதுவே பெரிய ஒரு குற்றமாகத்தானே இந்த உலகம் கருதும். மீறி அப்படி வாழ முயற்சி செய்தால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டும். அந்த சூழல்தான் தற்போது ஏற்பட்டிருக்கிறது.

ஆன்மிகத்தின் போர்வையில் வலது வலது சாரி பின்புலத்தில் இந்திவெங்கும் பிரபல சாமியார் ஐக்கி வாசுதேவின் கோயில் அடிமை நிறுத்து என்று முன்னெடுப்பை ஒரு சில பேட்டிகளில் முறியடித்து இந்தியவெங்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி அந்தத் திட்டத்தை முடக்கினார் பி.டி.ஆர்.தியாகராஜன். திராவிட ஆரியர் தியரி குறித்தும் பாஜக பெருமை பீற்றிக்
கொண்டிருந்த பொருளாதார வளர்ச்சி மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு சம்பந்தமாக குறைகளை போலியான கற்பிதங்களை பொதுவெளியில் போட்டுடைத்து இந்தியவெங்கும் ஊடக நேர்காணல்கள் மூலம் பா.ஜ.கவின் பொய்களை அம்பலப்படுத்தினார்.

எதிரில் இருப்பது யார் என்பது பற்றியும் அதனால் ஏற்படும் எதிர்வினைகளையும் பற்றிக் கவலைப்படாமல் தான் அறிந்த பாதையில் கடமை, கண்ணியம் கட்டுப்பாட்டோடு இயல்பாக கொண்ட நேர்மை, மக்கள் நலன் என்று புறப்பட்டுக் போய்க்கொண்டிருக்கும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு மக்கள் ஆதரவு முழுவதுமாக இருக்கிறது. அவரை விமர்சிப்பவர்கள் உண்மைக்கும், சமூக நீதிக்கு எதிராகவும், மக்கள்-சேத நலனுக்கு துரோகம் இழைக்கிறார்கள் என்பதே பொருள்.

ஆனால் இந்த மட்டமான செயலை அரசியலில் இது சகஜம் என்று நாம் கடந்து விடக்கூடாது.

ஒட்டுமொத்த தமிழகமும் அவரை பின்பற்றத் தேவையில்லை. அவரை வணங்கத்தேவையில்லை. ஆனால் பல வாய்ப்புகள் இருந்தும் நேர்மை என்கிற குணநலன்களோடு இயல்பாக பிடிஆர் பழனிவேல் தியாகரஜன் போன்றவர்கள் பணியாற்றும் ஒரு சூழலை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்றும் மக்களுக்கு அந்த பொறுப்பு இருக்கிறது என்பதை நான் உணர்த்துகிறேன்.
இப்படியான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் துறைரீதியான கட்சிரீதியான பணிகளில் அவருடைய செயல்பாடுகளையும் அதனால் ஏற்பட்ட பலன்களையும் அவருடைய குடும்ப பின்னனியையும் இந்த தொடர் மூலம் மக்களிடம் கொண்டு செல்கிறேன்…

ந.ரமேஷ் குமார்

 

பி.டி.ஆரின் குடும்பப் பின்னனியை நாம் ஏன் பேச வேண்டும்

ஆதிக்க சாதியாகவும் பெரும் நிலக்கிழாராகவும் இருந்த பிரிவில் அதுவும் பிராமணச் சார்பில்லாமல் ஏனைய சமூக மக்களுக்காகவும் பொதுக்கொள்கையுடன் தன் வாழ்நாளை மட்டுமின்றி உடல் பொருள் ஆவி அனைத்தையும் கூடவே செல்வத்தையும் செலவிட்டு இந்த தமிழ்ச் சமூக முன்னேற்றத்திற்கு உயர்விற்கு பெரும் பங்களிப்புச் செய்துள்ளனர் அவர்களின் குடும்பத்தினர். அதற்காகத்தான் அதனை பொதுவெளியில் திரும்பத் திரும்ப பேச வேண்டியிருக்கிறது. அப்போதுதான் அவர்களை போன்று பொது நோக்கோடு பலரும் இந்த குடும்பத்தினரை முன்னுதாரனமாக கொண்டு வாழத் தலைப்படுவார்கள். அந்த எண்ணத்தை இன்றைய சமகால தலைவர்களுக்கும் இளைய தலைமுறையினரும் விதைக்கும் நோக்கமின்றி வேறில்லை.
தளவாய் அரியநாதர் மன்னர் இராயர் உத்தரவுப்படி பாண்டியனுக்கு ஆதரவாக சோழர்களை தோற்கடித்து பாண்டியர்களுக்கு ராஜ்யத்தை வழங்க சென்ற கொட்டியம் நாமக நாயக்கர் வென்ற பிறகு தானே அரசாளத் தொடங்கினார். இதன்பொருட்டு தாத்தாவான இராயர் தன்னுடைய பேரனான விசுவநாத நாயக்கருடன் தளவாய் அரியநாதர் தலைமையில் பெரும்படை திரட்டி அடிக்கடி கலகம் விளைந்து வந்த மதுரை ராஜ்ஜியத்தை கைப்பற்றி சீர்படுத்தினார் என்றும் மெக்கன்ஜி சுவடிக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
நிர்வாக வசதிக்காக பல்வேறு பாளையங்களாகப் பிரித்து வழகியதால் பாளையக்காரர்கள் குலதெய்வமாக தளவாய் அரியநாத முதலியாரை கொண்டாடியதாக ஆங்கிலேயே ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இராமராஜர் மன்னன் உத்தரவுப்படி நாட்டை மீட்டு சுவிகார புத்திரராக நீயே நாட்டை ஆள வேண்டும் என்று அரியநாதரிடம் கூறி இறந்துபோனார். ஆனால் வென்ற அரியநாதர் தான் ஆட்சிபுரியாமல் இராமராஜரின் தம்பியான திம்மராஜருக்கே வழங்கினார். திருச்சி, மதுரை, திருநெல்வேலி போன்ற நகரங்களை விரிவாக்கினார் என்றும் திருநெல்வேலி, மதுரை கோயிலில் ஆயிரங்களால் மண்டபத்தை கட்டினார் என்றும் பல குறிப்புகள் உள்ளன.

அரியநாதரின் மகன் காளத்திநாத முதலியார், அவருக்கு பின் நவினா முதலியாரும் வீரராகவ முதலியாரும் அவர்களுக்குப் பின் கடந்தை முதலியார் என்று அவரது வம்சாவளியினர் நாயக்க மன்னர்களிர் ஆட்சியில் உயர் பதவிகளில் இருந்துள்ளனர். குடும்பப் பிரச்சனை, அரியனை ஏறுவதில் சகோதரர்களுக்கு இடையே எழும் பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை தீர்த்து வைத்துள்ளனர்.

இதுபோன்ற பலவரலாற்று பெருமைகள் திருநெல்வேலி சரிதம், பாபநாசத் தலபுராணம், திருக்குற்றாலக் குறவஞ்சி,வருண சிந்தாமணி போன்ற பல நூல்கள் இருக்கின்றன. இப்படியாப்பட்ட வம்சத்தில் பிறந்தவர்தான் பிடி ராஜன்.

பி.டி.ராஜன்
பொன்னம்பலம் தியாகராஜன் எனும் பி.டி.ராஜன் உத்தமபாளையம் பொன்னம்பல முதலியார் – மீனாட்சி அம்மாள் ஆகியோரின் மகனாக பிறந்தார். இளம் வயதில் பெற்றோரை இழந்ததால் அவரை சித்தப்பா சுப்ரமணிய முதலியார்தான் வளர்த்து படிக்கவைத்து ஆளாக்கினார்.

இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் நகரிலுள்ள கல்லூரியில் வரலாறும் பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று பட்டம் வாங்கிய ராஜன் தனது சித்தப்பா ஆசைப்பட்ட ஐசிஎஸ் படிப்பை விட்டு தனத தேர்வான வழக்கறிஞர் படிப்பான பாரீஸ்டர் படித்து தமிழகம் திரும்பினார்.

1919ல் மதுரை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு செய்த ராஜன், வழக்கறிஞராக பணியாற்றிய சமயத்தில் கட்சியிலும் ஈடுபடலானார்.
நீதிக்கட்சியின் சார்பில் கம்பம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1930 முதல் 1937 வரை சென்னை மாகாணத்தில் அமைந்த நீதிக்கட்சி அமைச்சரவைகளில் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்தார் ராஜன்.

1937-ல் தோல்வியைத் தழுவும்வரை அவர் சென்னை மாகாண சட்டமன்ற கவுன்சில் உறுப்பினராகச் செயல்பட்டுள்ளார்.
1936ல் முதலமைச்சராக இருந்த பொப்பிலி அரசர், ஐரோப்பிய சுற்றுப்பயணம் சென்றபோது 4 மாதங்களுக்கு மேல் சென்னை மாகாணத்தின் முதல்வராகவும் இருந்தார் பி.டி.ராஜன்,
அரசியலில் தீவிரமாக ஈடுபட்டாலும் நேரம் காலம் பார்க்காமல் கடினமாக வழக்கறிஞர் பணியையும் திறம்பட மேற்கொண்டு முன்னனி வழக்கறிஞராக திகழ்ந்தார்.
அறநிலையத்துறை உருவாக்கத்தில் பங்கு வதித்த பி.டி.ஆர், சபரிமலை சிலையை பிரதிஷ்டை செய்து ஊர்வலாமாக பல ஊர்களுக்கு எடுத்துச் சென்று ஐயப்பன் வழிபாட்டை
புகழ்பெறச் செய்தார். சிதிலமடைந்திருந்த சென்னை வடபழனி முருகன் கோயிலை, ரூ.30 ஆயிரம் திரட்டி மறு நிர்மாணம் செய்ததில் இவரின் பங்கு முக்கியமானது.
திருவாதவூர், மதுரை மீனாட்சியம்மன், அழகர் கோயில் உட்பட ஏராளமான கோயில்களின் திருப்பணிகளை செய்யவும் பூஜைகளுக்கு பலவழிகளிலும் முன்நின்று உதவியுள்ளார்.
மதுரை, அண்ணாமலை பல்கலை உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்தவர். இறுதிவரை நீதிக்கட்சியை நடத்தியவர்.
மதுரை தமிழ்ச்சங்கத்தின் துணைத் தலைவராக இருந்த அவர், அச்சங்கத்தின் பொன்விழாசிறப்பாக நடத்தியதோடு மலேசியாவில் நடைபெற்ற முதல் உலகத்தமிழ் மாநாட்டில் மதுரை தமிழ்ச்சங்கத்தின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார். இதுபோன்ற பல விழாக்களில் கலந்துகொண்டு பங்களிப்பு செய்ததால் தமிழ்வேள் என்ற சிறப்புப் பட்டத்தையும் பெற்றார்.ஆங்கிலேயர்களிடமிருந்து பெருமைக்குரிய சர் பட்டத்தை பெற்றவர். பின்னால் திராவிட பெரியாரின் கோரிக்கையை ஏற்று அந்த பட்டத்தை திருப்பி அளித்தார்.
ஆங்கிலேயருக்கு ஆதரவாக செயல்பட்டதாக நீதிக்கட்சி தலைவர்களை பலரும் விமர்சிக்கும் இந்த நேரத்தில் சென்னையில் ஒரு முறை நடைபெற்ற ஆங்கிலேயர்களின் நிகழ்ச்சியொன்றில்
‘‘இந்தியா ஒரு சுதந்திர நாடாக பெருமையுடன் வாழ வேண்டும். மக்களாட்சி இங்கு வர வேண்டும். 6 ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு சில வெள்ளைக்காரர்களின் விருப்பப்படி இந்தியா இயங்க முடியாது – இயங்கவும் கூடாது…’’ என்று பிடிராஜன் ராஜன் பேசியிருக்கிறார்.
எம்.டி. சுப்பிரமணிய முதலியார்
எம்.டி. சுப்பிரமணிய முதலியார் பி.டி. ராஜனின் சித்தப்பா. அதாவது பி.டி. ராஜனின் தந்தை பொன்னம்பலத்தின் சகோதரர்.உத்தமபாளையத்தைச் சேர்ந்த திரு எம்.டி.சுப்பிரமணிய முதலியார் திராவிட சங்கத்தின் உறுப்பினராகவும், பிராமணரல்லாத இயக்கத்தின் ஆரம்பகால தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். மேலும் பனகல் ராஜா போன்ற ஆரம்பகால முதல்வர்கள் இவரிடன் ஆலோசனைக்கேட்டே செயல்பட்டதாகவும் முக்கிய முடிவுகளை எடுக்கும் சிங் கேக்கராக இருந்தார்.
உத்தம பாளையம் முதலியார் என்கின்ற மதுரை ஸ்ரீமான் எம்.டி. சுப்பிரமணிய முதலியார் மரணத்தையொட்டி பெரியாரின் இறங்கல் செய்தி (குடி அரசு – தலையங்கம் – 25.03.1928) ஒன்றே அவரது பெருமைக்கு சான்றாக அமையும்.
திருவாளர் முதலியார் அவர்கள் தமிழ்நாட்டின் பழங்குடி மக்களுள் முதன்மையானவர். தென்னாட்டில் நாயக்கர்
அரசாங்கம் ஏற்பட்டிருந்த காலத்தில் அவருக்கு பிரதம மந்திரிகளில் ஒருவராகிய திரு. அரியநாயக முதலியாரின்
சந்ததியில் வந்தவர். மதுரை ஜில்லாவிலுள்ள பெரிய மிராசுதார்களில் முக்கியமானவர். பாரம்பரியமாகவே செல்வமும் செல்வாக்கும் பெற்ற குடும்பத்தவர். அரசாங்கத்தாராலும் சுதேச மன்னர்களாலும் புராதன ஜமீன்களாலும் மிகுதியும் போற்றப்பட்டவர்.
நமது மன்னராகிய ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்தியவர்களின் முடிசூட்டு வைபவத்திற்கு அழைக்கப்பட்டு இங்கிலாந்து சென்றவர். இவையாவும் அவரது மேன்மையையும் அந்தஸ்தையும் காட்டக் கூடியதானாலும் நாம் அவரைப் போற்றி துதிக்கும் தன்மை என்னவென்றால், தமிழ்நாட்டில் உள்ள மற்ற செல்வவான்களைப் போல் தமது வாழ்வுக்கும் திருப்திக்கும் தமது செல்வத்தை உபயோகிப்பதும், தமது சுயநலத்திற்காக செல்வம் சம்பாதிக்க வாழ்வு நடத்துவதும் போன்ற செல்வவான்களைப் போலல்லாமல், இவர் தமிழ் மக்களின் மேன்மைக்கும், சுயமரியாதைக்குமாக பெரிதும் தமது வாழ்வையும் செல்வத்தையும் உபயோகப்படுத்தி வந்தவர்.
பார்ப்பனரல்லாதார் இயக்கம் ஆரம்பித்த காலம் முதற் கொண்டு அவ்வியக்கத்திற்கு ஸ்தம்பமாய் இருந்து வந்தவர். அன்றியும் எந்தக் காரணம் கொண்டும் அவ்வியக்க சம்மந்தமாய் மற்றவர்களைப் போல் அடிக்கடி அபிப்பிராய மாறுதல் அடையாமல் ஒரே நிலையில் இருந்து அவ்வியக்கத்திற்கு தொண்டு செய்து வந்தவர். தென் இந்திய நல உரிமைச் சங்கத்திற்கு உபதலைவர்.
சென்ற சட்டசபைத் தேர்தலில் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் தோல்வி அடைந்த காரணத்தால் இயக்கமே மறைந்து விட்டது என்று நினைக்கும்படியாக ஏற்பட்ட நெருக்கடியான காலத்தில் மதுரையில் பெரிய மகாநாடு கூட்டுவித்து இயக்கத்திற்கே புத்துயிரளித்த பெரியார். நமது மக்களுக்காக இன்னும் எவ்வளவோ அரிய பெரிய காரியங்கள் செய்ய வேண்டும் என்றும் இவ்வியக்கத்தினரிடம் பிணங்கி பிரிந்து நிற்கும் மக்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்றும் பெரிதும் கவலையுடன் பல பெருந் திட்டங்களையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தவர்.

சுருங்கக் கூறின் பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்கு சென்னை தவிர வெளியிடங்களில் யாராவது உண்மையான தலைவர்கள் இருப்பார்களானால் அவர்களுள் நமது முதலியாரே முதன்மையானவர். இப்பேர்ப்பட்ட ஓர் பெரியார் இந்நிலையில் நம்மைவிட்டுப் பிரிந்ததானது நமது தவறு காலம் என்றே சொல்ல வேண்டும். அவர்களது அருமை குமாரருக்கும் அவரது சகோதரருக்கும் மற்றொரு சகோதரரின் குமாரரான திரு. பி.டி. ராஜன் அவர்களுக்கும் மற்றும் அக்குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
எல்லாம் வல்ல சக்தியானது அவர்கட்கு ஆறுதல் அளிப்பதாக.

1926ல் நடந்த தேர்தலுக்கு பின் ஏ.பி. பாத்ரோவின் தலைமையில் பார்ப்பனர் அல்லாதார் மாநாட்டை முழுமையாக நடத்திக்காட்டியவர் எம்.டி சுப்பிரமணிய முதலியார்தான். இவருடைய இந்த நடவடிக்கை வரலாற்று முக்கியமாக நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

தன்னை கட்சியில் முன்னிலைப்படுத்தாமல் செயல்வீரராகவும் அனைவரையும் ஒருங்கிணைத்தும் செயல்பட்டார். தனது வாரிகளுக்கு முக்கியத்துவம் அதிகாரம் வரும்படி பார்த்துக்கொள்ளாமல் இருந்தார். மேலும் ராஜன் நீதிக்கட்சியில் சேர்ந்து பணியாற்றுவதற்கு ரோல் மாடலாக இருந்தார்.
சென்னை மாகாணத்தின் முகமாக மட்டுமின்றி மதுரை, திருநெல்வேலி போன்ற தென் தமிழ்நாட்டின் முகமாக விளங்கினார். தன்னையும் தன் சொத்துக்களையும் மக்களுக்காக செலவழித்தார்.

பழனிவேல் ராஜன்

பி.டி.ராஜன், பிரபல வழக்கறிஞர் டி.வி.கோபாலசுவாமி முதலியாரின் மகள் கற்பகாம்பாளை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு 3 மகள்கள், 2 மகன்கள். இவர்களில் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன், தந்தையைப் போலவே வழக்கறிஞராகவும் அரசியல்வாதியாகவும் புகழ் பெற்றார்.

பி.டி.ஆர் பழனிவேல்ராஜன் தன் பள்ளி கல்வியை முடித்தபின், சென்னை கிருஸ்துவ கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் சென்னை சட்டக் கல்லூரியில் வழக்கறிஞராகவும் பட்டம் பெற்றர் அவர் வழக்கறிஞராக பயிற்சி பெற்று வந்தார்.

1967 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்த ராஜன் 1967 ஆம் ஆண்டு, முதன் முறையாக தமிழக சட்டமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
அதன் தொடர்ச்சியாக 1971 தேர்தலில் மீண்டும் தேனி தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கபட்டார். பிறகு , 1980 சட்டமன்றத் தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் தோல்வி அடைந்தார். அதற்கடுத்தபடியாக 1996 தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பதினோராவது சட்டமன்றத்தின் சட்டப்பேரவை சபாநாயகராகப் பொறுப்பு வகித்தார்.

அடுத்து நடந்த 2001 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதன் தொடர்ச்சியாக 2006 சட்டமன்ற தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு வென்று தமிழக சட்டமன்றத்தின் இந்து அறநிலையத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

அமைச்சராக பதவியேற்ற பின், 20 மே 2006 அன்று சென்னையிலிருந்து மதுரைக்கு ரயிலில் திரும்பும் வழியில் தனது 74 ஆம் வயதில் இயற்கை எய்தினார்.
மாண்புமிக்க சபாநாயகர்: தமிழக சட்டமன்ற நிகழ்வுகள் பற்றி மறைந்த பத்திரிகையாளர் மோகன் எழுதியிருக்கும் குறிப்பு மிகவும் கவனிக்கத்தக்கது. அவர் எழுதிய குறிப்பில்..
1996-2001ம் ஆண்டுவரை தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக இருந்தவர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன். இவர் சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்து விட்டால் பாராபட்சம் இல்லாமல் நடந்து கொள்வார். எதிர்க்கட்சி ஆளுங்கட்சி உறுப்பினர் என்ற பாகுபாடு இவரிடம் கிடையாது. யாராக இருந்தாலும் பேரவை விதிகளின் படி அவர்களை வழி நடத்துவார்.
சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்து விட்டால் சபை மரபுப்படி முதல்வர் உள்ளே வந்தாலும், வெளியே சென்றாலும் நாற்காலியை விட்டு எழுந்திருக்க மாட்டார். நாற்காலியில் அமர்ந்திருக்கும்போது பல நேரங்களில் தலைக்கு பின்னால் கையை கோர்த்துக் கொண்டு நாற்காலியில் மல்லாந்து தூக்குவதைப்போல் அமர்ந்திருப்பார். அவரை பார்க்கும் பலருக்கும் அவர் அசந்து விட்டார் என்றே தோன்றும், உறுப்பினர்கள் ஏதாவது தவறுதலாக குறிப்பிட்டாலோ, அல்லது சபை மரபுமை மீறியோ, விதிகளை மீறியோ ஏதாவது பேசிவிட்டால் அருகில் உள்ள மணியை அடித்து, சபையை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். விதிகளுக்கு புறம்பாக பேசியவை சபை நடவடிக்கை குறிப்பிலிருந்து நீக்குகிறேன் என்பார்.

காங்கிரஸ் உறுப்பினர் பொதுப்பணித்துறை தொடர்பாக கேள்வி எழுப்பியபோது, அன்றைய முதல்வர் கருணாநிதி எழுந்து பதில் கூற முற்பட்டார். ‘‘துறை அமைச்சர் இருக்கிறார் அவர் பதில் சொல்லட்டும். நீங்கள் அமருங்கள்’’ என்றார். முதல்வர் அமர்ந்துவிட அன்றை பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார் என்று குறிப்பிட்டுள்ளார். பத்திரிகையாளர் மோகன்.

சபாநாயகர் பதவிக்கு உண்டான மாண்போடு அப்பழுக்கில்லாமல் நடந்து கொண்டார் என்பதற்கு இதுவே சான்று.

பழனிவேல் ராஜன் மறைந்தபோது பழனிவேல் ராஜனின் எண்ணங்களும், செயல்பாடுகளும் மாற்றுக் கட்சியினரும் போற்றும் வகையில் அமைந்திருந்தன எ‌ன்று இரங்கல் தெரிவித்த முன்னாள் முதல்வர் கருணா‌நி‌தி, பழனிவேல் ராஜனின் மறைவு அவரது குடும்பத்தினரை விட என்னை மிகவும் பாதித்து விட்டது எ‌ன்றா‌ர்.
பெரியார் கொள்கையில் இறைமறுப்பை மட்டும் ஏற்காமல்
ஏனைய அனைத்து கொள்கையையும் தீவிரமாக கடைப்பிடித்தவர். நெற்றியில் திருநீறு குங்குமத்தோடு ஆன்மீகவாதியாக வெளிப்படையாக செயல்பட்டவர் பழனிவேல் அவர்கள்.
சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது பல நல்ல திட்டங்களை குறிப்பாக மாட்டுத்தாவணி பஸ் நிலையம், ரிங் ரோடு உட்பட பலவற்றை கொண்டு வந்தவர் அவரே.

இந்த நூற்றாண்டில் உலகமே பின்பற்றும்படி நடந்துகொண்ட பிடிஆர்.தியாராஜன்

பழனிவேல் தியாகராஜனின் இளமைக்காலம்

பழனிவேல் ராஜன் – ருக்மணி அம்மையாருக்கு மகனாக மதுரை மாவட்டம் சொக்கிகுளத்தில் 1966ஆம் ஆண்டு மார்ச் 7ல் தியாகராஜன் பிறந்தார்,
தியாகராஜன் தன் பள்ளி படிப்பை தி லாரன்ஸ் பள்ளி, லவ்டேல் மற்றும் மதுரை விகாசா பள்ளி ஆகியவற்றில் முடித்தார்.

பின் திருச்சி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் வேதியியல் பொறியியலில் பட்டம் பெற்றார். பின்னர் செயல்பாட்டு ஆராய்ச்சியில் முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றார். பஃபலோ பல்கலைக்கழகத்தில் மனித காரணிகள் பொறியியல் / பொறியியல் உளவியல் கற்றார். பின்னர் எம்ஐடி ஸ்லோன் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் நிதி நிர்வாகத்தில் எம்பிஏ முடித்தார்.

இவர் மார்கரெட் என்னும் அமெரிக்கப் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பழனிதேவன் ராஜன் மற்றும் வேல் தியாகராஜன் ஆகிய இரு மகன்களும் உள்ளனர்.
படிப்பை முடித்த பிறகு, 1990-ல் செயல்பாடுகள் மற்றும் அமைப்பு மேம்பாடு தொடர்பான தொழிலில் ஆலோசகராக பணியை தொடங்கி அவர், 2001-ல், அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கித்துறை நிறுவனங்களில் ஒன்றான லேமன் பிரதர்ஸ் நிறுவனத்தில் வர்த்தகம் மற்றும் கூட்டுச் சேவை மேலாளராக பணிபுரிந்தார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு அதிலிருந்து விலகிய அவர், 2008 ஆம் ஆண்டு ஆஃப்ஷோர் கேபிடல் மார்க்கெட்ஸ் நிறுவனத்தின் தலைவரானார். பின்னர் சிங்கப்பூரில் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் பணிக்குச் சேர்ந்து, அந்த வங்கியின் நிர்வாக இயக்குநராகவும் உயர்ந்தார்.

அரசியலுக்கு வரக்காரணம் என்ன?

தியாகராஜன் அவர்கள் ”நான் அரசியலுக்கு வர காணரமாக இருந்தவர் தலைவர் கலைஞர்தான்” என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து தியாகராஜன் அவர்களே தனது இணைய பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற சில தினங்களில், எனது தந்தையார் எதிர்பாராமல் காலமானபோது, எனது தாயாரும் நானும் நிலைகுலைந்து போனோம். எங்களது வாழ்வின் மிகவும் இக்கட்டான அந்தச் சூழ்நிலையின் போது தலைவர் கலைஞர் அவர்கள் எங்களுக்கு மிகப்பெரும் ஆறுதலாகவும், பலமாகவும் இருந்தார். எனது தந்தையின் ஒரே பிள்ளையாக, எனக்கு உண்டான பல கடமைகளை நான் செய்து முடிக்கப் போதுமான அவகாசத்தை அளித்து, அதன் பின்னர் என்னை அவர் அழைத்தார். தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் அவரை நான் சந்தித்தேன். பொதுவாழ்வில் எனது தந்தையின் கடமைகளை ஏற்று மக்கள் பணியாற்றும் வாய்ப்பினை அவர் எனக்கு அளிக்க முன்வந்தார். நான் அப்போது அமெரிக்காவில் இருந்ததாலும், தவிர்க்க முடியாத குடும்பச் சூழ்நிலைகளாலும் அவர் அளித்த வாய்ப்பினை என்னால் ஏற்க முடியவில்லை. ஆகையால் நிச்சயமாக பிறிதொரு சமயம் அவரது அழைப்பை ஏற்பதாக தெரிவித்திருந்தேன். அப்போது தலைவர் கலைஞர் அவர்களின் மறுமொழி அவரது காந்தத் தன்மையையும், வசீகரத்தையும் வெளிப்படுத்தியது. “உன் தந்தை எதிர்பாராமல் மறைந்துள்ள இந்தத் தருணத்தில் நீ என்னுடன் இணைவது என்னுடைய வேதனையை குறைக்கும் என்று எண்ணினேன். ஆனால், இந்த இயக்கத்தில் இடைவிடாது பங்களிக்கும் உன் குடும்பத்தின் பாரம்பரியத்தை தொடர மாட்டாய் என கூறியதில் மிகுந்த ஏமாற்றமடைகிறேன்”, என்று தலைவர் கலைஞர் தெரிவித்தார். மேலும், “நான் உன்னை வற்புறுத்த மாட்டேன். ஆனால், எனக்கு நீ ஒரு உறுதியளிக்க வேண்டும். உன் தந்தையை போலவே என்றும் என் மீது மாறா அன்புடன் இரு” என்று கூறினார். கண்ணீர் மல்க “என் வாழ்நாள் முழுவதும் அவர் மீது அன்பு செலுத்துவேன்”, என்று உறுதியளித்தேன்.

பிறகு, நான் முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து வெளியே வந்து தலைமைச் செயலக வளாகத்தில் நடந்து சென்றபோது, ஒரு தொலைக்காட்சி நிருபர்கள் குழுவை கடந்து வந்தேன். அடுத்த 60 வினாடிகளில், நான் எனது காரில் ஏறுவதற்கு முன்பாகவே, எனது தந்தையார் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளரை தலைவர் அறிவித்திருந்தார். தனிப்பட்ட முறையிலான அன்பையும், கழகத்தின் தேவையையும் கடந்து ஒருவர் மீது அவர் அன்பு செலுத்தும் பாங்குதான் அவரது ஆளுமைக்கான எடுத்துக்காட்டு. அந்தத் தருணத்தில் அவருக்கு 82 வயது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்!

பல்வேறு நிகழ்வுகளாலும், சூழ்நிலைகளாலும் 2011 தேர்தலை நான் தவறவிட்டேன். நான் விண்ணப்பிக்கவும் இல்லை. அவர் வற்புறுத்தவும் இல்லை. ஆனால், அவருக்கு நான் அளித்த வாக்கின்படி, எனது வங்கிப் பணியில் இருந்து முன்கூட்டியே ஓய்வு பெற்று, எனது தந்தையின் பழைய தொகுதியான மதுரை மத்திய தொகுதிக்கு 2016 பொதுத்தேர்தலில் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விண்ணப்பித்தேன். ஏற்கனவே அவர் சொன்ன சொல்லின் படியும், கழகத்தின் செயல் தலைவரும் நம் அனைவரின் எதிர்கால நம்பிக்கையுமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுடன் கலந்தாலோசித்தும், பலரும் விண்ணப்பித்திருந்த நிலையில், என்னை அந்த தொகுதிக்கான வேட்பாளராக தேர்ந்தெடுத்தார்.

பத்து ஆண்டுகளுக்கு முன் நான் அவருக்கு அளித்த உறுதிமொழி “இறுதிமூச்சு உள்ளவரை அவர்மீது என்றும் மாறா அன்புடன் இருப்பேன்” என்பது.
ஆக நந்தையாரைப் போன்று தியாராஜனும் திமுகவிற்கும் அதன் தலைமைக்கு கட்டுப்பட்டவர்கள் என்பது புலனாகிறது.
பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் 2016 தேர்தலில், அவரது தந்தை பி.டி.ஆர் பழனிவேல்ராஜன் போட்டியிட்ட அதே மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் 2021 தேர்தலில் போட்டியிட்டு தற்போதைய சட்டமன்றத்தின் நிதி அமைச்சராக
2 ஆண்டுகள் பணியாற்றிய அவர் தற்போது தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

தியாகராஜன் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது ஏனையோரைப் போன்று அவர் சும்மா இருக்கவில்லை. அவர் இந்தியாவிற்கே சட்ட மன்ற உறுப்பினர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று முன்னுதாரணமாக இருந்துள்ளார்.

எம்.எல்.ஏ.வாக இருந்து செய்த பணிகள்

மக்கள் தங்கள் குறைகளை மனுவாக எப்போதும் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் வழங்கலாம். அதோடு அவரது இல்லத்தில் ஒரு அலுவலகமும் இதற்காக செயல்பட்டு வருகிறது.இந்த இரண்டு இடங்களிலும் மனுக்கள் வாங்க பணியாளர்கள் இருப்பார்கள். அந்த மனு குறித்து ஆய்வு செய்து அதனை அந்தந்த துறைகளுக்கு அனுப்பி தீர்வு காணும் ஒரு முறை (சிஸ்டத்தை)யையும் செயல்பாட்டுக் குழுவையும் (தொகுதியில் உள்ள குறைகள் உடனுக்குடன் களையப்பட மக்களை அணுகும் அணி) உருவாக்கி இருந்தார்.

மனு கொடுத்தவர்களை மிரட்டுவது கிடையாது. மனுவுக்கும் மன கொடுத்த ஒவ்வொரு மனித எதிர்பார்ப்புக்கும் மதிப்பளித்திருந்தார்.
தொகுதிக்குச் செய்யும் பணிகளை ஆறு மாதங்களுக்கு ஒரு செயல்பாட்டு அறிக்கை அதாவது ரிப்போர்ட்டை ஊடகம் மூலம் வெளியிடுவது மட்டுமல்லாமல், தன் தொகுதியிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் அதை நேரடியாக பிரிண்ட் செய்து சமர்பித்தும் வந்தார். அவர் தொகுதி மேம்பாட்டுப் பணி விவரங்கள், செலவு செய்யப்பட்ட நிதி அடங்கிய அறிக்கையை சமூக ஊடகங்கள் மற்றும் இணைய தளத்தில் ‘அப்லோடு’ செய்தும் வந்திருக்கிறார்.
ஒவ்வொரு வார்டுக்கும் என்ன செய்திருக்கிறார், எவ்வளவு ரூபாயை எந்தெந்த விதங்களில் செலவிட்டிருக்கிறார் என்பதை விளக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
மக்கள் அவரிடம் கொடுத்த மனுக்கள்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, எத்தனை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படாமல் இருக்கிறது என்பதையும் தெரிவிப்பார். அந்த தகவல்களையும் அப்லோடு செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி மற்றும் அவர் தொகுதிக்கு என்ன செய்கிறேன் என்பதை ஒவ்வொரு வீட்டுக்கும் நோட்டீஸாக அச்சடித்து வழங்கவும் செய்தார்.
அவ்வப்போது மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியும் வந்தார். தற்போது அதனை செய்து வருகிறார்.
இப்படியாப்பட்ட செயல்பாடுளை கண்டறிந்து இந்தியா முழுக்க பல முன்னனி பத்திரிககள் செய்தி வெளியிட்டு இருந்தனர். பலரும் இத¬¬ ஆச்சரியமாக பார்த்து லட்சக்கணக்கில் பகிர்ந்து பாராட்டி இருந்தனர்.

இன்றைக்கு தொகுதி மேம்பாட்டு நிதியை எப்படிச் செலவு செய்தார்கள் என்று எந்த எம்.பி, எம்.எல்.ஏ-வும் சொல்வதில்லை. ஆனால் தியாகராஜன் இப்படியில்லை நிதி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையோடு நடந்திருக்கிறார்.
எந்தவொரு விஷயத்தையும் மிகவும் பொறுப்புணர்வோடு கையாளும் குணத்தை பாரம்பரியமிக்க வளர்ப்பு மூலம் மிக இயல்பாக பெற்றிருக்கிறார். யாரும் தன்னை குறைகூறிவிடக்கூடாது என்றும் தன்னால் தன் குடும்பத்திற்கு கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது என்று நினைக்கும் சராசரி இளைஞர்கள் நினைப்பார்கள். அது அவர்களுக்கு தவறு இளைக்கும் வாய்ப்பு கிடைக்கும் வரைதான். ஆனால் அந்த உறுதியை பி.டி.ஆர். வாய்ப்பு கிடைத்தும் அதிலிருந்து நழுவவில்லை. எப்போதும் வெள்ளைச் சட்டை மற்றும் ஜீன்ஸுடன் காட்சியளிக்கும் பி.டி.ஆர்.தியாகராஜன் தன் தொகுதி மக்களிடம் புன்னகையுடன் அணுகி அவர்கள் போற்றும்படி நடந்துக்கொள்வார். இவையனைத்து நடிப்பிற்காக இல்லாமல் உண்மையாக வெளிப்படுத்துபவர். இதிலிருந்து மக்கள்தான் என்றைக்கும் எஜமானன் என்பதை உணர்ந்திருக்கக்கூடியவர். மக்கள் நலனின்றி வேறு எதிலும் அவருக்கு திருப்பி இல்லை என்பதை நாம் உணரமுடிகிறது.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஒரு அரசியல்வாதி எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று உலகத்திற்கே வழிகாட்டி இருக்கிறார். ஆனால் அதனை உலகில் யாரும் கவனிக்கவில்லை. அல்லது கவனிக்காததுபோல கடந்துச்சென்றுவிட்டனர். ஏன் நமது நாட்டில் கூட எந்த ஒரு எம்.எல்.வும். அதனை பின்பற்றவில்லை என்பதுதான் வேதனை.

தியாராஜன் போல நடந்துக்கொள்வது மிகவும் கஷ்டமானது என்பது அத்தனை ஆயிரம் பேரும் இதன் மூலம் உணர்த்தியிருக்கிறார்கள். அதனால் தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய நஷ்டம் என்பதோடு மக்களை பிரச்சனைகளோடு வைத்திருக்க வேண்டும் என்பதை உலக அளவிலான ஏனைய அரசியல்வாதிகள் உணர்த்தியிருக்கிறார்கள்.

ஆனால் தியாராஜன் அப்படி இல்லை என்பதிலிருந்து அவருடைய சிந்தனை செயல்பாட்டையும் மக்களை மதிக்கும் பாங்கையும் அவரை நாம் எந்த அளவிற்கு போற்ற வேண்டும். பாதுகாக்க வேண்டும். அவருக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதை நாம்தான் உணர்ந்துக்கொள்ள வேண்டும்.
பல நூறாண்டுகளுக்கு பிறகு பிடிஆர் தியாகராஜன்
என்னைவிட பிரபலமான ஒரு பத்திரிகையாளனால் அல்லது ஆய்வாளனால் உலக வரலாற்றில் குறிப்பிடப்பட்டு நீடித்த புகழ்பெறுவார்.
……….
செயல்தலைவர் பிடிஆர் தியாகராஜன்

கொரோனா காலத்தில் தமிழகத்திலேயே தொற்று குறைந்த மாவட்டமாக மதுரை மாவட்டம் வெகு சில நாட்களிலேயே மாற்றிய பெருமை பிடிஆர் தியாகராஜனை சேரும். அந்த செயல்திட்டத்தை தமிழகத்தில் ஏனைய இடங்களும் பின்பற்றச் செய்தவர். குறிப்பாக நாள் ஒன்றுக்கு 1500 பேரை கொரோனா தொற்று என்றிருந்த எண்ணிக்கையை மூன்றே வாரங்களில் 200 ஆகக் குறைந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
மதுரை மத்திய தொகுதியில் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய தொகுதிக்குட்பட்ட 22 வார்டுகளிலும் தனித்தனியே சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தி பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அந்த விஷயத்தில் தியாகராஜன் அதிக அக்கறை காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை மத்திய தொகுதியில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொருட்களை நிவாரணமாக வழங்கினார்.
மதுரை நகர் கட்டமைப்புக்கான மாஸ்டர் பிளான் உருவாக்கியதோடு சென்னையில் உள்ளதுபோல இங்கும் மெட்ரோ ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டு அதற்கான விரிவான செயல்திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நிலங்கள் கையகப்படுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டு மதுரை விமான நிலையப் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும், மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. (சுங்க விமான நிலையமாக மட்டுமே மதுரை விமான நிலையம் செயல்படுகிறது.)

மதுரை மாவட்டத்தில் ஒரு லட்சம் புதிய விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் 2021-22ஆம் ஆண்டு 2560 விவசாய மின் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை 2000த்திற்கும் மேலான தொகுதி மக்களின் மனுக்கள் ஆய்வு செய்து கையெழுத்திட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.
கடந்த 2016-2021 காலக்கட்டத்தில் அதிமுக அரசு நிதியின்மை என காரணம் காட்டி நிறுத்தி வைத்திருந்த நிலையில் பழைய விண்ணப்பதாரர்கள் அனைவரையும் மீண்டும் தொடர்பு கொண்டு புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டு நூற்றுக்கணக்கான பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியம், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு உதவிகள், விதவைப்பெண்கள் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பெண்களுக்கு தையல் மிசின், மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் வாகனம் போன்ற பலன்களை பெற காரணமாக இருந்திருக்கிறார்.

மதுரையில் பல்வேறு இடங்களில் புதிய தார் சாலை, பேவர் ப்ளாக் சாலை, அங்கன்வாடி கட்டிடம், குடிநீர் தொட்டி, விவசாயிகளுக்கு மின்இணைப்புகள் என தொடர்ந்து மக்களை நோக்கி சேவைகள் சென்றடைய தீவிரம் காட்டியுள்ளார்.

குறிப்பாக மின்சாரமின்றி தவித்த காட்டுநாயக்கர் சமூக மக்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.
நடக்க இயலாத 60 மாற்றுத்திறன் படைத்தவர்களை கண்டறிந்து அவர்கள் அனைவருக்கும் சக்கரநாற்காலிகளை வழங்கியுள்ளார்.
மீனாட்சியம்மன் கோயில் தீயணைப்பு நிலைய அலுவலகம், மதுரையில் முற்றிலும் நவீன முறையில் கலைஞர் நூலகப் பணிகள், வீர வசந்தராயர் மண்டப சீரமைப்பு, ரூ.6 கோடியில் மதுரை காந்தி அருங்காட்சியகம் புதுப்பிக்கும் பணி என அனைத்தையும் நடைமுறைப்படுத்தி செயல்தலைவராக இருந்துள்ளார்.

திமுக அரசு பொறுப்பேற்றபோது தமிழகத்தின் நிதிநிலை மிக மோசமாக இருந்தது. கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் பெற்றிருந்த கடன் விகிதத்தைவிட தாண்டிய அளவில் இதற்கு முந்தைய ஆட்சியில் இருந்தவர்கள் கடன் பெற்றிருந்தனர். அதோடு கொரோனா பேரிடர் போன்ற மோசமான சூழலில் தமிழக நிதிநிலையை சிக்கலில்லாமல் நிர்வகித்தார்.
அவர் நிதிஅமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து அவர் அதிகாரத்திற்கு உட்பட்ட அளவில் மிகவும் கறாராகவே இருந்துள்ளார். நிதி விடுவிப்பு, கணக்கு வழக்கை சரிபார்ப்பது, நிதி ஒழுங்காக செலவழிக்கப்படுகிறதா, ஒதுக்கப்பட்ட நிதி செலவழிக்கப்படாமல் இருந்தால் அதனை கண்டறிவது, திட்டத்திற்கும் கோரப்படும் நிதிக்கும் உள்ள இடைவெளியை குறைப்பது என மிகவும் நுட்பமாக அதிக அக்கறையுடன் வேலைப்பளு என்றாலும் அதில் கவனம் செலுத்தியிருக்கிறார். பிடிஆர் இவ்வாறு செய்ய வேண்டிய தேவை அவருக்கு இல்லை. இது அவருடைய மன நிம்மதியையையும் நேர விரையத்தையும் கூடுதலாக அதிகார மற்றும் அமைச்சர்கள் மத்தியில் நட்புறவை பாதிக்கும் என்றாலும் தொழில்முறையாகவும் நேர்மையான அவரது அணுகுமுறையும் அவரத தனித்தன்மை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

அவர் தன்னை முன்னிலைப்படுத்தாமல் உலக அளவிலான அணுகுமுறையை மேற்கொள்ளும் விதமான எந்த வித ஈகோவும் இல்லாமல் நிதித்துறையில் நிபுணத்துவம் பெற்ற பொருளாதார வல்லுநர்களை உள்ளடக்கி, ஒரு பொருளாதார குழுவை உருவாக்கினார். அந்த குழு தமிழகத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, செய்யப்படவேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து முதலமைச்சருக்கு ஆலோசனை வழங்கும்படி ஏற்பாடு செய்திருந்தார். நேரடியாக எந்த மாற்றத்தை கொண்டு வர முடியாது என்பதையும் சிறப்பான செயல்பாடுகள், நேரடியான தனித்த திறமையை வெளிப்படுத்தினால் இந்த அரசியல் சூழலில் முடியாது என்பதையும் அவர் நன்கு உணர்ந்திருந்தார் என்பதாலேயே அவர்களின் பரிந்துரைகளை
முதல்வர் பார்வைக்கு கொண்டு சென்று அதன் வழியாகவே கூட்டு முடிவாக இருக்க வேண்டும் என்பதிலும் அவர் உறுதியாக இருந்துள்ளார். அவர் அதனை தனக்கு பெருமை சேரும்படி செய்யாமல் தமிழகத்தின் நலன் கருதியே அந்த பொருளாதார ஆலோசனைக்குழுவை உண்டாக்கினார்.

அந்தக் குழுவில்..
1. ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்
2. அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் வறுமை ஒழிப்பு மற்றும் மேம்பாட்டு பொருளாதாரப் பேராசிரியரான எஸ்தர் டஃப்லோ. இவர் நோபல் பரிசு பெற்றவர்.
3. முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
4. பொருளாதார நிபுணரும் ராஞ்சி பல்கலைக்கழக விசிட்டிங் பேராசிரியரும், டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் கௌரவப் பேராசிரியருமான ஜீன் டிரேஸ்.
5. முன்னாள் நிதி செயலாளர் எஸ்.நாராயணன் போன்ற வல்லுநர்கள், அந்த பொருளாதார ஆலோசனைக் குழுவில்
இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்றிய அரசு என்ற சொல்லாடலை தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியவெங்கும் உலவ விட்டவர் பிடிஆர்தான்.
தமிழக சட்டப்பேரவையில் காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது இவரின் ஆளுமையில்தான்.

தமிழகத்தின் பொருளாதார நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட்டு முந்தைய அரசுகளின் நிதி முறைகேடு மற்றும் தமிழகம் செலுத்த வேண்டிய கடன் மற்றும் அதற்கு செலுத்தவேண்டிய வட்டித் தொகை போன்றவை வெள்ளை அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற அழுத்தங்கள் வந்த சூழலில் அதனை புன்னகையோடும் பழிகளை சுமந்து நிதி ஆதாரங்கள் உருவாக்கி படிப்படியாக வாக்குறுதிகளை நிறைவேற்றிட காரணமாக இருந்தார்.

முதல்வர் அவர்களின் ஆலோசனையின் பேரில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைத்தார்.
தேங்கியுள்ள மறைந்திருந்த ரூ.2000 கோடி நிதியை கண்டறிந்தார்.

சமூகநீதித் திட்டங்களுக்கு எந்த வகையிலும் நிதி ஆதாரத்தால் தடை ஏற்பட்டு விடாதவாறு பல்வேறு வகைகளில் நடவடிக்கைகள் எடுத்து, முறையான பயனாளிகளுக்கு திட்டங்கள் சென்றடைய ஆய்வு மேற்கொண்டு சரியான நபர்களுக்கு தேவைக்கேற்ப பலன்கள் சென்றடையும் திட்டங்களை வகுத்திருந்தார்.
கடந்த ஆட்சியில் டி.என்.பி.எஸ்.சி.யில் நடந்த பல முறைகேடுகள் குறித்து விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது தொடங்கி அனைத்து பணிகளுக்கு பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பும் அதிரடி உத்தரவையும் பிறப்பித்தவர்.

அரசு வேகைளில் தமிழ் வழிக்கல்வியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை.

பணி நியமனத்தில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு என பல திட்டங்களின் முகமாக பிடிஆர் தியாராஜன் திகழ்ந்திருக்கிறார்.
பிடிஆர் திட்டமிட்ட அல்லது நடைமுறைப்படுத்தும் சூழல் உருவாவதற்கு முன்னர் அவரிடமிருந்து நிதி மற்றும் மனித வளத்துறை பறிக்கப்பட்டது துரதிஷ்டவசமானது.
தி.மு.க.வின் செயல்திட்டங்களை, கொள்கைகளை தேசிய அளவில் கவனம் பெறும்படி செய்தவர். பல்வேறு தேசிய தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் பல்வேறு நேர்காணல்களில் தன்னுயை தனிப்பட்ட நலனுக்காக பயன்படுத்திக்கொள்ளாமல் துணிந்து மத்திய அரசை விமர்சித்தவர். பா.ஜ.க. தரப்பில் தனக்கான ஒரு மறைமுக நட்புறவை
பேணும் எணணத்தை கொள்ளாமல் அதிகார, தனிப்பட்ட நலனைக் கருத்தில் கொள்ளாமல் பல விமர்சனை செய்து இந்திய அரசியலில் மிகப்பெரிய ஒரு தாக்குதலையும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்.

தரவுகள், எதிர்கேள்வி கேட்க முடியாத அளவிற்கு முன்வைக்கும் கருத்து, கருத்தியல் ரீதியாகவும், பொய் மட்டுமே சொல்லும் இயல்பு கொண்ட எதிர் இருப்பவர் அஞ்சும்படியான இவரது அணுகுமுறையை ரசிக்காதவர்களே இருக்க முடியாது.

பிடிஆர் தியாராஜன் சாதாரண அரசியல்வாதியாக, ஒரு விசுவாசியாக அணுகினால் இழப்பு இயக்கத்துக்கு நாட்டுக்குமேயன்றி தனிப்பட்ட அவருக்கில்லை. இனி பிடிஆர் போன்ற நபரை இந்த உலகம் பிறப்பிக்காது. அதனால் அவரை பயன்படுத்திக்கொள்ள வேண்டிய நமது கடமை.

மதுரை மத்தியத் தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு 64,662 வாக்குகளைப் பெற்ற பழனிவேல் தியாகராஜன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மா.ஜெயபாலை 5,762 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றிருந்தார்.

இந்த முறை பழனிவேல் தியாகராஜனை எதிர்த்து அதிமுக சார்பில் ஜோதி முத்துராமலிங்கம், அமமுக சார்பில் சிக்கந்தர் பாட்ஷா, மக்கள் நீதி மய்யம் சார்பில் வி.பி.மணி, நாம் தமிழர் கட்சி சார்பில் பாண்டியம்மாள் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர். முடிவில் அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக-வின் ஜோதி முத்துராமலிங்கத்தைவிட 34,176 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். அரசியல்வாதி ஓட்டுக்கு பணம் தராமல் இரண்டு முறை வெற்றி பெறுவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதிப் பிரச்னைகளை சட்டமன்றத்தில் முன்வைத்து பலவற்றுக்குத் தீர்வுகண்டதோடு, தனது தொகுதிக்குச் செய்த பணிகளை ஆறு மாதங்களுக்கு ஒரு ரிப்போர்ட்டாக ஊடகம் மூலம் வெளியிட்டதோடு, தொகுதியிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் அதை நேரடியாகவும் வழங்கினார். இதன் மூலம் இந்திய அளவில் எம்.எல்.ஏ-க்களுக்கு ஒரு முன்மாதிரியான எம்.எல்.ஏ-வாகச் செயல்பட்டார் என்றே சொல்ல வேண்டும்.

தி.மு.கவின் ஐடிவிங்கை தீவிரமாகச் செயல்படவைக்க முடிவுசெய்யப்பட்டபோது, அதன் செயலராக பி.டி.ஆர். நியமிக்கப்பட்டார். தி.மு.க. ஐ.டி. விங்கின் கட்டமைப்பை முழுமையாக உருவாக்கியதிலும் கட்சிக் கட்டமைப்பு குறித்த தரவுகளை ஒழுங்குபடுத்தியதிலும் அவரது பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது.

கடந்த ஐந்து ஆண்டுகளிலும் பட்ஜெட் மீதான விவாதத்தைத் தொடங்கி உரையாற்றும் வாய்ப்பை திமுக தலைமை இவருக்கே வழங்கியது.

பா.ஜ.க.வின் மீது தொடுத்த விமர்சனங்கள்

பா.ஜ.க. சதிதிட்டத்தோடு பல திட்டங்களை மக்களிடம் திணித்ததோடு அது குறித்து இந்திய ஊடகம் மற்றும் சமூக வலைதள பலத்தோடு பீற்றிக்கொண்டும் இருந்தது. இதுகுறித்தான ஆபத்துகள் குறித்தும் ஒவ்வொரு திட்டங்களின் பின்னனி குறித்தும் பிடிஆர்.தியாகராஜன் அம்பலப்படுத்தியதை வரிசையாகப் பார்ப்போம்.
கோயில் அடிமை நிறுத்து
பணமதிப்பிழப்பு
ஜிஎஸ்டி கொள்கை
தேசியக் கல்விக்கொள்கை
இலவசங்கள்
ஒரே தேசம் ஒரே தேர்தல்
ஹிந்தி திணிப்பு
இனம் குறித்தான வரலாறு
நீட்
பட்ஜெட்
ஒன்றிய அரசு சொல் பிரகடனம்
மற்றொரு பக்கம், தேசிய அளவில் தி.மு.கவின் முகத்தை மாற்றியமைப்பதிலும் அவர் முக்கியப் பங்கு வகித்தார். ஆங்கில ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டிகள், தொலைக்காட்சி விவாதங்களில் அவர் பங்கேற்று முன்வைத்த கருத்துகள் ஆகியவை நாடு முழுவதும் வெகுவாகக் கவனிக்கப்பட்டன.

இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின்போது தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் செலவுகளில் முறைகேடு இருப்பதாகக் கூறி அவர் வெளியிட்ட விவரங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிகழ்விற்கு பிறகே முதலமைச்சர் குடும்பம் குறித்து தனிப்பட்ட முறையில் அவர் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ வெளியானது,
அதே வேளையில் அரசின் துறைகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிதியை விடுவிப்பதில் தாமதம் செய்வதாக அவர் மீது புகார்கள் குறித்தும் விவாதமாகியது.
இன்று அவர் துறைரீதியாக மாற்றம் செய்யப்பட்டிருப்பது அதுவும் துறைரீதியான கல்வித்திறன் உள்ள மற்றும் அனுபவம் உள்ள அவர் மாற்றம் செய்யப்பட்டது மாபெரும் தவறு.