பிராமணர் உள் நுழைவிற்கு பிறகு அவர்களை ஆதரவளிக்கு நோக்கில் இருந்த சூழல் மாறி அவர்களை உயர்த்தி தங்களை தாங்களே தாழ்த்திக்கொள்ளும் மனப்போக்கு நம் மன்னர்களிடத்தில் உதயமானது. அதிகாரத்தில் மன்னர்களிடத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த வேளாளர் மற்றும் பிராணமர்களின் கூட்டணி இன்றைக்கு வரையும் பிராமண ஆதிக்கத்திற்கு காரணம். இன்றைய நவீன வாக்கு அரசியல் களத்தில் தலித் அல்லாத மக்கள் அவர்களின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்த சேவகம் செய்துவருகிறார்கள்.
எளியோருக்கும் உதவி கேட்போருக்கும் வாரி வழங்கும் வள்ளல் குணம் மற்றும் போர் வீரத்தையும் இயல்பாகவே வாய்க்கப்பெற்றவர்கள் நம் மன்னர்கள். புலவர்கள் போற்றி பாடி, பாடல்களாக பதிவு செய்ததால் வாரி வழங்குவதிலும், வீர தீரசெயல்களின் அதீத ஆர்வம் கொண்டனர். அப்போது அண்டி ஒண்டி வாழ்ந்த பிராமணர்கள் இரந்து பலவற்றை பெற்றனர். அதற்கு கைமாறாக சடங்கு, மத நம்பிக்கை சார்ந்த உடல் உழைப்பற்ற பணிகளில் ஈடுபட்டனர்.
ஆனால் நம் மக்களில் பெருவாரியானோர் இப்படி இரந்தும் கெஞ்சியும் பழக்கமில்லை. அதனால் அவர்கள் கடும் உழைப்பினில் ஈடுபட்டு வெறும் கூலிகளாகவே இருக்க வேண்டியதாயிற்று.
பார்ப்பனர்களுக்கு முன்னர் அவர்கள் இன்றைக்கு செய்யும் தொழில் நிமித்தப் பணிகளை மருத்துவர் (நாவிதர், குடிமகன்), வண்னார், வள்ளுவர், வேளார் (மட்பாண்டம் செய்வோர்), தமிழ்ப் பண்டாரம் (நந்தவனம் வைத்துப் பூத்தொடுப்பவர்), பறையர் ஆகிய சாதியினர் செய்தனர். அவர்களே குருமார்களாக இருந்தனர் என்கிறார் ஆய்வாளர் தொ.பரமசிவன் அவர்கள்.
இன்றைக்கு அவர்கள்தான் தீட்டுப்படும் சாதியினராக நால்வர்ணக் கோட்பாட்டால் கடவுள் சொன்னதாகக்கூறி கட்டமைத்திருக்கிறார்கள் பிராமணர்கள்.
பெரும்பாண்மை மக்கள் பின்பற்றும் வழிபாடு, உணவு முறைகள், சடங்குகள் என பலவற்ளை முதலில் கையில் எடுத்துக்கொண்டு அதல் பின்னால் அவர்களின் முறைகளை புகுத்திட்டு மக்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக இயைந்துவிட்டனர்.
போர்க்காலங்களில் மட்டும் வேள்வி சடங்கு என்பதனை தொடங்கி பிறப்பு முதல் இறப்பு வரை என வாழ்வில் ஒவ்வொரு நிகழ்வையும் அவர்கள் சடங்கு சம்பிரதாயம் என்பதனை புகுத்தி அவர்கள் நம்மோடு இணைபிரியாத அளவிற்கும் அதிகாரம் செலுத்தும் அளவிற்கும் உயர்ந்துவிட்டார்கள்.
புலால் உண்ணாமை, பெரிய தெய்வ வழிபாட்டு முறை, நிறுவனமயமான பழக்கவழக்கம், தொழில் வழிப்பட்ட ஏற்றத்தாழ்வுகளை கூட்டம், குடி வழியே நிலை நிறுத்தி சாதியாக்கம் பெறச்செய்தல் என பல அழிவுகளை புகுத்தினர்.
சுட்ட செங்கல்லால் வீடு, வாசல், ஜன்னல், திருமணம், உணவு, உடை என சகலத்திலும் சாதி வழியாக உரிமைகள் மறுக்கப்பட்டன.
மன்னர்களால் முக்கிய நகரங்களில் மட்டும் ஆதிக்க செலுத்திய பிராமணர்கள் ஊர்களிலும் சபைகளிலும் இடம்பிடித்து நீதி வழங்கல், நிர்வாகம்&வாரியங்கள் என அனைத்து மட்ட அதிகாரங்களிலும் தலையிட்டு மன்னர்களுக்கு குலகுருவாகவும் மாறி பின்பு நாயக்க மன்னர்கள் காலத்தில் தளபதியாகவும் மன்னர்களாகவும் விளங்கினர்.
வேளாளர்களின் துணையுடன் பிறகு மன்னர்களின் ஆதரவில் இன்றளவும் அவர்கள் இந்தியாவின் உச்சபட்ச அதிகாரத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு அரசியலிலும் ஆட்சி மாறினால் நிர்வாக அமைப்பிலும் திட்டமிட்டு தங்களை நிலைநிறுத்தி இன்றளவும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
கி.பி. 12ம் நூற்றாண்டு இறுதியில் சோழ மன்னர்களின் ஆதிக்கத்தில் இருந்த வேளாளர்களின் ஆதிக்கத்தால் மடங்கள், கோயில் நிர்வாகத்தை கைக்கொண்டு மன்னர்களுக்கு இணையாக தன்னாட்சிபோல மதத்தின் வழி ஆட்சி செய்த வந்த வேளாளர்கள் வழியே வெறும் பணியாளர்களாக இருந்த பிராமணர்கள் மடங்களையும் சைவக் கோயில்களையும் அபகரித்து இன்றைக்கு சைவ, வைணவ கடவுளர்களையே ஆட்டிப் படைத்து தங்களின் சொத்தாகவும் மாற்றிவிட்டார்கள். சமண, பௌத்தம் உள்ளிட்ட மாற்று மத கோயில்கள், மலைசார்ந்த இடங்கள் சைவ, வைவண கோயில்களாக ஆக்கப்பட்டன. இன்றைக்கு பெரும்பாண்மையான வைணவக் கோயில்கள் முழுவதும் பிராமணர்கள் வசம் சென்றுவிட்டன.
அதிலும் சைவ மரபில் இருக்கின்ற பல மடங்கள், கோவில்கள் வைணவக் கோயில்களாக மாற்றம் கண்டன. குறிப்பாக ”கும்பகோணத்தில் முதலியார் மரபினர் தலைமையில் இருந்த மடமொன்று இன்று சங்கராச்சாரியர் மடமாக மாறியுள்ளதென அறிகின்றோம்” என்று – ந.சி.கந்தையாப்பிள்ளை அவர்கள் ஆய்வு செய்து குறிப்பிட்டுள்ளார்.
இனியாவது தமிழ்ச் சாதியார்கள் புரிந்துக்கொண்டு அந்நியர்களிடமிருந்து இந்தியாவை மீட்டதுபோல் நமது மரபுகளையும் கடவுளர்களையும் மதத்தையும் பிராமணர்களிடமிருந்து காக்க வேண்டும். தமிழிசை, நாட்டியம், கலைகள் என பலவற்றையும் அவர்களுடையதாக்கி நம்மை கீழ்ப்படுத்தி சாதிய ஏற்றத்தாழ்வுகளை, தீட்டு என நம்மை பிரித்தாள வேதங்களை முன்வைத்தும் கிருஷ்ணர், ராம அவதார சித்தரிப்பு வழியே கட்டிய கதைகளை நிராகரிப்போம்.






