பிராமணர்கள் தமிழக கருவறையில் நுழைந்த சதி அம்பலம்….

0
265

பழநி தண்டாயுதபாணிசுவாமி கோயிலுக்கு தினமும் நித்யபூஜை செய்வதற்காக கந்தசாமி பாண்டாரம் என்பருக்கு எழுதிக்கொடுத்த 152 ஆண்டுகள் பழமை வாய்ந்த செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பரமேஸ்வரன் என்பவர் வைத்திருந்த செப்பேடு குறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி மற்றும் ஞானசேகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.இதுகுறித்து நாராயணமூர்த்தி கூறியதாவது. பழனிமலைக் கோயிலில் தண்டாயுதபாணி சுவாமிக்கு நித்யபூஜை செய்வதற்காக கந்தசாமி பண்டாரம் என்பவருக்கு எழுதிக் கொடுத்ததாகவும், தண்டாயுதபாணி சுவாமிக்கு தினமும் திருமஞ்சன குடம் எடுத்து 120 வில்வ இலை, ஒரு கிண்ணம் சந்தனம், விபூதி உள்ளிட்டவையால் பூஜை செய்து நெய்வேத்தியம் செய்வதற்கு கூலியாக, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இணைந்து அரை ரூபாய் முதல் இரண்டரை ரூபாய் வரை திரட்டி ஆண்டுக்கு ரூ.115 கூலியாக வழங்க தீர்மானித்து எழுதப்பட்டுள்ளது.”பழநியில் 152 ஆண்டுகள் பழமை வாய்ந்த செப்பேடு கண்டுபிடிப்பு: கோயிலில் நித்ய பூஜை செய்ய எழுதிக்கொடுத்தது” இந்த செப்பேடு 1868 ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 28 ஆம் நாள் எழுதப்பட்டுள்ளது. 152 ஆண்டுகள் முந்தைய இந்த செப்பேடு 25 செ.மீ அகலமும், 45 செ.மீ உயரமும், 2 கிலோ எடையும் கொண்டுள்ளதாக உள்ளது.செப்பேட்டில் வேல், சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. சிவமயம் தண்டாயுதபாணி துணை என துவங்கி வைகை நீடுக மாமழை என்ற பாடலுடன் 106 வரிகள் இந்த செப்பேட்டில் உள்ளது. இந்த செப்பேட்டின் படி கந்தசாமி பண்டாரம், தண்டாயுதபாணி சுவாமிக்கு பூஜை செய்வதற்கு அறை மற்றும் மடத்தை பயன்படுத்திக் கொள்ளவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.மேலும் இந்த கோயிலுக்கு நன்மை செய்பவர்கள் கங்கை மற்றும் சண்முக நதியில் பூஜை செய்வதற்கு சமமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, என்றார்.இந்த செப்பேடு எழுதிக்கொடுக்கப்பட்ட கந்தசாமி பண்டாரத்தின் தற்போது ஐந்தாவது தலைமுறையினரான பரமேஸ்வரன் என்பவரிடம் தற்போது உள்ளது.

சடையவர்மன் வீரபாண்டியன் இக்கோவிலின் பண்டாரத்தார்களுக்கு நிலம் தேவதானம் கொடுத்த கல்வெட்டு கோவில் உட்புறம் சுவரில் பொறிக்கப்பட்டுள்ளது.

தமிழ் பண்டாரங்கள் என்னும் பிரிவினர் பழனி கோயில் முழுவதும் குறிப்பாக மூலவருக்கும் பூசை சென்றது வந்தனர். கி.பி.1633 வருடஷம் கிருஷ்ணதேவராயர் மன்னரிடம் இருந்த ராமப்பையர் என்னும் பிராமணர்தான் பூஜை செய்யும் செய்யும் உரிமையை பண்டாரங்களிடமிருந்து கொடுமுடி என்னும் இடத்திலிருந்து சரஸ்வதி எனும் பிராமணரை அழைத்து வந்து கவிராஜ பண்டிதர் என்னும் பட்டம் கொடுத்து அவருக்கு அந்த உரிமையை வழங்கி பின்னர் பிராமணர்கள் வசமே அந்த உரிமை இன்று வரை இருந்து வருகிறது. இந்த பண்டாரங்கள் பிள்ளை, முதலி, கவுண்டன் பட்டம் கொண்ட வேளாளர்கள் என்பதும் இவர்கள் வலங்கைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதும் வரலாற்று உண்மை. இவ்வாறு தொடர்ந்து ஆய்வு நடத்தி பிராமணர்களின் பூஜை உரிமையை தமிழருக்கே வழங்க அரசு முனைப்பு காட்ட வேண்டும்.