மு.க.ஸ்டாலின் எனும் தமிழர்

0
369

ஆரியர்கள் தமிழகத்தில் புகுவதற்கு முன்னரே தமிழர்கள் குமரிமுனையில் இருந்து இமயமலைவரை பரவியிருந்தனர். கி.மு.4-ம், 3-ம் நூற்றாண்டு வாக்கில் அல்லது அதற்கு முன்பு தக்காணம் முழுவதும் கொடுந்தமிழே பேசப்பட்டு வந்தது. அப்போது வடக்கே பிராகிருதமும் தெற்கே தமிழும் பேசப்பட்டு வந்திருக்கிறது. கொடுந்தமிழ் பேசப்பட்ட தக்காணப் பிரதேசங்களை மொழிபெயர் தேயம் என்பதும் மூவேந்தர்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி என்பதும் வரலாறு. குடகு, துளு, கர்நாடக மற்றும் ஆந்திரா உள்ளிட்ட அதன் கிழக்கே கிருஷ்ணா நதிக்கு கீழ் உள்ள மக்கள் திரள் குறிப்பாக கலைஞர் அவர்களின் மூதாதையர்களின் பூர்வீகம் என்று கூறப்படும் ஓங்கோல் பகுதி திராவிட வரையறைக்குள்ளும் மூவேந்தரின் ஆட்சிக்குட்பட்ட பகுதி என்பதும் அவர்கள் பேசிய மொழி தமிழ் என்பதும் உறுதியாகிறது.
வடுகு/வடுகர் என்பது திசை வழிப்பெயராகவே இருந்திருக்கிறது. இவர்கள் தென்புலத்திலிருந்து பரவிய மக்கள் என்ற வரையறைகளிலிருந்து இன்றைய ஆந்திர, கர்நாடகத்தினர் தமிழர்கள் என்பது அவர்கள் தமிழ்ச் சந்ததியினர் என்பதும் புலனாகிறது. அதோடு மானுடவியல் அடிப்படையில் இசைவேளாள பிரிவினர் தமிழர் என்பதையே பல ஆய்வுகள் நமக்கு உணர்த்துகிறது.

ஆசிரியர்
ந.ரமேஷ்குமார்

நிதர்சனம் பதிப்பகம்
9791103949
விலை ரூ.150/-