மோடியின் 100 பொய்கள் | 17

0
194

ஊழல் குற்றம் சாட்டப்பட்ட 740 எம்எல்ஏக்களும் எம்பிகளும் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்திருக்கிறார்கள் என்று ஜார்கண்ட் முக்தி மோர்ஷாவின் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அவர்களின் மனைவி பாஜகவை குற்றம் சாட்டியுள்ளார்.

வரலாற்றுப் பதிவேடு குற்றவாளிகள்! இந்தப் பட்டியலில் இருப்பவர்கள் எல்லாம் பா.ஜ.க.வில்தான் இருக்கிறார்கள்!32 பக்கங்கள் கொண்ட இந்தப் பட்டியலில், 1977 வழக்குகள் இருக்கும் 261 ரவுடிகள் இருக்கிறார்கள். இவர்களின் பெயர் என்ன? பா.ஜ.க.வில் என்ன பொறுப்பில் இருக்கிறார்கள்? இவர்கள் மேல் என்ன என்ன பிரிவுகளில் வழக்குகள் இருக்கிறது? என்று இந்தப் பட்டியலில் இருக்கிறது.

இதனிடையே
வெறுப்பு பிரசாரம் செய்பவர்கள் கமலாலயத்தில் இருக்கிறார்கள் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

சிறைச்சாலைகளில் இருக்க வேண்டியவர்கள் கமலாலயத்தில் இருக்கிறார்கள் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:- “கமலாலயம் குற்றவாளிகளின் சரணாலயம்! சிறைச்சாலைகளில் இருக்க வேண்டியவர்கள் கமலாலயத்தில் இருக்கிறார்கள்! கலவரத்தை உருவாக்குபவர்கள் கமலாலயத்தில்…! பாலியல் வன்புணர்வாளர்கள் கமலாலயத்தில்…! மதவெறியை தூண்டுகிறவர்கள் கமலாலயத்தில்…!

குண்டு வெடிப்பு குற்றவாளிகள் கமலாலயத்தில்…! குண்டு தயாரிப்பாளர்களும் கமலாலயத்தில்…! ஊழல்வாதிகள் கமலாலயத்தில்…! போலி செய்திகளை பரப்புபவர்கள் கமலாலயத்தில்…! வெறுப்பு பிரசாரம் செய்பவர்கள் கமலாலயத்தில்! மொத்தத்தில் பா.ஜ.க.வின் கமலாலயம் குற்றவாளிகளின் சரணாலயம்” என்று தெரிவித்து உள்ளார்.