பிப்,08,2024 தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அனைத்து ஊழியர்கள் சங்கம் இணைப்பு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தொகுப்பூதிய ஊழியர்களின் பணிநிரந்தரம்,ஊதியம் மறு நிர்ணயம் உட்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மாபெரும் உண்ணாவிரத போராட்டம், 08-02-2024 , வியாழக்கிழமை காலை சென்னை இராஜரெத்தினம் விளையாட்டரங்கம் எதிரே தொடங்கி நடைபெற்றது.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 2023-24 ஆண்டிற்கான வழங்கப்படாத உதியம் உயர்வு ,ஊதியம் மறு நிர்ணயம் செய்து ஊதியம் உயர்த்தி ரூ.35,000,வழங்கிட வேண்டும்,Fellowship என்ற தனியார் ஏஜென்சி பணியாளர்கள் IE சிறப்பாசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கும் இந்த ஆண்டு உயர்த்தி வழங்கப்பட்டது போன்று 1465. பணியாளர்களையும் பணிநிரந்தரம் செய்து வாழ்வாதாரம் பாதுகாத்திட வேண்டியும்,சமூக நலத்துறை ,இந்து அறநிலையத்துறை மற்றும் பிற துறைகளில் பணி நிரந்தரம் வழங்குவது போன்று வழங்கவேண்டும் என்று 12 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைப்பெற்றது. தொகுப்பு 2023-2024 ஆம் ஆண்டிற்கான வழங்கப்படாத ஊதியம் உயர்வு,ஊதியம் மறு நிர்ணயம் செய்து ஊதியம் உயர்த்தி ரூ.35,000-/-வழங்கிட வேண்டும்.Fellowship என்ற தனியார் ஏஜென்சி பணியாளர்கள் IE சிறப்பாசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கும் இந்த. ஆண்டு உயர்த்தி வழங்கப்பட்டது போன்று 1465 பணியாளர்களையும் பணி நிரந்திரம் செய்து வாழ்வாதாரம் பாதுகாத்திட வேண்டியும் சமூக நலத்துறை, இந்து அறநிலையத்துறை மற்றும் பிற துறைளில் பணி நிரந்தரம் வழங்குவது போன்று காலிபணியிடத்தில் விருப்ப பணி மாறுதல் மற்றும் காலியிடம் நிரப்புதல் மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் JACTO-GEO வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் ஆற்றிய உரை செய்தி வெளியீடு எண்:1575, நாள்:19-09-2022 ன் படி எங்களுக்கு விருப்ப பணி மாறுதல் இதுவரையிலும் வழங்கப்படவில்லை மிக குறைந்த தொகுப்பூதியத்தில் தினமும் 50 கி.மீ. மேல் சென்று பணி புரிந்து வருவதால் ஓருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக அனைத்து ஊழியர்களுக்கு விருப்ப பணி மாறுதல் வழங்கிட வேண்டும்.காலியாக உள்ள இடத்திலும் மற்றும் புதியதாக உருவாகிய 7 மாவட்டங்களின் காலியிடத்தில் பணி மூப்பு (Seniority) அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிடவும், காலியாக உள்ள பணியிடத்தில் விருப்ப பணி மாறுதல் செய்திடவும் கேட்டுக்கொள்கிறோம்.
மாற்றுத்திறனாளி ஊழியர்களின் சிறப்பு பயணப்படி உயர்த்திட அரசு ஆணைப்படி G.O.Ms.307 நாள்: 13-10-2017 ன்படி ஓருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் பணி செய்யும் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு பயணப்படியை ரூ.2500-/- ஆக உயர்த்திடவும் அரசாணை (நிலை) எண்:151 நாள்:16-10-2008 படி மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கும் பணி நிரந்தரம் வழங்கிட கேட்டுக்கொள்கிறோம். SNA பணிகளுக்குரிய (Work Allocation) வேலை பங்கீடு வேண்டும்.SNA ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாக மேற்கொள்ளப்படுகின்ற பணிகளுக்கு Accounts Manager,Block Accountant,SMC Accountant என தனிதனி பணி ஓதுக்கீடு (Work Allocation) தனித்தனியாக வழங்கிடவும் வேண்டும். அந்தந்த பணியிடத்திற்கேற்ற ஊதியம் வழங்கிட வேண்டும்.மாநில திட்ட அலுவலகத்திற்கு நிர்வாக காரணமாக பணி மாற்றம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கும் அந்தந்த பணியிடத்திற்கு வழங்கப்படுகின்ற ஊதியத்தை வழங்கிட வேண்டும்.தினக்கூலி ஊழியர்களை தொகுப்பூதிய ஊழியர்களாக்கிட வேண்டும்.தஞ்சாவூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் 2013-14 ஆம் ஆண்டிலிருந்து தினக்கூலியாக பணி செய்து வருகின்றவர்களை தொகுப்பூதிய ஊழியர்களாக்கி பணி நிரந்தரம் செய்திட வேண்டும். குறைக்கப்பட்ட கல்வி தகுதியை மாற்றிடவும் மற்றும் ஊக்க தொகை வழங்கிடவும் கணினி விவரப்பதிவாளர்கள் மற்றும் கணினி வகைப்படுத்துநர்கள் 2014-ல் குறைக்கப்பட்ட கல்வி தகுதியினை ஏற்கனவே 2011-ல் உள்ளது போன்று இருந்திட மாற்றம் செய்திடவும்,வழங்கப்படாத பயணப்படியினை (FTA) வழங்கிட வேண்டும்.இரண்டு SMC கணக்காளர்தேவைக்கு 1 நபர் இருந்தால் முன்பு வழங்கியது போல் ரூ.3000+ரூ.500 சேர்த்து ரூ.3500 யை வழங்கப்படாத மாவட்டங்களில் விரைவில் வழங்கிட வேண்டும். ஓய்வூதியம் வழங்கிடவும்,பிற துறைகளைப்போன்று குறைந்த பட்சமாக ஓய்வூதியம் ரூ.9000-/-வழங்கிட வேண்டும்.குடும்ப நல பாதுகாப்பு நிதி வழங்கிட வாழ்வாதாரம்! பாதுகாக்க ஓருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு குடும்ப நல பாதுகாப்பு நிதியாக ரூபாய் .10,00,000 (பத்து இலட்சம் ) வழங்கிட வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டில் இணைத்து பயன்பெற்றிடும் வகையிலும் செயல்படுத்த வேண்டும் என்ற 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த ஓருங்கிணைந்த பள்ளிக்கல்வி பல்வேறு நிலை தொகுப்பூதிய பணியாளர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இதை அறிந்த தமிழ்நாடு அரசு தமிழக கல்வித்துறை முதன்மை செயலாளர் அவர்களை சந்திக்க காவல்துறை மூலம் மாலை 3.மணிக்குமேல் சங்கபிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பேச்சுவார்த்தையின்போது தமிழ்நாடு ஓருங்கிணைந்த பள்ளிக்கல்வி அனைத்து ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் ஜே.வாலன்றின் பிரிட்டோ அவர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளார். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர்,அவர்கள் சமக்ர சிக்க்ஷா, மாநில திட்ட இயக்குநர் M.ஆர்த்தி இ.ஆ.ப.அவர்களிடம் 12 அம்சகோரிக்கைகளையும் தெரிவித்து , ஊதிய உயர்வு மறுபரிசீலனை செய்வதாகவும் தெரிவித்ததாகவும் இந்த உண்ணாவிரத போரட்டத்தில் அறிவித்து மாலை 5 மணிக்கு உண்ணாவிரதம் நிறைவுபெற்றது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அனைத்து ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவர் திரு.ஜே.வாலன்றின் பிரிட்டோ,அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திருமதி.கு.விஜயலஷ்மி, மாநிலத்துணைத்தலைவர்,மாநில பொதுச்செயலாளர் க.லெட்சுமணன், மாநில பொருளாளர் எஸ்.மகாலிங்கம், தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம் ,மாநிலத்தலைவர் பொன்.ஜெயராம் , தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகள் ஆதரவுடன் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு நிலை தொகுப்பூதிய பணியாளர்கள் திரளாக இந்த உண்ணாவிரதப்போராட்டத்தில் கலந்துகொண்டனர்.