ஜாலியன் வாலாபாய் படுகொலையை ஆதரித்து ஜஸ்டிஸ் கட்சி ஆதரவாக தீர்மானம் போட்டது என்று 2021ம் தேதி பா.ஜ.க.மாநில பொதுச்செயலாளர் இராம.சீனிவாசன் பொய்ச் செய்திகை வெளியிட்டார். இது பொய்ச் செய்தி என்று தெரிந்தாலும் பரப்பி விடுவதற்கு இவர் பேராசிரியராக இருப்பதால் இவர் பயன்படுகிறார். அவருக்கு பொய் என்று அனைத்து மறுப்புகளும் வழங்கப்பட்டுவிட்டன. இதற்கு முன்பு துக்ளக், தினமணி என்று மக்கள் செல்வாக்குள்ள பல தளங்களை பயன்படுத்துவார்கள். ஒஙவவொரு முறையும் இதற்கு மறுப்புகள் ஆதாரத்துடன் வெளிவந்தது. ஆனாலும் இந்த அவதூறுகளை இன்று வரை சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.
தண்டனை இல்லை என்பதால் பொய் பரப்புவதை உற்சாகமாக செய்கிறார்கள்.
பொய்யை அவ்வப்போது பரப்பி வெறுப்பை எற்படுத்துவதுதான் இவர்களின் நோக்கம்.
தற்போது ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு ஆதரவாக அமைச்சர் பிடிஆர் தியாராஜனின் தாத்தா
செயல்பட்டதாக பலரும் பிடிராஜன் சார்ந்த கட்சி என்று பலரும் இரண்டு விதமாக போலியாக வரலாற்றை வெளியிட்டு மிகவும் மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக தீவிர சங்கிகள்.
மறுப்பு 1
ஜாலியன் வாலா பாக் படுகொலை நடைபெற்றது 1919 ஏப்ரல் 13 ஆம் நாள்! அப்போது நீதிக்கட்சி ஆட்சிக்கே வரவில்லையே!! 1920 இறுதியில்தான் தேர்தல் நடைபெற்றது. அதுவும் பிடிராஜன்
சென்னை மாகாணத்தின் முதல்வராக 4 ஏப்ரல் 1936 முதல் 24 ஆகஸ்ட் 1936 வரை (143 நாட்கள்) இருந்தார். ஆக இந்த படுகொலைக்கு நீதிக்கட்சி காரணமல்ல. பிடிராஜன் அவர்களும் காரணமல்ல.
இந்த சம்பவத்திற்கு நீதிக்கட்சி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது பச்சைப் பொய். அதையும் பார்ப்போம்.
மறுப்பு 2
ரவுலத் சட்டத்தை எதிர்த்துத்தான் ஜாலியன் வாலா பாக் போராட்டம் நடைபெற்றது. அந்தச் சட்டத்தை எழுதியவர் சிட்னி ரவுலத் மட்டுமில்லை. அவரையும் சேர்த்து மொத்தம் ஆறு பேர் அந்தக் குழுவில் இருந்தனர். அவர்களுள் ஒருவர், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. குமாரசாமி சாஸ்திரி! எனவே சாஸ்திரியும் உடன்பட்டுக் கொண்டுவந்த சட்டத்தால் மக்கள் அன்று கொல்லப்பட்டனர். சங்கிகளின் கூற்றுப்படி பஞ்சாப்பில் நடைபெற்ற கொலைகளை அறங்கேற்ற போடப்பட்ட குழுவில் இருந்த பிராமணர் மற்றும் ஆங்கிலேய அரசும் செய்த கொலை பெரிதா. அல்லது நீதிக்கட்சி கண்டிக்காதது பெரிதா.
இதில் இவர்கள் கூறுவது போல நீதிக்கட்சி கண்டிக்கவில்லை என்பது மற்றொரு பொய்.
மறுப்பு 3
“நான்காவது பார்ப்பனரல்லாதார் மாநாடு” சென்னையில் நடந்தது. அந்த மாநாட்டில் ஜாலியன் வாலாபாத் படுகொலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த மாநாட்டில் இந்த விஷயத்தில் அரசு பொறுப்புடன் செயல்பட்டு குற்றச் செயலில் ஈடுபட்ட அனைவரையும் தண்டிக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது குறித்து என்.ஏ.வி.சோமசுந்தரம் பிள்ளை பொதுமக்களிடம் பேசும்போது, ‘ஹண்டர் கமிட்டியின் அறிக்கை பிரிட்டிஷ் நீதித்துறையின் மீதான நம்பிக்கையைக் குறைக்கிறது. இந்த அறிக்கையில் அதிகக் குற்றம் இழைத்தவருக்கு மிகச் சாதாரண தண்டனைகளும், மற்றவர்கள் விடுவிக்கப்பட்டதும் நியாயமற்றது’ என்றார். கிருஷ்ண நாயர் கூறும்போது, ‘இங்கிலாந்து வரலாற்றில் பஞ்சாப் நிகழ்வு ஒரு கரும்புள்ளி. மேலும் பிரிட்டிஷ் அதிகாரிகள் ஜெனரல் டயரை மேம்போக்காக விசாரித்த விதம் கண்டனத்துக்குரியது.
மேலும் ஜெனரல் டயர் மனிதத்தன்மையற்று சுடச் சொன்னதும், காயமடைந்தவர்களைக் கொடுமைப்படுத்தியதும் அதற்காக அவருக்கு சிறிய அளவிலான தண்டனை அளிக்கப்பட்டதும் பிரிட்டிஷ் நீதித் துறையையும், அறத்தையும் அசைத்துப் பார்த்துள்ளது’ என்று பேசினார் ” என்பதுதான் உண்மை வரலாறு.
இந்தச் சட்டத்தின்கீழ் எந்த இந்திய பிரஜையையும் பிணைஆணை இல்லாமல் கைது செய்யலாம், விசாரணை இன்றி சிறைப்படுத்தலாம், கூட்டங்களில் பங்கெடுக்கத் தடைவிதிக்கலாம், குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வசிக்க நிர்பந்திக்கலாம் என்ற ரவுலத் சட்டத்தை எதிர்த்துத்தான் ஜாலியன் வாலா பாக் போராட்டம் நடைபெற்றது. இந்த படுகொலைக்கு காரணமான ஆளுநரை (வைஸ்ராயைத்) திரும்பப்பெற வேண்டும் என்று அமிர்தசரஸ் காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியபோது அதனைக் கண்டித்து வெளியேறியவர்கள் சர்.சி.பி.இராமசாமி அய்யரும், சீனிவாச சாஸ்திரியும்தான். ஆக ஆங்கிலேய அடிவருடிய யார் என்பது நன்கு விளங்கும்.
மறுப்பு 4
கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி தனது ‘விடுதலைப் போரும் திராவிட இயக்கமும்‘ என்னும் நூலை முன்வைத்து உருட்டல்களை அறங்கேற்றி வரும் சூழலில் யார் இந்த பி.இராமமூர்த்தி என்பதை முதலில் பார்ப்போம்.
காங்கிரஸ் கட்சி தொண்டராக, காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி தலைவராக, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் பி.இராமமூர்த்தி. அவரது பொதுவாழ்க்கை போற்றப்பட வேண்டியதுதான். ஆனால்…
பிறப்பால் அவர் ஒரு பிராமணர். காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளர். இராஜஜியின் நெருங்கிய நண்பர். ஆக இயல்பாகவே நீதிக்கட்சியின் எதிர்ப்பு மனம் இருப்பது இயல்பு. அந்த அடிப்படையிலேயே நீதிக்கட்சிக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
காங்கிரஸ் ஆதரவாளர் பி.இராமமூர்த்தி என்னும் பிராமணர் அவர்களின் வெறுப்பை பார்ப்போம்.
ஆங்கிலேயருக்கு ஆதரவாக கட்சியின் சார்பில் நீதிக்கட்சி அறிக்கை வெளியிட்டதோடு ஜெனரல் டயர் கூறிய அதே காரணத்தை நீதிக்கட்சியும் கூறியது. பிரிஷ்டிஷ் ஆட்சிக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் ஆதரிக்காது என்று ஜஸ்டிஸ் கட்சியின் ஆரம்ப அறிக்கையிலேயே பறைசாற்றி இருந்தார்கள் என்றும் அதுமட்டுமல்லாமல் பிரிட்டீஷ் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியை முளையிலேயே கிள்ளி எறிவதற்கான எத்தனை இந்திய மக்களின் ரத்தத்தையும் கண்டு களிப்போம் என்று பறைசாற்றி இருந்தார்கள் நீதிக்கட்சியினர் என்று இவரே இட்டுக்கட்டி குறிப்பிடுகிறார். இது நீதிக்கட்சி வெளியிட்ட அறிக்கையின் சாராம்சம் என்று இவரின் முடிவு.
ஆனால் நீதிக்கட்சி வெளியிட்ட அறிக்கையில் வன்முறையையும் ஆங்கிலேயர்களின் துப்பாக்கிச் சூட்டையும் கண்டித்தனர். ஆனால் வன்முறை வெடித்தது. கலவரத்தை கட்டுப்படுத்த ஆங்கிலேயர்கள் ஆயுதப்பிரயோகம் செய்தனர் என்ற வரியை வைத்துக்கொண்டு இட்டுக்கட்டுவது நியாயமற்றது.
காந்தி ஆங்கிலேயருக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை கைவிட்டார் என்பது வரலாறு. இதனாலேயே அலகாபாத்திலிருந்து பி.இராமமூர்த்தி சென்னைக்கு திரும்பினார் என்பது அவரது வாழ்க்கை குறிப்பிலிருந்து எடுக்கப்பட்ட தகவல். ஆக இதுதான் காங்கிரசின் ஆங்கிலேயே எதிர்ப்பு. அதோடு காங்கிரஸ் கட்சி முஸ்லீம்களுக்கு எதிராக செயல்பட்டு இந்திய சுதந்திரத்தை காலம் தாழ்த்தியது. சுபாஷ சந்திரபோஸ் வெற்றி பெற்றால் அதன் மூலம் கிடைக்கும் சுதந்திரத்தல் பிராமணர்களின் உச்சபட்ச அதிகாரத்திற்கு பங்கம் ஏற்படும் என்பதாலேயே சுபாஸ் சந்திரபோசுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். காங்கிரசும் படைத்திரட்டிக் ஆங்கிலேயனுக்கு ஆதரவாக செயல்பட்டது என்பதுதான் உண்மையான வரலாறு.
ந.ரமேஷ்குமார்
நன்றி: மாபொசி. ப.திருமாவேலன், முரசொலி, சுபவி.
