தமிழக அரசு நூற்றுக்கணக்கான திட்டங்களை வகுத்து அதனை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனிடையே அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்க மக்களுடன் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்துகள்! அரசு நிர்வாகத்தில் உள்ள அனைத்து மட்ட அதிகாரிகளும் ஒன்று வேலைப்பளுவில் இருக்கிறார். இல்லையென்றால் வேலை செய்யாமல் லஞ்சம், ஊழல், முறைகேடு, அதிகார துஷ்பிரியோகம் செய்து பழக்கப்பட்டு விட்டார்கள். சேவை பெறும் மக்களை சந்தித்தால் அருவெறுப்பாக பார்க்கும் மனோபாவம் இருக்கிறது. இவர்களை மனம் மாற்ற உளவியல் மற்றும் சிறப்பு அணுகுமுறையை அரசு வகுக்க வேண்டும்.
அந்த திட்டம் நிறைவேற்ற பட்ட இலக்கை அடைந்ததா அதாவது பயனாளர்களுக்கு சென்றடைந்ததா என்பதை தமிழக அரசு தனியாக குழுக்களை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். இதில் முறைகோடு, நிர்வாக சிக்கல், ஊழல் ஆகியவற்றையும் மக்களிடம் அந்த திட்டம் குறித்து போதிய விழிப்புணர்வு இருக்கிறதா அதுபோல மக்களின் கருத்து என்ன என்பது குறித்தும் குழுக்களின் மூலம் தகவல் சேகரித்து அந்த தகவல்களின் அடிப்படையில் பெருந்தன்மையுடன் சீர்திருத்தம் செய்ய வேண்டும். அதிகாரி, அலுவலர்களுக்கு மக்களுக்கு உள்ள இடைவெளியை குறைக்க வேண்டும்.
குறிப்பாக பத்திரிகையார்களுக்கு வழங்கப்படும் அரசு அடையாள அட்டை, அங்கீகார அட்டை வழங்குவதில் கெடுபிடிகள் அதிகம் விதிக்கப்பட்டிருப்பது, பதிப்பு தொழில் சார்ந்த ஏற்படுத்தப்பட்ட நலவாரியம் மற்றும் பத்திரிகையார்கள் நல வாரியம் ஆகியவை செயல்படாமல் இருப்பது அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.
நலவாரியத்தின் பயன்களை வழங்குவதில் கண்காணிப்பதில் செயல்படுவதில் அரசு அக்கறை காட்டவில்லை. துறை சார்ந்தவர்களும் அக்கறை காட்டவில்லை. பதிப்பாளர்கள் யாரும் அரசுக்கு கோரிக்கை கூட வைக்கவில்லை. எங்கே கோரிக்கை வைத்தால் திமுகவிற்கு எதிராக தங்களை கட்டமைத்துவிடுவார்களே என்ற அச்ச உணர்வும் பலருக்கும் இருக்கிறது. இந்த விவகாரத்தில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்.
பப்பாசி மற்றும் பத்திரிக்கையாளர் சங்கத்தில் உள்ள அதிகாரப் போட்டி, முறைகேடுகள் குறித்து பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அதனை உடனடியாக தலையிட்டு தீர்க்க வேண்டும்.
தற்போது மருமகன் சபரீசன் நிர்வாக மற்றும் பொதுமக்கள் சார்ந்த குறைகளை கண்டறிந்து அதற்கு தீர்வு கண்டுவந்தார். ஆனால் போலியாக கட்டமைக்கப்பட்ட சபரீசன் மீதான சவுக்கு சங்கர் போன்றோரின் பல கதைகளால் தற்போது அவர் ஒதுங்கி இருக்கிறார்.
முதல்வருக்கு பல பிஏக்கள் இருந்தாலும் இவர்களை அனைவரும் பொறுப்பை எடுத்துக்கொண்டு அரசு அதிகாரிகளை வேலை வாங்குவதில் கவனப்படுத்தி பிரச்சனைகளை தீர்ப்பதில்லை. எல்லாம் வெறும் சோம்பேறித்தனம் தான் காரணம்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலைப்பளுவின் காரணம் திங் டேக் என்று சொல்லக்கூடிய அறிவு ஜீவிகள் அவரிடம் இது போன்ற விவரங்களை கவனப்படுத்துவதில்லை. இதனை சொன்னாலும் என்கிட்ட இதெல்லாம் கொண்டு வராதீங்க என்று சொல்லவும் செய்வார். அதனால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படாமல் இன்னும் தொடர்ந்துக்கொண்டு இருக்கிறது. சாலை வசதி குறைபாட்டால் தமிழகம் அல்லாடுகிறது.
சபரீசனை செயல்பட விட வேண்டும். அவர் தலைமையில் மக்களின் கருத்தை குறைகளை நீண்ட நாள் கோரிக்கைகளை கேட்டு அதனை அரசு நிறைவேற்றித் தர வேண்டும். இல்லை என்றால் ஆட்சியை இழப்பது உறுதி.
முதல்வர் அரசு அதிகாரிகளை நம்பி ஏமாறாமல் அரசு அதிகாரிகளை ஒன்றிணைக்கவும் வேலை வாங்கவும் தனியாக குழுக்களை அமைத்து செயல்படவும் முழு அதிகாரத்தை சபரீசனுக்கு வழங்க வேண்டும். அவர் பின்னணியில் இருந்து செயல்பட்டால் மட்டும் மோசடிப் பேர்வழிகளிலிருந்து தமிழகம் தப்பிக்கும். அதற்குண்டான சோம்பேறித்தனமில்லாத உழைப்பு, தகவல் சேகரிப்பு, நடைமுறைப்படுத்தும் திறமை அவருக்கு உண்டு என்பது அனைவருக்கும் தெரியும்.
