தமிழகத்தில் வசிப்பவர்கள் தமிழர்களா இல்லை திராவிடர்களா…?

0
674

வெள்ளைக்காரனிடமிருந்து இந்தியாவை 3% பிராமணர்கள் தங்களின் ஆதிக்கத்தில் கொண்டு வர எவ்வளவோ முயற்சித்தார்கள். ஆர்.எஸ்.எஸ். மற்றும் காங்கிரசைச் சார்ந்த பெரும்பான்மையான பிராமணர்கள் முஸ்லீம்களுக்கு எதிராக கலவரங்களை அரங்கேற்றி அவர்களை கொன்றழிக்க முற்பட்டார்கள். ஆனால் இந்தியா பிராமணர்களின் முழு ஆதிக்கத்தின் கீழ்ச் சிக்கவில்லை. சம்பிரதாயமாக பிராமணர்களின் சடங்கு முறையைத் தவிர்த்து வேளாளர்களின் முறைப்படி ஆதீனம் வழியாக நேரு உள்ளிட்ட இந்தியத் தலைவர்களிடம் வழங்கப்பட்டது. அரசியல், சமூக பொருளாதாரத்தில் பலம் படைத்த பிராமணர்களின் (காங்கிரசின்) கையில் கொடுக்கப்பட்டதால்தான் இன்னும் முழுமையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியவில்லை. அவர்களின் ஆதிக்கம் உள்ள நீதிமன்றத்திடம், பாராளுமன்ற, நாடாளுமன்றத்திலும் கெஞ்சிக் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

ஆனால் தென்னிந்தியாவில் நிலைமை அப்படியில்லை. அதற்கு முக்கியக் காரணம் தென்னிந்தியாவில் கட்டமைக்கப்பட்ட நீதிக்கட்சியின் எழுச்சியும் அது ஏற்படுத்திய இந்திய அளவிலான தாக்கமும் ஒரு காரணம்.

100 ஆண்டுகால வரலாற்றுப் பின்னணியில் இருந்து தமிழர் திராவிடர் வரையறையை நாம் அணுக வேண்டும்.

தென்னிந்தியக் கட்சியான நீதிக்கட்சி 3% பிராமண ஆரிய வந்தேறி மக்களிடமிருக்கும் அனைத்து உரிமைகளையும் 97% உள்ள இந்த மண்ணின் மக்களான திராவிடர்களுக்கு பரவலாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. அதன் பொருட்டே இந்த வார்த்கையை அரசியல் வார்த்தைகளாக இன்று வரை பயன்படுத்தி வருகிறோம்.
அதே போலத்தான் இன்னும் அதிகாரம் பரவலாக்கப்படாத சூழல் நிலவுகிறது. சென்னையிலிருந்து பிரிந்து போன தெலுங்கர்கள், கன்னடர்கள், ஆந்திரர்கள், (மலையாளிகள் நீங்கலாக) முழுவதுமாக பிராமண எதிர்ப்பிலிருந்து வடஇந்தியாவைப்போல கரைந்த அடிமை மனோநிலைக்கு போய் விட்டார்கள்.

ஆனால் தமிழர்கள் அந்த அடிமை நிலைக்கு எதிராக இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு அவர்கள் சொல்லும் முழக்கம்தான் திராவிடம். பிராமணர்களைத் தவிர ஏனையோர் அனைவரையும் ஒன்றிணைக்கும் சொல் தான் அது.

இந்தியாவை இன்றைக்கு சாதி, மத அடிப்படையில் பிளவுபடுத்தி வரும் ஆர்.எஸ்.எஸ். இன ரீதியானப் பிளவையும் இங்கே ஏற்படுத்தி வருகிறது. அதற்கு நமது கவசமான தமிழ் தேசிய அரசியலையே ஆயுதமாக மாற்றியிருக்கிறது. நம் விரலை வைத்தே நம் கண்களைக் குத்தப் பார்க்கிறது. தனி நாடு அரசியலையும் தன்னாட்சி உரிமை முழுக்கத்தையும் அர்த்தப்படுத்தும் தமிழ் தேசிய அரசியலைப் பின்னுக்குத் தள்ளி அதன் அர்த்தத்தை மாற்றி ஆரியத்திற்கு எதிராக உள்ள திராவிட கூட்டமைப்பை உடைக்கவே நம்மவர்களையே அடியாட்களாக பயன்படுத்துகிறது ஆரியம்.

தமிழகத்தில் இருக்கிற 2 கோடி தெலுங்கு, மலையாளி, கன்னடர்களின் ஓட்டுக்களை பா.ஜ.க.வுக்கு திருப்பும் வேலையைத்தான் இன்றைக்கு தமிழ் தேசிய அரசியல் என்கிற பெயரில் சீமான் செய்து வருகிறார். தமிழ் இன அடையாளத்தைப் பேசித் தமிழர்களுக்கும் தெலுங்கு, கன்னட, மலையாளி இன்னபிற மக்களிடையே பகைமையை வளர்த்துக் கலவரச் சூழலை ஏற்படுத்தி ஏதாவதொரு குழுவைத் தங்களிடம் சரணடையச் செய்யலாம் என்று நினைக்கிறார்கள் ஆரியர்கள்.

இதற்கு முன்பு தேவேந்திர குல வேளாளர் அரசாணை மற்றும் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு விவகாரம், பல சாதிப்பிரிவினரிடையே கோயில் வழிபாட்டு முறைகளை வைத்தும் குடிநீர்த் தொட்டியில் மலத்தை கலப்பது, காதல் விவகாரங்கள் என பல்வேறு கலவரச் சூழல்களை ஏற்படுத்தியும் அவர்கள் நினைத்தபடி மிகப்பெரிய பிரச்சனையாக மாற வில்லை. அவர்கள் எண்ணமும்
ஈடேறவில்லை.

இந்த ஒரு புரிதலோடு இந்தத் தமிழ்நாட்டு மண் இருந்து வருகிறது.

இன்னும் தெளிவு பெற இந்திய வரலாற்றை நாம் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.
1
தெற்காசியா முழுவதும் திராவிட நாடு. இது 3700 ஆண்டுகளுக்கு முந்தைய நிலை. திராவிட நாடு என்று அம்பேத்கார் அவர்களே குறிப்பிட்டுள்ளார்.

2
3700 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது கி.மு.1700 லிருந்து கி.பி. 2000 ஆண்டு வரை ஆரியர்கள் இங்கே வந்து ஊடுருவி பல மன்னர்களின் படையெடுப்பால் தென் தமிழகத்தைத் தவிர ஏனைய இந்தியப் பகுதிகள் அடிமைப்படுத்தப்பட்டன. இந்திய நிலப்பரப்பில் அப்படி பல்வேறு ஊடுருவல்களால் கலப்பு அதிகம் ஏற்பட்டது. அதனால் அவர்களுக்கு சார்பானவராக மக்கள் மாறத் தொடங்கினார். ஆனால் மூவேந்தர்கள் கட்டுப்பாட்டில் அவர்களின் ஆதரவில் தென் தமிழகத்தை பிற மன்னர்கள் நெருங்க முடியவில்லை.

3.
கடந்த 2000 ஆண்டு காலமாக போர் மூலம் வெற்றி கொள்ள முடியாமல் தென்னிந்திய நிலப்பரப்பில் மன்னர்களால் சடங்கு, கோயில் பணிகளுக்காக உள்ளே நுழைந்த 1000க்கணக்கான ஆரியர்கள் இங்கே பெரிய அளவில் கலப்பில் ஈடுபட முடியவில்லை.

அதனால் கி.பி.1800 வாக்கில் ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்கள் ஆரியர் – ஆரியர் சார்பு மற்றும் திராவிடர் திராவிடர் சார்பு என்ற இருவேறு குழுக்கள் என்று முடிவுக்கு வந்தார்கள். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் தமிழ் வம்சாவளியினர் என்று சொல்லலாம்.

தமிழ் வம்சாவளியினர் என்று சொல்லாமல் ஏன் அவர்கள் திராவிடர் என்று ஏன் சொல்ல வேண்டும் என்ற கேள்வி வரும்.
தமிழர் என்று தமிழிலும் திராவிடர் என்று சமஸ்கிருதத்திலும் திரவிடியன் என்று ஆங்கிலத்திலும் அழைப்பார்கள். மொழிதான் வேறு. அம்மா என்பது தமிழ். மதர் என்பது ஆங்கிலம். மாதா என்பது ஹிந்தி. அதைப்போல.

வில்லியம் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேயரிடம் பார்ப்பனர்கள் இந்தியாவின் பண்பாடு என்பது ஆரிய வேதப்பண்பாடு மட்டுமே என்றும் மூல மொழி சமஸ்கிருதம் என்று சொல்லி நம்ப வைத்தார்கள்.
சமஸ்கிருதம் ஆதிக்கம் அப்போது அதிகம் ஆனது. ஆனால் அதன் பிறகு எல்லீஸ் என்பவர் பிராமணர்களின் பொய் புரட்டுகளை உடைத்து ஆரியர், திராவிடர் என்று இரு வேறு பண்பாட்டையும் இரு வேறு மொழிக்குடும்பத்தைப் பற்றிய ஆய்வு மேற்கொண்டு அதனை வெளியிட்டு பிராமணர்களின் சூழ்ச்சி பொய்களை உடைத்தார். பின்னர் வந்த கால்டுவெல்ட் உள்ளிட்ட பல்வேறு ஆய்வாளர்கள் அதனை உறுதிப்படுத்தினர்.

பொதுவாக இங்கே ஆரியக்கலப்பான மக்களை வடஇந்தியர் என்றும் கலப்பில்லாத மக்களை தென்னிந்திய மக்கள் என்றுதான் பிரித்தார்கள் ஆய்வாளர்கள். அதுபோல இருவேறு மொழிகள் குறித்தும் சமஸ்கிருதத்தை சாராத அதற்கும் முந்தைய மொழி என்றும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு உள்ளிட்ட சில மொழிகளை குறித்தார்கள். அப்போது சமஸ்கிருத மொழி ஆதிக்கம் நிலவியது. அதனால் அரசு மற்றும் அலுவல்களில் சமஸ்கிருதமே அதிகம் பயன்படுத்தப்பட்டன. தமிழுக்கு அடுத்தபடியான சமஸ்கிருத கல்வெட்டுகள் அதிகம் இருந்தது இதற்கு ஒரு சான்று.

ஆக அந்த அடிப்படையில் தமிழுக்கு வேதத்தில் அவர்களின் புராண இதிகாசத்தில் நம் மொழியான தமிழைத் திராவிட என்று பிராமணர்கள் எழுதி வைத்திருந்தனர். அதனால் தமிழ் மொழிக்குடும்பம் என்பதற்கு அவர்களின் புழக்கத்தில் அலுவல்களில் ஆதிக்கம் செலுத்தி வந்த சமஸ்கிருதத்தில் உள்ள அந்த வார்த்தையை கொண்டே அழைத்து விட்டனர்.
சமஸ்கிருதம் கலந்த மொழிகளை (இந்தோ ஆரியம்) ஆரியம் என்றும் சமஸ்கிருதம் கலக்காமல் தமிழை வேர்ச்சொல்லாகக் கொண்டு தமிழிலிருந்து பிரிந்த மொழிகளை திராவிடம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு கால்டுவெல் கொடுக்கும் விளக்கம் என்னவென்றால் தமிழ் மொழிக் குடும்பத்தை அழைக்கத் தமிழ் என்று குறிப்பிட முடியாது. ஏன் என்றால் தமிழ் என்ற சொல் தமிழ் மொழியைக் குறிக்க ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வழக்கத்தில் இருக்கிறது. தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற இன்ன பிற மொழிகளை கூட்டாக பயன்படுத்த ஒரு சொல் வேண்டும். அப்படி பெயர் வைப்பது சிரமம் என்பதால் ஆரியர்கள் நம்மை குறிப்பிட்டிருந்த திராவிடம் என்ற சொல்லையே பயன்படுத்திக் கொண்டார் என்ற காரணத்தையும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆரியர்கள் தமிழை ஏன் திராவிடம் என்று குறித்தார்கள் என்பதையும் தெரிந்து கொள்வோம்.
பல்வேறு கல்வெட்டுக்கள் தமிழரைத் தமிட, தமில, தமிர என்று குறிக்கிறது. இதற்கு காரணம் பண்டைய காலத்தில் வழக்கத்தில் இருந்த பிராகிருத மொழிகளில் ழ, ள, ற, ன கிடையாது. அதுபோல சமஸ்கிருதத்தில் த என்ற வார்த்தையை த் என்று திரித்து பயன்படுத்துவது அதன் மரபு.
”தமிழே திராவிடம் என்று திரிந்தது, இது ஒரு திசைச் சொல்லாகும்(தமிழம்>த்ரமிளம்>த்ரமிடம்>த்ராமிடம்>த்ராவிடம் என்று மருவியிருப்பதாகவும்” பாவாணர் கூறுகிறார்.

கன்னடன், தெலுங்கன், மலையாளி பிரிந்து போய் விட்டான். இப்போது நாம் மட்டும் ஏன் நம்மைத் திராவிடன் என்று சொல்ல வேண்டும் என்கிறீர்கள்…

நாம் தமிழர்கள் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. நாம் யாருக்கும் நிருபிக்கவும் தேவையில்லை. இங்கே இன்னும் ஆரிய திராவிட யுத்தம் முடியவில்லை. ஆரியம் பா.ஜ.க.வின் பேரில் யுத்த வடிவத்தைக் கைவிட்டு விட்டு ஓட்டு அரசியல் வடிவில் வந்து நிற்கிறது.

3700 ஆண்டு வாக்கில் இந்தியாவில் நுழைந்து பின்பு 2000 ஆண்டுக்கு முன்பு தென்னிந்தியாவில் நுழைந்து தற்போது இந்த 2024ல் தமிழ் நாட்டையும் அபகரிக்கப் பார்க்கிறார்கள். அவர்கள் இந்த மண்ணை அபகரிக்க 3700 ஆண்டுகளாகப் பேராடுகிறார்கள். இந்த மண்ணில் 1000 வருடங்களுக்கு மேலாக வாழ்கிற நம் சந்ததியினராக நமது மரபணுவோடு தொடர்பு கொண்ட நம் சகோதரர்களான மலையாளி, கன்னட, தெலுங்கர்கள் 2 கோடி பேரைச் சேர்த்துக் கொண்டு நாம் போராட வேண்டும்.

நம் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தெலுங்க, கன்னட, மலையாளிகளுடன் திருமண பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு ரத்த உறவை சொல்லித்தான் ஒற்றுமையாக ஆரியர்களை எதிர்த்தார்கள் என்பது வரலாறு.

எனவே இந்த 3700 ஆண்டு கால அரசியல் புரியாமல் தமிழர் என்று இந்த மண்ணில் இருக்கும் தெலுங்கு, கன்னட மலையாளிகளைப் பகைத்தால் ஆரியம் நம்மைப் பிரித்தாண்டு இந்த மண்ணையும் எளிதில் வெற்றி கொண்டு விடும்.

ஆக நமக்கு தேவை இந்த மண். நமக்குள்ள சண்டையைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். எந்த தெலுங்கனாவது, கன்னடனாவது, மலையாளியாவது நம்மைத் தமிழன் இல்லை என்று சொன்னானா. சொன்னால்தானே பிரச்சனை. திராவிடக் கோட்பாட்டை கைகளில் ஏந்தி குறைந்தபட்சம் தமிழக நிலபரப்பிலாவது தெலுங்கன், கன்னடன், மலையாளிகளோடு தமிழன் ஒற்றுமையோடு இருந்து பா.ஜ.க.வை விரட்டட்டும் . பிராமணர் அல்லாதோர் கூட்டியக்கம்தான் இந்த திராவிடம்.

……..

சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

QR Code வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.