13.2.2024 அன்று மாலை 6 மணிக்கு சென்னை வடபழனி பிரசாத் லேப் எதிரில் உள்ள தேநீர் கடையில் தேனீர் அருந்திய படி ராசி அழகப்பன் எழுதிய “ புனைவியம் ” என்ற காதல் கவிதை நூல் அறிமுகம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஊடகவியலாளர் தாய் பிரபு, எழுத்தாளர் சுந்தரபுத்தன், ஊடகவியலாளர் சுந்தர், பத்திரிகையாளர் தேனி கண்ணன், இயக்குனர் நூலாசிரியர் ராசி அழகப்பன், ஊடகவியலாளர் சங்கர், இயக்குனர் பாக்கியராஜ் பரசுராமன், இயக்குனர் வீரசிங்கம் மற்றும் புதிய நாளிதழ் ஆசிரியர் மற்றும் பல தோழர்கள் பங்கேற்று வாழ்த்திப் பேசினர்.
பரபரப்பான சென்னை வடபழனியில் அதிகம்பேர் குழுமும் தேநீர் கடையில் இதுபோன்ற கவிதை நூல் டீ அருந்தியபடி இயல்பாக அறங்கேறியதை அங்கிருந்தவர்கள் புதுமையான நிகழ்வாக கண்டுகளித்தனர்.






