சென்னை தலைமைச் செயலகத்தில் சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இதில் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் சிறுபான்மையினர் நலன்
குறித்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
இதற்க்கு முன்னதாக தமிழகத்தில் உள்ள தலைசிறந்த இஸ்லாமிய அமைப்பினர் தங்களது கோரிக்கைகளை தலைமை செயலகத்தில் நடந்த கூட்டத்தில் முன் வைத்தனர். தென்னிந்திய தர்காக்கள் மற்றும பள்ளிவாசல்கள் அசோசியேசன் சார்பாக அதன் தலைவர் கலீபா சாஹிப் அந்த கூட்டத்தில் “ நீ கொடுத்திற்கே நன்றி சொல்ல முடியவில்லை இன்னும், இனி அடுத்தடுத்து கேட்பதற்க்கு அஞ்சுதே என் உள்ளம் என்ற இஸ்லாமிய பாடலை பாடி புதுமையாக கோரிக்கை வைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்
தமிழக அரசு தர்காக்களுக்கு வழங்கபடும் மானியம் உயர்த்தி தர கோரியும், உலமா ஓய்வுதியம் உயர்த்தி தர கோரியும், காஜிக்கள் நியமனம் குறித்தும், வக்ப் சொத்துக்களுக்கு NOC வழங்குதல் சொத்து பாதுகாப்பு குறித்தும் புள்ளிவிபரங்களுடன் கோரிக்கை வைத்தார். கனிவுடன் போரிக்கையை பரிசீலித்த தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக மானிய உயர்த்துதல் விசயத்தை அமுல்படுத்துவதாக கூறி அறிவிப்பு வெளியிட்டார்கள். சிறுபான்மை மக்களின் மனதை அறிந்து செயல்படும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும் மாண்புமிகு அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களுக்கும் தென்னிந்திய தர்காக்கள் மற்றும பள்ளிவாசல்கள் அசோசியேசன் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்வதாக அதன் தலைவர் கலீபா சாஹிப் தெரிவித்தார். உடன் செயலாளர் முஜம்மில் ஜாபர் உடனிருந்தார்.






