ஜியானேஷ்குமார் மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருக்கும் போது ராம ஜென்மபூமி டிரஸ்ட் உருவாக்கியவர். அப்படி என்றால் எவ்வளவு பெரிய சங்கியாக இருப்பார் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
பிறகு 2019ல் காஷ்மீரில் ஆர்டிகள் 370 ரத்து செய்தார். இதுவே இவர் பா.ஜ.க.அடிவருடி என்பது தெள்ளத்தெளிவாகிறது.
இதற்கு விசுவாசமாக 2021ல் அமித்ஷா உருவாக்கிய கூட்டுறவு அமைச்சகத்தில் செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது. தற்போது இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்ட்டிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
எதற்கும் துணிந்த அறமற்று பா.ஜ.க. தலைமை சொல்வதை அப்படியே செய்யக்கூடிய கரசேவகர் ஒருவரைத் தான் பா.ஜ.க. தேர்தலை நடத்த பொறுப்பு வழங்கியிருக்கிறது.
2024 நாடாளுமன்ற தேர்தலை நேர்மையாக நடத்தி இந்திய ஜனநாயகத்தை இவரா காப்பாற்றுவார்?.
ஈவிஎம் இயந்திரத்தில் முறைகேடு செய்வது, மாநில கட்சிகள் தீவிரமாக கண்காணித்து அந்த முறைகேட்டை ஓரளவுக்கு தவிர்த்து வெற்றி பெற்றால் குதிரை பேரம் நடத்தி வெற்றி பெற்ற கட்சியிலிருந்து ஆட்களை விலை பேசி தன் பக்கம் இழுப்பது அல்லது அந்தக் கட்சியை உடைப்பது என்று இதுவரை கொடூரங்களை செய்துவந்தது. ஆனால் கடந்த ஆண்டுலிருந்து தற்போது அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி அந்த கட்சியையே கைப்பற்றுவது, சம்மதி மறுத்தால் சிறைக்கு அனுப்பி அந்த கட்சியையே கைப்பற்றுவது என பா.ஜ.க.வின் அதிகார ஆணவப் போக்கு அதிகரித்துவிட்டது.
இந்தியா ஜனநாயகப் பெபரில் சர்வதிகாரியாக பா.ஜ.க. நடத்திக்கொண்டிருக்கிறது.
இந்திய ஒன்றியத்தில் இதுவரை நிலவி வந்த கூட்டாட்சி அம்சத்தை ஒழித்து ஒற்றைகட்சி ஆட்சி முறைக்கு இந்தியாவை நகர்த்திக்கொண்டிருக்கும் பா.ஜ.க.வின் சர்வதிகாரப்போக்கை வட நாட்டு மக்கள் இன்னும் அவதானிக்கவில்லை. எவராலும் மீட்டெடுக்க முடியாதப் பெரும் ஆபத்தை நோக்கி நகர்கின்றது இந்திய ஒன்றியம்.
3000 ஆண்டுகாலமாக முற்றிலும் அடிமையாகாத தென்னாட்டவர்களான நமக்கிருக்கும் ஒரே வாய்ப்பு ஒத்த ஓட்டு கூட பா.ஜ.க.விற்கு தமிழகத்திலிருந்து விழக்கூடாது.
செய்வீர்களா…
நன்றி: பழ. இராஜேந்திர பிரசாத்.!






