ஜூன் 15: உலக முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினம்

0
79

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15 அன்று உலக முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் (World Elder Abuse Awareness Day) கடைபிடிக்கப்படுகிறது.

முதியோர்களுக்கு எதிரான உடல்ரீதியான, மனரீதியான, பொருளாதாரரீதியான மற்றும் புறக்கணிப்பு போன்ற கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்கவும், அவர்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்யவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை, முதியோர் மீதான வன்முறையைத் தடுப்பதற்கான சர்வதேச வலையமைப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் அலுவலகம் ஆகியவை இணைந்து, நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மீதான உடன்படிக்கை உறுப்பு நாடுகளின் மாநாட்டின் பத்தொன்பதாவது அமர்வுடன் இணைந்து நடத்தப்படும் ஒரு துணை நிகழ்வின் மூலம் உலக தினத்தை கொண்டாடும்

முதியோர் துஷ்பிரயோகத்தை கையாளுதல்

2019 மற்றும் 2030க்கு இடையில் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 38% அதிகரித்து, 1 பில்லியனிலிருந்து 1.4 பில்லியனாக உயரும் என்று எண்ணிக்கை உலகளவில் இளைஞர்களைவிட அதிகமாக இருக்கும். மேலும், இந்த அதிகரிப்பு வளரும் நாடுகளில் மிக அதிகமாகவும், மிக வேகமாகவும் இருக்கும். இதனையொட்டி, மனித உரிமைகள் துறை உட்பட, முதியவர்களைப் பாதிக்கும் குறிப்பிட்ட சவால்களுக்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.
முதியோர் மீதான வன்முறை என்பது வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் இரண்டிலும் நிலவும் ஒரு பிரச்சனையாகும். ஆயினும், இது பொதுவாக உலகளவில் குறைவாகவே பதிவு செய்யப்படுகிறது. இதன் பரவில் விகிதங்கள் அல்லது மதிப்பீடுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வளர்ந்த நாடுகளில் மட்டுமே காணப்படுகின்றன. அவை 1% முதல் 10 வரை உள்ளன. முதியோர் மீதான கொடுமையின் முழு அளவு தெரியவில்லை என்றாலும் அதன் சமூக மற்றும் தார்மீக முக்கியத்துவம் வெளிப்படையானது. எனவே இதற்கு முதியோர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தும் ஒரு உலகளாவிய பன்முகத் தன்மையிலான பதில் தேவைப்படுகிறது.

முதியோர் துஷ்பிரயோகத்தை வரையறுக்கவும், கண்டறியவும் மற்றும் கையாளவும் ஆன அணுகுமுறைகள், ஒரு கலாச்சாரச் சூழலுக்குள் வைத்து பார்க்கப்பட வேண்டும். மேலும் கலாச்சாரத்திற்கே உரிய இடர் காரணிகளுடன் இணைத்தும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். உதாரணமாக சில பாரம்பரிய சமூகங்களில் வயதான, விதவைகள், கட்டாயத் திருமணங்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அதே சமயம் மற்ற சமூகங்களில் தனிமையில் வாழும் வயதான பெண்கள் சூனியக்காரிகள் என்று குற்றம் சாட்டப்படுகிறார்கள். சுகாதார மற்றும் சமூகக் கண்ணோட்டங்களில் இருந்து பார்த்தால், ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு மற்றும் சமூக சேவைத் துறைகள் ஆகிய இரண்டும் இப்பிரச்சினையைக் கண்டறிந்து கையாள்வதற்கு நன்கு தயாராக இல்லாவிட்டால், முதியோர் துஷ்பிரயோகம் தொடர்ந்து கண்டறியப்படாமலும் புறக்கணிக்கப்பட்டும் கொண்டே இருக்கும்.


வே.பழனி வேலன்
சுயாதீன ஊடகவியலாளர்