பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்

0
95

தமிழ்நாடு அரசு உறுதியளிக்கப்பட்ட பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு விதிமுறைகள் வகுக்கப்படாமல் இருந்தபடியால் ஓய்வு பெற்று வரும் அரசு ஊழியர்கள் இடையே பெரும் மன குழப்பம் நிலவி வந்தது.

அதனை உடனடியாக தமிழக அரசு நிவர்த்தி செய்திட வேண்டும் என ஓய்வு பெற்ற மருந்தாளுனர்கள் நலச்சங்கம் பத்திரிக்கை வாயிலாக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது.

தற்போது தமிழக அரசு இடைக்கால ஓய்வூதிய கணக்கீடு முறையை அறிவித்துள்ளது.
அதை ஓய்வு பெற்ற மருந்தாளுனர்கள் நலச்சங்கம் வரவேற்று நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
மேலும் தமிழக வெற்றிக்கழக அரசு தேர்தல் அறிக்கையில் கூறியவாறு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என ஓய்வு பெற்ற மருந்தாளுனர்கள் நலச் சங்க அமைப்பாளர் வே.பழனிவேலன் வேண்டுகோள் வைத்துள்ளார்.