வெறுப்பு அரசியலால் விலக்கி வைக்கப்படும் பாஜக…

0
429

2024 தேர்தலில் வெறுப்பு அரசியலால் விலக்கி வைக்கப்படும் பாஜக… கூட்டணி முறிவு !

வேளாண் மக்களின் போராட்டம் காரணமாக பஞ்சாபின் சிரோமணி அகாலி தளத்துடன் கூட்டணி முறிவு!

“மக்கள் எதிர்ப்பு” காரணமாக ஒடிசாவில் பிஜு ஜனதா தளத்துடன் கூட்டணி முறிவு!

சிக்கிம் மாநில ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா(SKM) வின் ஆதரவுடன் ஜனவரியில் ஒரு மக்களவை உறுப்பினரை பெற்றுக் கொண்ட பாஜக, ‘ஊழல் அரசு’ என்று சொல்லி கூட்டணி முறிவு!

மணிப்பூர் குக்கி மக்கள் மீதான கலவரத்தை நடத்திய பாஜக மணிப்பூர்(வெளிப்பகுதி), மேகாலயா, நாகாலாந்தில் தேர்தலில் இருந்து விலகல்!

8.5 ஏக்கள் நிலத்தை வாங்கியதறகாக ஜார்கண்ட் முதலமைச்சரையே கைது செய்த பா.ஜ.க. 100 கோடி முறைகேடு என்று சொல்லி டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது. ஆனால் அடித்த கொள்ளை 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி என்று உலகளவில் செயல்படும் ஆய்வு தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சியினர் தொடர் கைது அவசர அவசரமாக சிஏஏ திட்டத்தை அமல்படுத்தியது போன்ற பல்வேறு நிகழ்வுகள் இதுபோன்ற செயல்களிலிருந்து பா.ஜ.க.வின் தோலவி பயம் வெளிப்படையாக தெரிகிறது.

400 தொகுதிகளில் வெற்றி என்ற கனவில் இருந்த பா.ஜ.க. கலக்கத்தில் இருப்பதால் சிஏஏ தங்களை காப்பாற்றும் என்ற நம்பிக்கை சுற்றித்திரிகிறார்கள்.
வாக்குஇயந்திர முறைகேடு தீவிர கண்காணிப்பு செய்து தடுக்கப்பட்டால் பா.ஜ.க.மண்ணைக் கவ்வுவது உறுதி.