இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளை சேர்ந்த பயணிகள் விசா இல்லாமல் ஈரானுக்கு பயணம் செய்யலாம் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
பொதுவாக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு பயணம் செய்ய வேண்டுமானால் பாஸ்போர்ட், விசா போன்றவை கட்டாயம். ஆனால் ஒரு சில நாடுகள் இதிலிருந்து விலக்கு அளித்துள்ளன. அந்த வகையில் ஈரான் அரசு தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் சுற்றுலா துறையை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளின் வருகையை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஈரானுக்கு பயணம் செய்ய விசா கட்டாயமில்லை என்று தெரிவித்துள்ளது.