மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒலா, ஊபர், சுகி, சொமேட்டோ போன்று ஆப்களை உருவாக்க வேண்டும்

0
203

தற்சார்பு பொருளாதாரத்தோடு உலகளாவிய ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு தேவையை நிறைவேற்றவும் குறிப்பாக தமிழகம் தன்னிறைவு அடையவும் அத்தியாவசிய மற்றும் தட்டுப்பாடு உள்ள பொருள்கள் உற்பத்தி மற்றும் அதுசார்ந்த தொழில்களை கண்டறிந்து நிதி ஒதுக்கி அதனை ஊக்குவிக்க வேண்டும்.

குறிப்பாக இன்றைக்கு தமிழகத்தில் இருக்கிற வலிமையான மனித வளத்தை பயன்படுத்திக்கொள்ள புதிய திட்டங்களை வகுக்க வேண்டும்.

இலாபமற்ற தொழில்கள், உணவு சார்ந்த தொழில்கள் மற்றும் பாலியல், போதை சார்ந்த வணிகத்தில் பெருமளவில் இளைஞர்கள் அதிகளவில் ஈடுபட்டு வருவதை தவிர்த்து அவர்களுக்கு நல்வழிகாட்ட அரசு முனைப்பு காட்ட வேண்டும்.

அன்னிய முதலீடு குவிப்பு என்கிற பெயரில் அன்னிய நிறுவன வளர்ச்சிக்கு பாடுபடாமல் நீர், நிள வளத்தை வீணடிக்காமல், லுலு மால் போன்ற பெரிய பெரிய நிறுவனங்களை இறக்குமதி செய்யாமல் அரசு இங்கிருக்கிற சிறு, குறு தொழில்களையும் முதலாளிகளையும் காக்க வேண்டும்.

தனியாரிடம் இல்லாமல் அரசு புறம்போக்கு இடங்களில் குறைந்த வாடகைக்கு வணிக வாளகம், போக்குவரத்து முனையம், மருத்துவமனை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி அரசே சிறு, குறு தொழில்களுக்கு குறைந்த வாடகையில் இடமளிக்க வேண்டும். இதன் மூலம் நடுத்தர மக்களிடமிருந்து தொழில் முனைவோர்கள் அதிகம் வாய்ப்பளிக்க முடியும். விலைவாசி ஏற்றமும் கட்டுக்குள் இருக்கும்.

மாவட்ட நிர்வாகம் சார்பில் ஓலா, ஊபர் போன்ற வாகன ஆப், சுகி, சொமேட்டோ புட் டெலிவரி ஆப்களை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் சுரண்டல்களை தடுத்து படித்த இளைஞர்களின் உடல் உழைப்பிற்கு ஏற்ற வருமானத்தை வழங்க முடியும். அதுபோல ஆட்டோ, ஷேர் ஆட்டோ, கார் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் அனைத்திற்கும் கிலோ மீட்டருக்கு ஏற்ற ஒரு நியாயமான அளவு சேவைக்கட்டணத்தை நிர்ணயம செய்ய வேண்டும்.

ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் பல கட்ட மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அதற்கு குழு அமைத்து சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து லோயர் மிடில் கிளாஸ் மக்கள் தரப்பினரை வரிச்சுமையிலிருந்து காக்க வேண்டும்.

அதுபோல தரமான வாடகை அடுக்குமாடி கட்டிடங்களை ஏற்படுத்தி குறைந்த வாடகை நிர்ணயித்து மக்களுக்கு வழங்க வேண்டும். பள்ளி, கல்லூரி, ஐடிஐ, அரசு மருத்துவமனை ஆகியவற்றை அதிகரித்து சேவையை பல மடங்கு உயர்த்த வேண்டும்.

இதுபோன்ற திட்டங்களால் மக்களிடம் இருந்த பெறும் ஏக போக வரி அவர்களுக்கு ஒரு ஆறுதலை தரும்.
விலைவாசி ஏற்றம் கட்டுப்படும், மக்களிடையே பழப்புழக்கம் அதிகரிக்கும், பொருட்களை வாங்கும் திறன் அதிகரிக்கும், வாழ்க்கை தரம் உயரும். ஏற்றத்தாழ்வுகள் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் குறைய ஒரு வாய்ப்பாக அமையும்.