கச்சத்தீவைப் பொறுத்தவரையில், அதனைத் தாரை வார்க்க நான் எந்தக் காலத்திலும் ஒப்புக் கொண்டதும் இல்லை; உடன்பட்டதும் இல்லை. தமிழகத்தின் முதல் அமைச்சர் என்ற முறையில் என்னுடைய எதிர்ப்பை நான் அப்போதே தெரிவித்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். ஆக அவர் மத்திய அரசுடனான எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை என்பது தெரிகிறது.
சரி கச்சத்தீவை தாரை வார்த்தது யார்? – ஸ்டாலின் – ஜெயக்குமார் வாக்குவாதம் 2017 மார்ச் 21 அன்று சட்டசபையில் நடைபெற்றது. அப்போது பதிலடிக் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். அதுபோல ஜெயலலிதாவும் பல கட்டங்களில் போகிற போக்கில் பேசியிருக்கிறார்கள். தஇதற்கு பல முறை பதில் அளிக்கப்பட்டிருக்கிறது.
கச்சத் தீவு இலங்கைக்கு வழங்கப்பட்ட போது அன்றைய முதல்வர் கருணா நிதி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அனைத்துக் கட்சி கூட்டத்திலும், சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. கச்சத் தீவை வழங்க எதிர்ப்பு தெரிவித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு கருணாநிதி கடிதம் எழுதினார். நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர் இரா.செழியன் தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்தார். ஆனால், கச்சத் தீவை வழங்க எதிர்ப்பு தெரிவித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கையெழுத்து போடகூட அதிமுக மறுத்துவிட்டது என்று சட்டசபையிலே மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கையொழுத்து போடமல் வெளிநடப்பு செய்த எம்.ஜி.ஆர்தான் துரோகி என்றார் ஸ்டாலின்.
அண்ணாமலை, மாரிதாசின் கச்சத்தீவு உருட்டுகள்
அண்ணாமலையின் முதல் பொய்.
அண்ணாமலை தகவலறியும் உரிமைச்சட்டத்தின் தகவல் கேட்டதாகவும் அப்போதைய உள்துறை செயலாளர் மற்றும் தலைமைச் செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கலைஞர் சம்மதம் கொடுத்ததாக சொல்கிறார்.
உண்மை என்னவென்றால்….
கலைஞர் வெளியிட்ட அறிக்கை, டேசோ மாநாட்டு தீர்மானம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும்போது கூட ஒப்பந்தத்தில் கையொழுத்து போட்டதாகவே அல்லது சம்மதம் தெரிவித்ததாகவே எந்த குறிப்பும் இல்லை.
தமிழக அரசு கச்சத்தீவு தமிழர்களுக்கு சொத்மானது என்று பல்வேறு ஆவணங்களை திரட்டி அவர்களிடம் கொடுத்திருக்கிறது. பேச்சுவார்த்தைக்கு வராது உள்துரை செயலாளரை இவரே சட்டத்துறை அமைச்சருடன் போய் சந்தித்து கொடுத்திருக்கிறார். வெளியுறவுச் செயலாளர் கேவல் சிங் சந்தித்தபோது உறுதியாக இருந்தார் ககலஞர் என்பதுதான் வரலாற்று உண்மை.
மாரிதாசின் 2வது பொய்.
மசோதாவை இயற்றும்போது இரா.செழியன் பேச முற்படும்போது திமுக எம்பிக்கள் அமித்தி உட்கார வைத்ததாகவும் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கம்முன்னு இருந்ததாகவும் மாரிதாஸ் குறிப்பிட்டுள்ளார். அதோடு இராமநாதபுரம் எம்பி.மூக்கையாத்தேவர், இந்திய முஸ்லீம் லீக் பெரியகுளம் முகமது செரிப் இருவர் மட்டமே எதிர்ப்பு தெரிவித்தனர்.
உண்மை என்னவென்றால்
* ஒப்பந்த நகலானது நாடாளுமன்றத்தில் ஜூலை 23 அன்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது கடுமையாக எதிர்த்துப் பேசினார் திமுக உறுப்பினர் இரா.செழியன். ‘இது கீழ்த்தரமான ஒப்பந்தம்’ என்று சொல்லிவிட்டு வெளிநடப்பு செய்தார்.
* ”கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்ததன் மூலமாக இந்தியாவுக்கு அல்ல, தமிழ்நாட்டுக்குத் தான் முதல் ஆபத்து ” என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி மாறன் அவர்கள் நாடாளுமன்றத்தில் கர்ஜித்தார்.
* ”தமிழக அரசின் கடுமையான எதிர்ப்பையும் மீறி இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்த்தது இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு உகந்ததாக அமையாது” என்று நாடாளுமன்றத்தில் அப்துல் சமது எச்சரித்தார்.
சரி சங்கி மற்றும் முன்னாள் எம்.பி. ஹண்டே குறிப்பிட்டதைப் பார்ப்போம்.
நாடாளுமன்ற அவையின் அனுமதியின்றி எப்படி தாரை வார்த்துக்கொடுத்தீர்கள் என்று ஜி.விஸ்வநாதன் கோள்வி எழுப்பியதாக ஹண்டே அவர்கள் ஜி.எவிஸ்நாதன் 75வத பிறந்தநாளின்போது குறிப்பிட்டுள்ளார்.
ஆக நாடாளுமன்ற அவையின் அனுமதியின்றி தாரைவார்க்கப்பட்டுள்ளதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.
இன்னொரு சங்கியான வாஜ்பாயும் குறிப்பிட்டுள்ளதை கவனிப்போம்.
இலங்கையின் நட்பை பெறுவதற்காகவே ரகசிய பேரம் நடத்தி கச்சத்தீவைத் தானமாக வழங்கியுள்ளது என்று வாஜ்பாய் பேசினார்.
ஆக தமிழக அரசின் முதலமைச்சர் கலைஞர் சம்மதிக்கவில்லை என்பதும் சொல்லாமலேயே இந்திராகாந்தி கையெழுத்திட்டதும் வாஜ்பாயின் குறிப்பிட்டதிலிருந்து தெரிந்துக்கொள்ளலாம்.
1974 ஜீலை 23ஆம் தேதி பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொண்டபோதே 1 மாதத்திற்கு முன்பே அதற்கு திமுக முதலமைச்சர் ஒப்புதல் தந்துவிட்டார் என்றும் குறப்பிடுகிறார்.
இது 3வது பொய்.
கையொழுத்திட்ட ஆவணங்கள் இருந்தால் அதனை வெளியிட்டிருக்க முடியும். அவ்வாறு இல்லை என்பதுதான் உண்மை.
* அமைச்சர் ஸ்வரன்சிங் அவர்களிடம், தமிழக அரசு இதற்கு சம்மதம் தெரிவித்ததா என்று நீதிமன்றத்தில் கேட்கப்பட்டபோது, அவரால் சரியான பதில் அளிக்க முடியவில்லை. ‘தமிழக அரசிடம் பேசினோம்’ என்று மட்டுமே சொன்னார்.
* இவை அனைத்தையும் மீறித்தான் இந்தியப் பிரதமரும், இலங்கைப் பிரதமரும் 1974 ஜூன் 26 ஆம் நாள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டார்கள். தமிழ்நாட்டின் சம்மதம் இன்றித்தான் ஒப்பந்தம் இந்திய இலங்கை பிதமர்கள் கையொழுத்திட்டு அந்த நகல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
* ஒப்பந்தம் கையெழுத்தான மூன்றாவது நாள் – அதாவது ஜூன் 29 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் கலைஞர் அவர்கள் கூட்டினார்கள். கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்தாக வேண்டும் என்று இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டது. அனைத்துக் கட்சிகளும் ஆதரித்த அக்கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த ஒரே கட்சி அதிமுக மட்டும் தான்.
* 1974 ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் கலைஞர்.
* தமிழ்நாட்டில் ஆண்ட திமுக அரசு முன்னெடுத்த கடுமையான எதிர்ப்பின் விளைவாக 1976-ம் ஆண்டு கச்சத்தீவை மையமாக வைத்து “இந்தியா- இலங்கை” இடையே மீண்டும் ஒரு ஒப்பந்தம் உருவானது. அதில் இலங்கையின் அனுமதி இல்லாமல் கச்சத்தீவு கடற்பரப்பில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிக்க உரிமை உண்டு; கச்சத்தீவில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடி வலைகளை உலர்த்த முடியும்; கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழாவில் தமிழ்நாட்டு மீனவர்க பங்கேற்கவும் உரிமை உண்டு எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவின் எந்தவொரு பகுதியையும் வேறு ஒரு நாட்டிற்கு விட்டுக் கொடுப்பதென்றால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 368ஆவது பிரிவின்படி நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்கு வைத்து சட்டம் இயற்றப்பட வேண்டும். கச்சத்தீவைப் பொறுத்தவரை அப்படி எந்தவொரு சட்டமும் இதுவரை நிறைவேற்றப்படாததால், கச்சத் தீவை இலங்கைக்கு ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக் கொடுத்தது அரசியல் சட்ட ரீதியாகச் செல்லுபடி ஆகாது என்பதுதான் உண்மை. எனவே 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி தான் என்பதைப் பிரகடனப்படுத்தவும், ‘டெசோ’ அமைப்பின் மூலம் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதென இந்தக் கூட்டம் தீர்மானிக்கின்றது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில், டெசோ அமைப்பின் சார்பில் நான் இந்திய உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை 10.5.2013 அன்று தாக்கல் செய்திருந்தார்.
நீதிமன்றத்தில், 2013ம் ஆண்டு பதில் கூறிய மத்திய அரசு, இந்தியாவின் எந்த பகுதியும் இலங்கைக்கு வழங்கப்படவில்லை. பிரிட்டிஷ் இந்தியாவுக்கு சிலோனுக்குமான பிரச்னையாக கச்சத்தீவு இருந்தது என்றும் 1974, 1976 ஒப்பந்தங்கள் மூலம் அது முடிவுக்கு வந்தது என்று கூறியது.
ஆக இது வெறும் ஒப்பந்தம் மட்டுமே. நாடாளுமன்றத்தில் விவசாதிக்குப்பட்டிருக்கிறது. எதிர்ப்புகள் இருந்தும் தமிழக அரசு அனுமதியின்றி எதிர்ப்பிற்கிடையே வாஜ்பாய் சொல்வதுபோல இருநாட்டு நலன்களுக்காக எடுக்கப்பட்ட முடிவு.
அதாவது பாகிஸ்தான் இலங்கை உறவை முறிக்க இந்தியா மேற்கொண்ட நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
2008ம் ஆண்டு ஜெயலலிதா தான் கச்சத்தீவை மீட்க வழக்கு தொடுத்தார். கச்சத்தீவை மீட்க முடியாது என மத்திய அரசு நீதிமன்றத்தில் கூறிவிட்டது.
தற்போது ஐ.நா.வால் அந்த பகுதி இலங்கை எல்லைக்குட்பட்ட பகுதியாகவே வரையறுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.
சூழல் இப்படியிருக்க அண்ணாமலை மற்றும் மாரிதாஸின் பொய்களை மோடியும் பேசி கூட்டாக அம்பலப்பட்டு நிற்கிறார்கள்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீனவர்களுக்கான தனி அமைச்சகம் அமைப்போம் என மோடி ராமேஸ்வரத்தில் 2014-ஆம் ஆண்டு வாக்குறுதி கொடுத்தார். பத்தாண்டுகால ஆட்சிக்குப் பின்னர் எந்த முன்னெடுப்பையும் செய்யவில்லை.
ஆண்டுக்கு தோராயமாக 500 மீனவர்களை கைது செய்து சித்ரவதை செய்வது மோடி பிரதமராகியும் இன்றும் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது.
இராமேஸ்வரம் பகுதி வளர்ச்சிக்கு 100 கோடி ஒதுக்குவதாக சொன்ன வாக்குறுது என்னாச்சு. எய்ம்ஸ் என்னாச்சு. கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் எப்படி ஓட்டுக் கேட்க வருகிறார் என்று தான் தெரியவில்லை.
பல பேரிடர்களுக்கு தமிழக அரசு கேடட நிவாரணங்களை கொடுக்கவில்லை.
தமிழ் என்று பேசும் மோடி செத்துப்போன மொழிக்கு அதிக நிதியை ஒதுக்கி தமிழுக்கு நிதி ஒதுக்கியது குறைவு.
தேர்தல் நெருக்கத்தில் கச்சத்தீவு குறித்து பொய்யை பரப்பு ஓட்டுக்களை அறுவடை செய்யப்பார்க்கிறார். இது தமிழகத்தில் எடுபடாது.