ஊழல் குற்றம் சாட்டப்பட்ட 740 எம்எல்ஏக்களும் எம்பிகளும் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்திருக்கிறார்கள் என்று ஜார்கண்ட் முக்தி மோர்ஷாவின் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அவர்களின் மனைவி பாஜகவை குற்றம் சாட்டியுள்ளார்.
இவர்கள் ஊழலை ஒழிப்பேன் என்று சொன்னது எதிர்க்கட்சியில் இருந்து ஊழல் செய்யாதீர்கள் எங்கள் கட்சிக்கு வந்து ஊழல் செய்யுங்கள் என்று சொல்வது போல் உள்ளது.உங்கள் வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படும். உங்கள் ஊழலும் சட்டபூர்வமாக்கப்படும் என்று பதாகை வைக்காதது தான் மிச்சம்.
வரலாற்றுப் பதிவேடு (History Sheet) குற்றவாளிகள்! இந்தப் பட்டியலில் இருப்பவர்கள் எல்லாம் பா.ஜ.க.வில்தான் இருக்கிறார்கள்!32 பக்கங்கள் கொண்ட இந்தப் பட்டியலில், 1977 வழக்குகள் இருக்கும் 261 ரவுடிகள் இருக்கிறார்கள். இவர்களின் பெயர் என்ன? பா.ஜ.க.வில் என்ன பொறுப்பில் இருக்கிறார்கள்? இவர்கள் மேல் என்ன என்ன பிரிவுகளில் வழக்குகள் இருக்கிறது? என்று இந்தப் பட்டியலில் இருக்கிறது.
பா.ஜ.க.வின் கூட்டணியாகவும், கட்சியின் உறுப்பினர்களாகவும் இணைக்கப்பட்ட, மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், முன்னாள் மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவன், அரியானாவை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் ஜிண்டல், முன்னாள் மகாராஷ்டிர அமைச்சர் க்ருபா ஷன்கர், மேற்கு வங்கத்தின் 5 முறை சட்டமன்ற உறுப்பினர் தபாஸ் ராய், ஜார்கண்ட் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா கோடா, மேற்கு வங்கத்தின் முன்னாள் தலைமை காவலர் தேபஷிஷ் தார் உள்ளிட்ட எண்ணற்றவர்கள். மேற்குறிப்பிட்ட அனைவருக்கும் ஊழல் உள்ளிட்ட பல குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என ஒன்றிய பா.ஜ.க அரசின் விசாரணை குழுக்களால் அடையாளப்படுத்தப்பட்டவர்கள். தங்களை தற்காத்து கொள்ள, மக்கள் குறித்து எவ்வித கவலையில்லாமல், பா.ஜ.க.விற்கு இரையாக மாறியவர்கள்.
மேலும் மாற்று கட்சியில் இருந்து பா.ஜ.க வில் இணைந்த பின்னர் ஊழல் கறை நீக்கப்பட்டவர்களில் சிலர்:
காங்கிரசின் முன்னாள் அசாம் தலைவர் ஹிமன்தா விசுவா சர்மா பாஜகவின் இன்றைய அசாம் முதலமைச்சரின் 30 ஆயிரம் கோடி ஊழல்
திருணமுல் காங்கிரசின் சுவேந்து அதிகாரி பாஜக விற்கு தாவிய பிறகு முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டவரின் 7000 கோடி ஊழல்
ஊழல் பெருச்சாளிகளின் கூடாரமான பாசிச பாஜக வைத் தோற்கடிப்போம்!






