ஜனார்த்தன ரெட்டியின் மனைவி அருணா லக்ஷ்மி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் சிலரும் பாஜகவில் இணைந்துள்ளனர்.
கர்நாடகாவில் பாஜக ஆளும் போது மிகப்பெரிய நிலக்கரி ஊழலாக 35000 கோடி செய்தவன்தான் இந்த ஜனார்த்தன ரெட்டி. கூடுதல் செய்தி தன் மகள் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக 500 கோடி ரூபாய் செலவில் நடத்தியவர். அம்பானிக்கு முன்பே இந்த வேலையை செய்தவர். 2016ல். அதிக பொருட்செலவில் செய்த 5 திருமனங்களில் அதுவும் ஒன்று. 2011 இல் ஒன்பது வழக்குகள் போட்டு சிபிஐ அவரை கைது செய்தது அப்பொழுது பாஜகவும் அதன் அமைச்சர்களும் குறிப்பாக சுஷ்மாசுவராஜ் அடுத்த பிரதமர் என்றளவில் பேசப்பட்ட பாஜக தலைவர்,
”எங்களுக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று சொல்லி கட்சியிலிருந்து நீக்கினார்கள்.
2014 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, 2015 இல் அவருக்கு பிணையும் 2017 இல் சிபிஐ அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று வழக்கை முடித்து விட்டது. அந்நேரத்தில் கர்நாடக முதலமைச்சராக இருந்த சித்தராமையா மாநில அளவில் (SIT- special investigation team) சிறப்புப் புலனாய்வைத் தொடங்குவோம் என்று உத்தரவிட்டார். 2018 இல் கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜகவுக்குள் சேர விரும்பினார் ஜனார்த்தன ரெட்டி. அன்றைய சூழ்நிலையில் பாஜகவில் இணைப்பது குறித்தும் அவரோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதும் தங்களுக்கு பாதகமாக இருக்கும் என்று பாஜக அவரை கழற்றிவிட்டது.
ஒரு நேர்கானலில் அவருக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்று சொன்னார் அமிதசா. ஆனால், இன்றைய சுழலில் ஜனார்த்தன ரெட்டி அரம்பித்த கட்சியை பாஜகவுடன் இணைத்துள்ளனர். இப்போது ஜனார்த்தனன் தேவைப்படுகிறார். பாஜகவுக்கு பணம் தருவார் என்பதால் சேர்த்துள்ளனர் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அதற்கு கட்சியோடு இணைக்க வேண்டும் என்றில்லை. அதற்குத்தான் பல வழிகள் உள்ளனவே. அவரது வழக்கை முடித்து வைத்ததற்கு நன்றிக் கடன் ஆற்றுவார் தானே.
கட்சியில் இணைத்ததற்கு காரணம் என்ன? கடந்த சட்டப்பேரவை முடிவுகளின்படி, சில தொகுதிகளில் பாஜ்கவின் தோல்விக்கே காரணமாய் ஜனார்த்தன ரெட்டியின் கட்சி இருக்கிறது. அவர் கட்சியில் அவர் மட்டும் ஜெயித்தார்.
ஆகவே, ஜனார்த்தனனின் கட்சியையும் இணைத்துக் கொண்டால் ரெட்டி சமூக வாக்குகள் தமக்கு கிடைக்கும் என்ற காரணத்திற்காக பாஜகவுடன் இணைத்துக் கொண்டுள்ளனர்.
முன்னரே ஜனார்த்ன ரெட்டியின் தம்பிகளும் உறவினர்களும் பாஜகவில் இணைந்தது மட்டும் இல்லாமல் அவர் குடும்பத்துக்கு மட்டுமே ஏழு சீட்டுகளை ஒதுக்கி இருக்கிறார்கள் இதுபோல் அடுக்கிக் கொண்டே போகலாம் பாஜகவின் ஊழல் எதிர்ப்பின் இலட்சணம் இதுதான். அதிகாரத்திற்காக எதுவும் செய்ய துணிவார்கள்.






