எம்.டி, எம்.எஸ், உள்ளிட்ட மருத்துவ பட்ட மேற்படிப்பு பயிலும் மருத்துவர்கள் இரண்டு ஆண்டுகள் பயிற்சி மருத்துவர்களாக கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் பணியில் ஈடுபட வேண்டும் என்ற விதி தற்போது தளர்த்தப்பட்டு ஓராண்டாக குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதோடு அவர்கள் தங்களை கடவுளுக்கு இணையாக பாவித்துக்கொண்டு நோயாளிகளிடம் கடுமை காட்டி வருகின்றனர்.
நீட்டால் ஏழை எளியவர்கள் பங்கேற்பு குறைந்ததோடு பிற மாநிலத்தவர்களும் கல்லூரியில் பயிலும் மற்றும் மருத்துவமனையில் சேவையாற்றும் சூழல் இருப்பதால் சேவைமனப்பாற்றையற்று வெறுப்போடு நடந்துக்
கொள்கிறார்கள். மொழி புரிதல் இல்லாமமையால் நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை பெறுவதல் சிக்கல் ஏற்படுகிறது.) பயிற்சி முடித்தவுடன் தனியார் மருத்துவமனையில் பலர் சேர்வதால் அரசு மருத்துவமனையில் பற்றாக்குறை ஏற்படுகிறது.
ஏற்கனவே கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தை தனியார் மயமாக்க தமிழக அரசு முயன்றது. பின்னர் மக்கள் மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து கைவிட்டது.
தற்போது சேவையாற்றும் இரண்டு ஆண்டு காலத்தை குறைந்திருப்பது என்பது தேவையற்ற ஒன்று.
மொத்த படித்தவர்கள் எதைச் சொன்னாலும் கேட்டு தலையாட்டி பல விஷயங்களில் தவறிழைக்கும் போக்கும் சம்பவங்களும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. மக்களை தொடர்ந்து தந்திரமாக ஏமாற்றுவதை திமுக அரசு கைவிட வேண்டும்.
குறுகிய காலத்திற்கு மட்டுமே மருந்து மாத்திரைகள் வழங்குவது,
ஒரு சிகிச்சைக்கும் அடுத்த சிகிச்சைக்கு அதிக இடைவெளி
ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, ஸ்கேன், போன்ற ரிப்போர்ட்டிற்கு ஆகும் காலதாமதம்,
நோயாளிகளை அவமதிக்கும் போக்கு
வேண்டுமென்று அதுபோன்ற சூழல்களை திட்டமிட்டு அரங்கேற்றி ஏழை, எளிய மக்கள் இன்றைக்கு தனியாருக்கு திருப்பி விடும் போக்கை வேண்டுமென்றே திட்டமிட்டு செக்கிறார்கள். அதோடு ஒவ்வொரு அரசு மருத்துவமனையில் பலர் தனியார் மருத்துவமனைக்கான ஏஜெண்டாக செயல்படும் போக்கும் அதற்காக அவர்களுக்குள் நடக்கும் போட்டிகளும் வேதனைக்குரியது.
எக்ஸ்ரோ, ஸ்கேன் உள்ளிட்ட இதர சேவைக பரிசோதனை கருவிகளை அதிகரிக்காமல் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு ஆயிரக்கணக்கான மக்களிடம் போக்கு காட்டுவது; காலை 9 மணி முதல் 12 வரை என சிகிச்சை காலத்தில் சிறிய எண்ணிக்கையிலான மருத்துவர்கள் எத்தனை நோயாளிகளை சந்திக்க முடியும். அதுபோல மாவட்டத்திற்கு அவசர மற்றும் தீவிர சிசிக்சை பிரிவில் அதிகபட்ச 20 நோயாளிகள் மட்டும் அனுமதிக்கும் இட வசதி மட்டுமே இருக்கிறது.
இந்த அவலம் 10 ஆண்டுகள் ஆட்சியை இல்லாமல் திராவிட மாடல் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக பொறுப்பேற்ற பின்னும் நீடிக்கிறது. இன்னும் மருத்துவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் ஆதிக்க உணர்வு மற்றும் லஞ்ச முறைகேடுகள் அதிகரித்தும் உள்ளது.
இதற்கொல்லாம் தீர்வு காண அரசால் முடியும். காண முடியாத அளவிற்கு அரசு மற்றும் சுகாதாரத்துறையை கவணித்துக்கொள்கிறார்கள் தனியார் மருத்துவர்கள்,
தொடர்ச்சியாக 3 சிப்ட் அடிப்படையில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகளை செய்யவும் தீவிர மற்றும் அவசர பிளாக்கை அதிகப்படுத்தவும் மருத்துவக் கருவிகளை அதிகப்படுத்தவும் வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்ப மக்களின் வரியை அவர்களின் ஆரோக்கியம் மற்றும் உயிர் காக்கும் விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் தினம் ஏற்படும் உயிர்ப்பலிகளையும் மக்கள் அலைக்கழிப்பையும் தடுக்க வேண்டும்.
அதே வேளையில் மருத்துவர்கள் கடவுள் போல தங்களை பாவித்துக்கொண்டு நோயாளிகளிடம் அணுகும் போக்கும் பம்பாத்து வேலைகளையும் ரிப்போர்ட்டாக எடுத்து அவர்களின் மனமாற்ற சிறப்பு வகுப்பு எடுக்க வேண்டும். பயிற்சி முடித்த மருத்துவர்கள் தனியாரிடம் போய் பணிக்கு சேர்வதும் தனியாக மருத்துவமனை ஆரம்பிக்கும் சூழல்களை தடுக்கவும் தனியார் மருத்துவனைக்கு இணையாக சலுகைகள் மருத்துவர்களுக்கு அரசு வழங்க வேண்டும்.
மருந்து மாத்திரை பற்றாக்குறை, மற்றும் ஊழல் முறைகேடுகளை தடுக்க போதிய முன்முயற்சிகளை எடுக்க வேண்டும்.
அரசு அதிகாரிகள் டிரஸ்ட் என்கிற பெயரில் தனியார் மருத்துவமனைக்கு உபகரணங்களை விலை குறைத்த வழங்குவதும் தனியார் மருத்துவமனைகளின் நடக்கும் பணச்சுரண்டல்களை தடுக்கவும் ஆய்வுக்குழுவை அரசு அமைக்க வேண்டும்.