காங்கிரஸ் எங்களுக்கு எதிரியில்லை

0
150

நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி கதவுகள் பாஜகவுக்கு மூடிவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்ற 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு பாஜகவுடன் அதிமுக தரப்பு நெருக்கம் காட்டி வந்தது. 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணியும் அமைத்திருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அண்ணா குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது சர்ச்சையான நிலையில், அதனை முன்வைத்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது.

பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்கவில்லை என்ற பேச்சு உள்ள நிலையில், கூட்டணியில் இருந்து விலகிய பிறகு சிறுபான்மையினர் வாக்குகளை குறிவைத்து எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

எனினும் பாஜக மற்றும் அதிமுக இடையே ரகசிய உறவு இருப்பதாகவும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணிதான் அமையும் என திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.