புத்தகப் பிரியர்களே: சென்னை புத்தகக் கண்காட்சி 2024

0
181

சென்னையில் 2024 ஆம் ஆண்டிற்க்கான புத்தக கண்காட்சி எப்போது தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அது குறித்த முழு விவரங்களை இங்கு பார்க்கலாம்.

 

பல தரப்பட்ட புத்தகங்கள் ஒரே இடத்தில் கிடைப்பது என்பது புத்தக பிரியர்களுக்கு விருந்தாக அமையும் ஒன்று. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி படிக்கும் கதைகள், நாவல்கள், இலக்கியம் சார்ந்த நூல்கள், ஆங்கில புத்தகங்கள், வாழ்க்கை வரலாறு தொடர்பான புத்தகங்கள் என பொக்கிஷ குவியல்கள் போல புத்தகங்கள் ஒரே இடத்தல் குவிந்து கிடக்கும்.

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தில் நடைபெறும் புத்தக கண்காட்சியும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில் சென்னை புத்தக கண்காட்சியும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறும்.

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சி நடைபெறும். இப்புத்தக கண்காட்சிக்கு லட்சக்கணக்கான மக்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் வருகை புரிந்து ஆயிரக்கணக்கான புத்தகங்களை வாங்கி செல்வார்கள்.

தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலத்தை சேர்ந்த புத்தக பிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் எப்போது புத்தக கண்காட்சி தொடங்கும் என எதிர்பார்ப்பது வழக்கம்.