மோடி ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள்
சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஊழல்கள் குறித்தான ஆய்வில் பா.ஜ.க. 1 இலட்சம் கோடிக்கு மேல் (1,15,62,50,22,000) ஊழல் செய்து சம்பாதித்துள்ளது. இதற்கு அடுத்த நிலையில் உள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும் 32 ஆயிரம் கோடி. இதற்கும் பா.ஜ.க.விற்கும் உள்ள வித்தியாசம் கிட்டதட்ட 33% அதிகம். இன்னும் குறிப்பிட்டு சொல்லப்போனால் மற்ற எல்லா கட்சிகளையும் கூட்டினால் வரும் கூட்டுத் தொகை ஊழலைவிட பா.ஜ.க. என்ற ஒரு கட்சி செய்திருக்கும் ஊழல்தான் அதிகம். அப்ப பா.ஜ.க. ஊழலைப் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. ஆனால் இந்தியாவில் பல பகுதியில் பேச வரும்போது ஏன் உலக நாடுகளில் பேசும் போது ஊழலுக்கு எதிரானவராக தன்னை பிம்பப்படுத்திக்கொண்டு ஊலா கேப் ஓட்டுகிறார்.
சுவிஸ் வங்கியில் 70 வருட வைப்பு நிதியை போல் 230 மடங்கு அதிகமாக இந்த 7 வருடத்தில் சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் வந்துள்ளது.
ஐந்தாம் தலைமுறை (5ஜி) அலைக்கற்றையை பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு ஒதுக்காமல், அம்பானியின் ஜியோ, அதானி, வோடாபோன், ஜடியா, ஏர்டெல் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த அலைக்கற்றையின் மொத்த மதிப்பு 4.3 லட்சம் கோடி என்று ஒன்றிய அரசு மதிப்பிட்டிருந்தது. ஆனால், வெறும் 1.50 லட்சம் கோடிக்கு 5ஜி அலைக்கற்றை விற்பனை செய்ததன் மூலம், 2.80 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதுதான் 5ஜி ஊழல்.
526 கோடி ரூபாய்க்கு போடப்பட்டிருந்த ரபேல் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தை 1,670 கோடி ரூபாயாக அதிகரித்து, 36 விமானங்களை வாங்கியுள்ளது. இன்னும் 108 விமானங்களை வாங்க உள்ளது.பெகாசஸ் விவகாரத்தில் பிரான்ஸ் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டது. மெக்சிக்கோ அரசு விசாரணையை தொடங்கியிருக்கிறது. ஆனால், இது குறித்த வழக்கில் பாதுகாப்பு காரணங்களால் கொள்முதல் விலை குறித்த விவரங்களை வெளியிட முடியாது எனக் கூறியதோடு நீதி மன்றத்தில் ஃரபேல் ஊழல் பைல்கள் காணவில்லை என்று கூறி அழுது வருகிறார்.
பிஎம் கேர் மூலம் நாட்டு மக்களிடம் நன்கொடை வாங்கி அந்த கணக்கை யாரிடமும் சொல்ல முடியாது என்று சொல்லி, அடம் பிடித்து வருகிறார் மோடி. பிஎன். கேரில் இதுவரை 2,900 கோடி ரூபாய் திரட்டப்பட்டிருக்கிறது.
ஊழலை ஒழிப்பதாக சொல்லி ஊழலையே வெளிக்கொணரும் நடைமுறை முற்றிலும் ஒழித்ததுதான் பிரதமர் மோடி சாமர்த்தியம். ஒரு அரசு துறையில் ஊழல் நடந்ததாக புகார் வந்தால் அந்த புகாருக்கு உள்ளான அரசு ஊழியரை விசாரிக்க அந்த துறையின் மேல் அதிகாரியின் எழுத்துபூர்வமான அனுமதி வாங்க வேண்டும் என்று சட்டத்திருத்தம் கொண்டு வந்து ஊழல் ஊழியர்களுக்கு பாதுகாப்பு கொடுத்துள்ளார். ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளை விரைவாக விசாரித்து தண்டனை கொடுக்க அமைக்கப்பட்ட லோக்பால் நியமனத்தை எதிர்க்கட்சி தலைவர் இல்லை என்ற காரணத்தை சொல்லி பல வருடங்கள் இழுத்தடித்து லோக்பாலை செயலத்தாக்கிவிட்டார்.
தேர்தல் பத்திரங்களின் அமலாக்கத்துறையை ரெய்டி அனுப்பி மிரட்டிப் பணத்தை பெறுவது, நன்கொடை பெற்று அரசு ஒப்பந்தகை வழங்குவது, கருப்பு பணத்தை பெற்று வெள்ளையாக மாற்றி உதவுவது என பல வழிகளிலும் பா.ஜ.க. தேர்தல் பத்திர வடிவத்தை பயன்படுத்தி பலனடைந்து வருகிறது. 2017 முதல் 2022 வரையிலான ஆண்டுகளில் பா.ஜ.க. மட்டும் ரூ.5272 கோடி நன்கொடை பெற்றுள்ளது.
1. ஒன்றிய அரசின் பாரத் மாலா திட்டம் 2. துவாரகா விரைவுப் பாதை, 3. ஒன்றிய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சுங்கச்சாவடி கட்டண வசூல் 4. ஆயுஷ்மான் பாரத் திட்டம், 5. அயோத்தி மேம்பாட்டுத் திட்டம் 6. கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் ஓய்வூதியத் திட்டம், 7 ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் (எச்.ஏ.எல்.) விமான எஞ்ஜின் வடிவைமைப்பு, 8. ஒன்றிய அரசின் ரயில்வே நிதி (250-க்கும் மேற்பட்டோர் இறந்த ஒரிசா ரயில் விபத்திற்குக் ஊழல்தான் காரணம்) ஆகியவற்றில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இதனால் அரசுக்கு 7.5 லட்சம் கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டிருப்பதாகவும் அம்பலப்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக
ஹரியானாவில் துவாரகா பாதை 18 கோடி ஆகும் என்று முடிவு செய்திருந்த சூழலில் அதிரடியாக ஒரு கிலோ மீட்ட ருக்கு 250 கோடி ரூபாய் என அதிகரித்து கணக்கு காட்டப்பட்டுள்ளது. அதாவது, திட்ட மதிப்பீட்டை விடவும் பல மடங்கு உயர்த்தி காட்டப்பட்டது 10 சதவிதம், 20 சதவிகிதமல்ல, 1,400 சதவிகிதம்!
24.3 கோடி ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டதாக கணக்கில் உள்ளது. இதில் 7 லட்சத்து 49 ஆயிரத்து 820 இன்சூரன்ஸ் அட்டைகளில் ஒரே செல்போன் எண் (9999999999) உள்ளது. மருத்துவக் காப்பீடு திட்ட சிகிச்சையில் 88,670 பேர் இறந்துள்ளனர். இப்படி சிகிச்சையின் போது இறந்த 3,346 நபர்களுக்கு புதிதாக சிகிச்சை பார்த்ததாகச் சொல்லியும் மோசடி செய்து காப்பீடு பெறப்பட்டிருப்பது தான் கொடுமை! இதில் பல்லாயிரம் கோடிகளில் படு பயங்கர முறைகேடுகள் நடந்திருப்பதாக சிஏஜி அறிக்கை உறுதி செய்கிறது.
2019 ஆண்டு நவம்பர் மாதம் வரை மாதம் 500&700 கோடி வரை மாதக் கட்டணமாக சுங்கச்சாவடியில் கட்டணம் வசூல் செய்திருந்த சூழல் மாறி தற்போது மாதம் 4000&4500 கோடி வரை மாதம் வசூலிக்கப்படுகிறது. இதையும் தாண்டி சுங்கச்சாவடிகளில் முறைகேடான வசூல் நடைபெற்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் உள்ள 600 சுங்கச்சாவடியில் ஐந்தில் மட்டும் சிஏஜி ஆய்வு செய்துள்ளது. 5 சுங்கச்சாவடிகளில் மட்டும் சிஏஜி ஆய்வு செய்ததில் ரூ.132 கோடி ஊழல் அம்பலமாகியுள்ளது. நாடு முழுவதும் ஆய்வு நடத்தினால் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தெரிய வரும் என்று சிஏஜி தெரிவித்துள்ளது. ஆனால் மக்களிடம் ஆண்டுக்கு 50000 கோடி இதில் அரசுக்கு வருமானம் என்று கூறி மத்திய அரசு பீற்றிக்கொள்கிறது.
அதானி அம்பானி சொத்துகளின் மதிப்பு 2014 முதல் 2024 வரை திடீரென்று உலக அளவில் முன்னேறுவதற்கு காரணம் மோடிதான். வீட்டு சமையல் பொருட்கள் முதல் நிலக்கரி சுரங்கங்கள், ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள் முதல் மின் உற்பத்தி வரை பல ஒப்பந்தங்களை கையாள்கிற இருவரும் உலக பணக்காரர்கள் என்றால் அந்த ஒப்பந்தத்தை வழங்கிய இந்தியா முதல் நாடாக அல்லவா இருக்க வேண்டும். ஏன் வளரும் நாடாகவே இருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் அதானி 350% வளர்ச்சியும் அதானி 1225% வளர்ச்சியும் அடைந்துள்ளனர். அதுவும் 2002ஆம் ஆண்டு முதல் அப்போது மோதி குஜராத் முதல்வராக இருந்தார். அப்போதிலிருந்து அதானியுக்கும் மோடிக்கு நட்பு இருந்து வருகிறது.
அமித்ஷா மகன் ஜெய்ஷா நடத்தி வரும் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 2014-ல் வெறும் ரூ.75 லட்சம் தான். இப்போது அந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.130 கோடி.
வெறும் 1000 பேருக்கும் பாஜக அரசு ஒரு சில பணக்காரர்களின் ரூ.25 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது.
ஆனால் ஜி.எஸ்.டி. வரி வருவாய் ஆண்டுக்கு 1 லட்சம் கோடி என்ற அளவில் இருந்த நிலையில் தற்போது 18லட்சம் கோடி வீதம் மக்களின் வயிற்றில் அடித்து ஜி.எஸ்.டி. என்கிற பெயரில் பிடுங்கப்படுகிறது. உலக பட்டினி நாடுகளில் இந்தியா 3வது இடத்தை பிடித்துள்ளது. இதுதான் மோடியின் ஊழல் ஒழிப்பு லட்சனம்.
இத்தனை ஊழல், முறைகேட்டிற்கும் பின்பும் அடங்காத மோடி கடந்த ஒன்பது ஆண்டுகளில் மட்டும் வெளிநாடுகளிலிருந்து கிட்டத்தட்ட 100 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி ஒவ்வொரு சாராசரி குடிமகன் தலையில் சுமத்தியிருக்கிறா மோடி.