நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஒரே கட்டமான ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த கட்சிகள் தலைமையில் தனித்தனியாக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
திருமயம், திருப்பத்தூர், காரைக்குடி, ஆலங்குடி, மானாமதுரை, சிவகங்கை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது.
விவசாயம் பிரதான தொழிலாக கொண்ட இந்த பாராளுமன்றத் தொகுதி தொடர்ந்து காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றுள்ளது.
மொத்த வாக்காளர்கள் 11,17,666
ஆண் வாக்காளர்கள் 552350
பெண் வாக்காளர்கள் 555260
கடந்த முறை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இந்த பாராளுமன்றத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள் மொத்தம் 6ல் 3ல் திமுகவும், 2ல் அதிமுகவும், 1ல் காங்கிரசும் வெற்றி பெற்றுள்ளது.
1980ல் ஆர்.வி.சுவாமிநாதன் என்னும் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து 1984 முதல் 1998 வரை பா.சிதம்பரம் தொடர்ந்து வெற்றி பெற்றார். அதாவது 1984, 1989, 1991, 1996, 1998 வரை பா.சிதம்பரம் வெற்றி பெற்றார்.
1999ல் காங்கிரஸ் வேட்பாளர் சுதர்சன நாச்சியப்பன் வெற்றி பெற்றார். இதற்கு அடுத்த தேர்தலில் 2004 மற்றும் 2009ல் பா.சிதம்பரம் அவர்களே வெற்றியை தக்க வைத்தார்.
2014ல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக அலையால் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் வெற்றி பெற்றார். அதற்கடுத்த பாராளுமன்றத் தேர்தலில் சிவகங்கையில் 566,104 வாக்குகள் பெற்று கார்த்திக் சிதம்பரம் வென்றார்.
கார்த்திக் சிதம்பரத்திற்கு எதிராக பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் களம் காண்கிறார். அதிமுகவின் சார்பில் சேவியர் தாஸ் அவர்களும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் எழிலரசி விசயேந்திரனும் களம் காண்கின்றனர்.
செல்வாக்கற்ற பா.ஜ.க.வேட்பாளர்
சிவகங்கை தொகுதியில் பாஜக வேட்பாளராக தேவநாதன் யாதவ் அறிவிக்கப்பட்டதற்கு, பாஜக தலைமைக்கு நன்றி தெரிவித்து காங்கிரஸ் மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளன.
அதில், சிவகங்கை தொகுதியில் பாஜகவின் எளிய வெற்றியை எட்டாக்கனியாக்கிய பாஜக தேசிய, மாநில தலைமைக்கு ஆழ்ந்த இரங்கலும், பாரட்டுகளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற போஸ்டர்களில் கார்த்தி சிதம்பரம் மற்றும் அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு, அவர்களை எளிதாக வெற்றி பெற செய்ய திருநெல்வேலியில் இருந்து சிவகங்கை பாராளுமன்றத்துக்கு சீட்டு கொடுத்த பாஜக தேசிய, மாநில தலைமைக்கு மனமார்ந்த நன்றி, நன்றி, நன்றி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவநாதன் யாதவ் 2016ல் திருவாடானை தொகுதியில் அதிமுகவின் கருணாஸை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 11,842 வாக்குகள் மட்டுமே பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் பலமான கூட்டணி அமைத்தே இவ்வளவு வாக்குகளை மட்டுமே பெற்றார். அதனால் இந்த முறை அதிமுக கூட்டணி இல்லாததால் அதிகபட்சமாக 10000 வாக்குகளை தாண்டுவது கூட தேவநாத யாதவ் அவர்களுக்கு சிரமமாகத்தான் இருக்கும். அந்தளவிற்கு தமிழகத்தில் பா.ஜ.க. எதிர்ப்புணர்வு கொண்ட மண்ணாக தமிழ்நாடு திகழ்கிறது.
கூட்டணி பலமற்ற அதிமுக வேட்பாளர்
அதிமுக கல்லல் ஒன்றியச் செயலாளரான சேவியர்தாஸ், சிவகங்கை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக பலமற்ற கூட்டணியாக இருக்கிறது. அதனால் இந்த முறை இந்த தொகுதியில் கார்த்திக் சிதம்பரம் அவர்களை எதிர்த்து போட்டியிட்டால் தோல்விதான் கிடைக்கும் என்பதால் இதற்கு முன்பு எம்.எல்.ஏ. எம்பிக்கள் உள்ளிட்ட எந்த அதிமுக பிரபலங்களும் போட்டியிட விரும்பவில்லை.
வளர்ச்சியே பெறாத நாம் தமிழர் கட்சி
எழிலரசி விசயேந்திரன் கணினி அறிவியலில் முதுநிலை பொறியியல் படிப்பு முடித்துள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் சிவகங்கை பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக களம் கண்டாலும் தனிப்பட்ட செல்வாக்கு அவருக்கு இல்லை. மக்களிடம் அறிமுகம் சுத்தமாக கிடையாது. நாம் தமிழர் கட்சி இன்னும் வளர்ச்சி பெறவில்லை.
மக்களின் கருத்து
பா.ஜ.க. கட்சியின் மோசமான நிர்வாகத்தாலும் வெளிப்படையாக சிபுசோரன், அரவிந்த கெஜ்ரிவால் கர்நாடகாவில் கவிதா போன்றோரின் கைதுகள் அவர் சர்வதியாக நடந்துக்கொள்கிறார் என்பது போன்ற சிந்தனைகள் மக்கள் மனதில் நிலைத்துவிட்டது. அதனால் தமிழ்நாட்டு மக்களிடையே பா.ஜ.க.வின் மீது நன்மதிப்பு இல்லை. தொடர்ந்து காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி. அதனால் மக்கள் இயல்பாக கார்த்திக் சிதம்பரம் அவர்களுக்கே வாக்களித்து வெற்றிப் பெறச் செய்வார்கள் என்கிறார் பட்டதாரியான கௌரி சங்கர்.
பா.ஜ.க.வின் மீதான நம்பிக்கையற்ற தன்மை மற்றும் ஜி.எஸ்.டி. கொள்ளை, சுங்ககட்டண கொள்ளை, விலைவாசி ஏற்றம், பெட்ரோல், டீசல் விலையேற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் இந்த முறை காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் அவர்களே வெற்றி பெறுவார் என்கிறார் போட்டே கிராபர் தொழில் செய்து வரும் பாண்டியன்.
இந்த தொகுதியில் அதிக பெண் வாக்காளர்கள் உள்ளனர். இயல்பாக ஆண்களைவிட பெண்கள் தான் அதிகம் தவறாமல் வாக்களிக்கக்கூடியவர்கள். ஆகையால் பெண்களுக்கான இலவச பேருந்து, மாதந்தோறும் 1000 ரூபாய் மற்றும் மேல்படிப்பு மேற்கொள்ளும் பெண்களுக்கான 1000 நிதியுதவி போன்றவை பெண்களுக்கு மிகவும் பயனுள்ளது. மேலும் 100 நாள் வேலைத்திட்டம் மற்றும் முதியோர் பென்சன், மாணவிகளுக்கான இலவச லேப்டாப், சைக்கிள் போன்ற பல்வேறு திட்டங்கள் மக்களுக்கு பயனளித்துள்ளது. திருப்திகரமாக இருக்கிறார்கள். அதனால் திமுக கூட்டணி வகிக்கும் கட்சியான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் வெற்றிபெறுவது உறுதி என்கிறார் இல்லத்தரசியான பரிமளம் அவர்கள்.
பட்டதாரி இளைஞரான கார்த்திக் சிதம்பரம் அவர்கள் பாராளுமன்றத்திலும் சரி அனைத்து தேசிய ஊடகத்திலும் நன்கு உரையாடக் கூடியவர். ஏமேஷனலுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நிதானமாகவும் அனைத்து செய்திகளையும் நிகழ்வுகளையும் இயல்பாக நன்கு கவனிக்கக்கூடியவர். அவருக்கு எழுதிக்கொடுக்கவோ அறிவுரை சொல்லவோ ஒரு டீம் தேவையில்லை. எப்போதும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர். கட்சி மற்றும் தொகுதியில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கொண்டு அதனை சமாளித்து இன்றைக்கு மக்கள் தலைவராக உயர்ந்து நிற்கிறார்.
பாரம்பரியமான குடும்பப் பின்னணி அதையும் தாண்டிய ப.சிதம்பரம் என்னும் ஆகப்பெரம் ஆளுமையின் மகனாக இருக்கும் சிதம்பரம் அவர்கள் இந்தக் இரண்டு கூறுகளையும் தாண்டி தனித்துவமான செயல்பாடுகள், பண்பு நலன்களால் உயர்ந்து நிற்கிறார். புன்னகையோடு வலம் வரும் கார்த்திக் சிதம்பரம் சாதி, மதக் கூறுகளை தாண்டி மக்களின் பிள்ளையாக பார்க்கப்படுகிறார்.
அவர் இந்த தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி…