மோடி கூட்டணி கட்சிகளுடன் சேலம் கூட்டத்தில் கட்டிய பொய் மூட்டையம் உண்மையும்

0
200

செய்தி  1

தமிழ் ஒரு பழமையான மொழி தமிழில் பேச தெரியவில்லை என்று என்னும் பொழுதே நெஞ்சம் வலிக்கிறது என்று சொலகிறா மோடி

உண்மை என்ன?

உதட்டில் தமிழ் , உள்ளத்தில் சமஸ்கிருதம் ஒன்றிய அரசால் நடத்தப்படும் கேந்திர வித்யாவில் தமிழ் சொல்லி தருவதுமில்லை ஆசிரியரை நியமிப்பதும் இல்லை எனபதுதான் நிதர்சனம்.

தமிழுக்கு ஒதுக்கிய நிதி 11 கோடி 86 இலட்சம் ரூபாய், சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கிய நிதி 198 கோடியே 83 இலட்சம் ரூபாய்

 

செய்தி  2

அடுத்த 5 ஆண்டுகள் தமிழகத்தின் வளர்ச்சிக்கு முக்கியமானது என சொல்கிறார் மோடி.

உண்மை என்ன?

தமிழ்நாடு வரலாறு கண்டிராத மழையும் அதன் விளைவாக வெள்ளமும் தமிழ்நாடு முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது அப்போதெல்லாம் மோடி தமிழ்நாட்டை எட்டிக் கூடப் பார்க்கவில்லை. தேர்தல் நெருங்க நெருங்க தமிழ்நாட்டுக்கு வாரம் இருமுறை வருகிறார்.

வெள்ளப் பேரிடருக்கு மட்டுமா வரவில்லை? மணிப்பூரில் மாதக் கணக்கில் கலவரம் நடக்கும் போதுகூட அவர் எட்டிப் பார்க்கவில்லை.

நிதியமைச்சர் சீதாராமனோ வெள்ள நிவாரணம் என்ற பெயரில் பிச்சைக் கேக்குறாங்கன்னு சொல்றாங்க. நம்ம வரிப்பணத்தை கொடுத்திட்டு கையேந்தி நிக்க வேண்டிய நிலைமை. இதுல 40 எம்பி தமிழ்நாட்டிலிருந்து நம்ம ஜெயிக்கவெச்சி அனுப்பினா அடுத்த 5 வருசத்துல அறுத்து தள்ளிருவாராம்

சரி அப்படி என்ன இதுவரை அறுத்து தள்ளினார் என்று பார்ப்போம்

1 ரூபாய் வரியை வாங்கிக் கொண்டு 26 பைசாவை திருப்பிக் கொடுக்கிறார்கள்.

ஒருபானை சோற்றுக்கு ஒருசோறு பதம் அதுபோல் மிகவும் நெருக்கடியான நேரத்தில்கூட உதவாதவர்கள் அருந்தகைக்கு சுண்ணாம்பு தடவாதவர்கள் நம்மிடம் வாக்கு கேட்டு வருகிறார்கள்.

 

செய்தி  3

அடுத்த 5 ஆண்டுகளில் ஊழலுக்கு எதிராக நான் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப் போக்கும் காலமும் அது தான்.

உண்மை என்ன?

ஊழலை சட்டபூர்வமாய் ஆக்கிய தேர்தல் பத்திர முறையை அறிமுகப்படுத்தினார் மோடி.

அம்லாக்கத் துறையைப் பயன்படுத்தி மிரட்டிப் பணம்பெற்ற அவலமும் அம்பலமாகிவிட்டது

உச்சநீதிமன்றத்திடம் குட்டு வாங்கி விழி பிதுங்கி நிற்கிறார்.,

கர்நாடகாவில் 40 % கமிஷன் ஆட்சி என்று பேர் வாங்கி தோல்வியை சந்தித்தது பாஜக.

வாஜ்பாய் காலத்தில் கார்கில் போரில் இறந்த ராணுவவீரர்களுக்கு சவப்பெட்டி வாங்கியதில் ஊழல் செய்தது தொடங்கி கொரோனா காலத்தில் உயிர்காக்கும் வெண்டிலேட்டர் வாங்கியதில் ஊழல் என ஊழலில் கரைகண்ட கட்சி பாஜக.

எதிர்க்கட்சியில் இருக்கும் ஊழல்வாதிகள் என்று சொன்ன எதிர்க்கட்சியின் பெரும்புள்ளிகளை தனது அடியாள் படையான அமலாக்கத் துறையை வைத்து மிரட்டி தன் கட்சியில் சேர்த்துக் கொள்வது, முதல்வர் பதவி வரை கொடுப்பது, பணிய மறுப்பவர்களை சிறைக்கு அனுப்புவது அல்லது கூட்டணிக்கு வர நிர்பந்திப்பது என்று மோடி ஊழலை ஒழித்த இலட்சணத்தை இந்த நாடு பார்த்த பின்னும் இன்னும் ஒரு 5 ஆண்டு ஆள வேண்டுமாம்!

 

செய்தி  4

ஒரு இராணுவ தளவாடமும் ஒரு ஜவுளிப் பூங்காவும் தொடங்கப் போவதாக மோடி சொல்கிறார்.

உண்மை என்ன?

ஆவடியில் உள்ள டேங்க் தொழிற்சாலையைத் தனியாருக்கு தாரை வார்த்துவிட்டார் மோடி.

மோடியின் பணமதிப்பிழக்கம், ஜி.எஸ்.டி. யால் திருப்பூரில் இருந்து ஜவுளித் தொழில் சிதைக்கப்பட்டு அவை வங்கதேசத்திற்குப் போய்விட்டன.

மெட்ரோ இரயில் திட்டத்திற்கு 9000 கோடி ரூபாய் பணம் கொடுக்க மறுக்கிறார் மோடி. மாநில அரசை மொத்த செலவையும் ஏற்று செய்து கொண்டிருக்கிறது.

எய்ம்ஸ் மருத்துவமனை என்ற பெயரில் இருந்த ஒற்றை செங்கலையும் காணவில்லை.

10 ஆண்டுகளில் மோடி ஏற்படுத்தி வளர்ச்சியால் மூச்சு திணறிக் கிடக்கிறோம். இன்னும் ஒரு 5 ஆண்டா?

 

செய்தி  5

குடும்ப ஆட்சியை ஒழிப்பேன் என்று முழங்கினார் மோடி

உண்மை என்ன?

மேடையில் ராமதாஸ்- அன்புமணி, மூப்பனாரின் மகன் ஜி.கேவாசன், ஓபிஏஸ் மகன் ரவீந்தரநாத், குமரிஅனந்தன் மகள் தமிழிசை என்று ஒரு பெரும்பட்டாளமே மேடையில் நிற்கிறது.

அமித்சா மகன் பிசிசியின் தலைவராக இருக்கிறார்.

கர்நாடக மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா எடியூரப்பாவின் மகன், எஸ்.ஆர். பொம்மையின் மகன் பசவராஜ் பொம்மை முதல்வாரானார்.

சுஷ்மா சுவராஜ், வசுந்தரா, மாதவ ராவ் சிந்தியா என வாரிசு அரசியலின் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது..

ஆனால், வாரிசு அரசியல் பற்றி நீட்டி முழங்குகிறார் மோடி.