செல்போன், சமூக ஊடகத்திற்கு அடிமையாவதிலிருந்து உங்கள் பிள்ளைகளை மீட்க புத்தக வாசிப்பை பழக்கப்படுத்துங்கள்

0
111

பத்திரிக்கையாளர் மற்றும் பதிப்பாளர் ந.ரமேஷ்குமார் தொடர்ச்சியாக நடத்தி வரும் புத்தகக் கண்காட்சி தற்போது சென்னை கோடம்பாக்கம் – வள்ளுவர் கோட்டம் பிரதான சாலை பெரியார் நகர் பேருந்து திருத்தத்திற்கு அருகாமையில் உள்ள சோலையப்பன் தெருவில் உள்ள நவபாரத் மெட்ரிக் பள்ளியில் ஏப்ரல் 27 முதல் மே 7 வரை நடைபெற்று வருகிறது.

இந்நிகழ் விற்கிடையே மே தினத்தை முன்னிட்டு உழைக்கும் பெண்களை போற்றும் விதமாக சிறப்பு நிகழ்வு மே 2ஆம் தேதி நவபாரத் மெட்ரிக் பள்ளியின் முதல்வர் லலிதா தேவி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

உழைக்கும் பெண்கள் என்ற தலைப்பில் சமூக செயற்பாட்டாளர் மனிதி செல்வி அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது உழைக்கும் பெண் களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும் பாதுகாப்பு, சுதந்திரத்தை காக்க வேண்டும் வலியுறுத்தினார்.

20 ஆண்டுக்கும் மேலாக மக்கள் தளத்தில் பல்வேறு போராட் டங்களை முன்னெடுத்து தொடர்ந்து களப்பணியில் ஈடுபட்டு வரும் தமிழ் தேச மக்கள் முன்னணி நிர்வாகி வ.ரமணி அவர்களுக்கு விருது வழங்கியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டு புத்தகம் பரிசளிக்கப் பட்டது. இந்நிகழ்வில் தோழர் பாஸ்கரன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இறுதியாக ந.ரமேஷ்குமார் பேசும்போது மாணவ, மாணவியர்களை சமூக ஊடக மயக்கத்திலிருந்து மீட்கவும் வாசிப்பு பழக்கத்தை அதிகப் படுத்தவும் தொடர் நிகழ்வாக புத்தகக் கண்காட்சி நடத்துகிறேன் என்றும் கடந்த 2 ஆண்டுகளில் பபாசி நிர்வாகிகள் நிகழ்த்திய பல கோடி ஊழல்கள் மற்றும் நூல் கொள்முதல் பெயரில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் எதிர்கால திட்டம் குறித்து விளக்கினார்.