மொத்தமுள்ள 2 கோடியே 25 லட்சத்துக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்களில் வருமான வரி செலுத்துபவர்கள், கார் வைத்திருப்பவர்கள் விவரங்களை நீக்கிவிட்டு சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் மாதந்தோறும் 1000 பெற்று வந்தனர்.
ஆனால் கடந்த அரசு வாக்கரசியலுக்காக மேலும் 31 லட்சம் பேருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கியது. இந்த பயனாளர்களின் குடும்பப் பின்னணியினை ஆய்வு செய்து வழங்குவதுதான் சமூக நீதியாக இருக்கும். அப்போதுதான் வரிப்பணம் வீணாகாமல் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற பயன்படுத்த முடியும்,
அதன்படி முதற்கட்டமாக
1000 உதவி பெற அரசு வகுத்துள்ள விதிகளின்படி 300 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் சுமார் 1 கோடி குடும்பத்தினரில் 2,5 லட்சத்திற்குள் ஆண்டு வருமானம் பெறும் சுமார் 2,5 லட்சம் குடும்பம் மற்றும் வரி செலுத்தாத 60 லட்சம் குடும்பம் (சுமார் 6,5 கோடி பேர்) என மொத்தம் 62,5 லட்சம் கும்பங்களுக்கு மட்டுமே இந்த 1000 பணம் வழங்கப்பட வேண்டும், ஆனால் தேர்தலை கணக்கில் கொண்டு திமுக 1,31 கோடி குடும்பங்களுக்கும் 1000 பணத்தை வழங்கி வந்தது. 19க்கும் மேற்பட்ட வாரியங்களுக்கு பணத்தை ஒதுக்காமல் பத்திரிக்கையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் உள்ளிட்ட பலதரப்பினருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யாமல் நிதிஆதரத்தை காரணம் காட்டி வஞ்சித்து வந்திருக்கிறது. இந்த தவறை இனி அணுமதிக்க முடியாது.
ஆகையால் புதிதாக பொறுப்பேற்க உள்ள விஜய் முதற்கட்டமாக சில மாதங்களுக்கு திமுக அரசு வழங்கி வந்த மாதந்தோறும் 1000 ரூபாயை 1,32 கோடி பேருக்கும் தவெக வழங்கிட வேண்டும்,
இரண்டாம் கட்டமாக
இந்த 1,31 கோடி குடும்பத்தின் பின்னணியை ஆய்வு செய்து சொந்த வீடு, வாடகை விடப்பட்டுள்ள வீடு, குடும்பத்தி சொத்து, கணவனின் மாத சம்பளம், குடும்ப வருமானம் போன்ற பலவற்றை ஆய்வு செய்தால் அதில் பாதிக்கும்மேல் கழித்துக்கட்ட முடியும். தோராயமாக 62,5 லட்சம் குடும்பங்கள்தான் வசதியற்றவர்களாக இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் அந்த 62,5 குடும்பங்களுக்கு மட்டும் விஜய் அறிவித்துள்ள கூடுதல் 1500 பணத்தை வழங்கிட வேண்டும்,
இதுகுறித்து போதிய விளக்கத்தை நிதி சூழலையும் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
மேலும் ரேசன் கார்டு வாங்க ஆயிரக்கணக்கில் லஞ்சம் கேட்டும் அரசு அதிகாரிகளால் ரேசன் கார்டு இல்லாமல் பல்லாயிரக்கணக்கான மக்கள் இருந்து வருகின்றனர். மேலும் வங்கி கணக்கு திறக்கவும் பல்வேறு நடைமுறைகள் மற்றும் தயக்கம், கூச்சம் , அடிக்கடி முகவரி மாறுதல் போன்ற காரணத்தினால் இன்னும் ஏழை எளிய மக்கள் வங்கி கணக்கு திறக்காமல் இருக்கின்றனர். அதனால் ரேசன் கார்டு மற்றும் வங்கி கணக்கு இல்லாத குடும்பங்கள் என்ற நிலையை உருவாக்க நிர்வாகத்தை சீர்படுத்த வேண்டும், அரசு இதனை ஒரு அறிவிப்பாக வெளியிட்டு அரசு அதிகாரிகள் அத்தகைய குடும்பங்களின் வாசலுக்கு சென்று அந்த சேவைகளை வழங்க வேண்டும், கடமையை செய்ய தவறினால் இனி இனி நாம் அலைய வேண்டும் என்ற சூழலை அதிகாரிகள் உணர்ந்தால் மட்டுமே தங்கள் கடைமை செய்வார்கள். இந்த புரட்சிகரமான அறிவிப்பை விஜய் துணிந்து அறிவிக்க வேண்டும்,
குறிப்பாக 24 லட்சம் பேர் அதாவது 1 கோடி குடும்ப உறுப்பினர்கள் வரி செலுத்துகிறார்கள். அதுபோல தமிழ்நாட்டில் 80 லட்சம் பேர் (குடும்பங்களாக கணக்கிட்டால் சுமார் 3 கோடிப்பேர்) சொத்து வரி செலுத்துகிறார்கள். இந்த சொத்து வரி மற்றும் வருமான வரி கட்டுபவர்களின் மிகை மதிப்பீடாக தமிழ்நாட்டின் மக்கள் தொகை 8 கோடிப்பேரில் மீதமுள்ள 5 கோடிப்பேரில் ஆதாவது 1,5 கோடி குடும்பங்களை கண்டறிந்து அதில் கணவன் மனைவி இருவரின் பணி மற்றும் குடும்ப வருமானம், சொத்து, கார் உள்ளிட்ட அளவீடுகளை ஆராய்ந்தால் சுமார் 60 லட்சம் குடும்பங்கள் உரிமைத்தொகை வாங்க தகுதியானவர்களாக தேர்வு செய்ய வாய்ப்பு இருக்கிறது.
அதோடு மருத்துவர் மருத்துவரை மணப்பதும், பொறியாளர் பொறியாளரை மணப்பதும், அரசு ஊழியர் அரசு ஊழியரை மணப்பதுமாக பணம் பணத்தோடுதான் சேர்கிறது. அதுபோல தமிழ்நாட்டில் பெரும் சொத்து மற்றும் வருமானம் வெறும் 10% மக்களிடம் குவிந்து கிடக்கிறது. அதனால் சமச்சீரான வாழ்க்கை இங்கே இல்லை.
தமிழ்நாட்டின் சராசரி வருமானம் 2 லட்சமாக கணக்கிடக்கப்படுகிறது. இந்த தவறாக பொதுமைப்படுத்தலால் 15 மற்றும் 20க்குள் மாத சம்பாதிக்கும் மக்கள் சுமார் 40% மக்களுக்கான இந்த அரசு திட்டத்தை முதற்படியாக வகுக்க வேண்டும்.
இந்த பார்வை எந்த அரசுக்கும் இருந்ததில்லை. ஆகையால் விஜய் தலைமையிலான அரசு மாதந்தோறும் பெண்களுக்கு கூடுதலாக 1500 வழங்குதிலேயே இந்த உண்மை பயனாளிகளை கண்டறிய வேண்டும், இது குறித்து நிர்வாக ரீதியாக இந்த கணக்கீடுகள் நிதித்துறையிடம் குறிப்பாக அந்த துறையின் அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடமே எளிமையாக கேட்டுப் பெற முடியும். மக்களின் வரிப்பணத்தை எல்லோருக்கும் வாரி இறைக்காமல் தகுதியானர்களுக்கும் கஷ்டப்படுகிறவர்களுக்கும் போய் சேர்ந்தால் இந்த கூடுதல் 1500 அல்லது இந்த 2500 ரூபாய் அருமருந்தாக அமையும்.
முதற்கட்டமாக இந்த குறிப்பிட்ட பின்தங்கியவர்களை முதுலுதவி என்ற அடிப்படையில் பணப்புழக்கம் சீராக்குதல், வறுமைகோட்டை துடைத்தல் என்ற உயரிய கோட்பாட்டின் அடிப்படையில் எதிர்க்கட்சிகளின் தூற்றுதலுக்கு அஞ்சாமல் தீர்க்கமாக விஜய் தலைமையிலான அரசு மக்கள் நலன் அரசாக செயல்பட வேண்டும்.
ந,ரமேஷ்குமார்
பத்திரிக்கையாளர் மற்றும் பதிப்பாளர்
தொடர்புக்கு 9791103949












