குப்பையில் கிடக்கும் கோடிகள்

0
65

தமிழகத்தில் திடக்கழிவு மேலாண்மையில் பல்லாயிரம் கோடி ஊழல்
தமிழகத்தில் தினசரி 1 லட்சம் டன் குப்பைகள் உருவாகிறது. இதனுடைய தின வணிகம் 20 கோடி ரூபாய்.

தற்போது 100 கோடி டன் குப்பைகள் இருப்பு இருக்கிறது. இதனுடைய வணிக மதிப்பு 2 லட்சம் கோடி. பல தனியார் நிறுவனத்திடம் குப்பை அள்ளவும் தரம் பிரிக்கவும் அரசின் பணத்தை பல்லாயிரம் கோடிகளை கொடுத்து பெரிய அளவில் கமிஷன் பெறுவதால் தரம் பிரிப்பது, மறுசுழற்சி செய்வது உள்ளிட்ட இதர பணிகளை செய்யாமல் தனியார் நிறுவனங்கள் சுணக்கம் காட்டுகின்றனர். குப்பை மேலாண்மை பணிகளை சரிவர மேற்கொள்ளாததால் மக்களின் பொது சுகாரதாரம் கேள்விக்குள்ளாகி இருக்கிறது.
தமிழகத்தில் துப்புரவுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை கிட்டதட்ட ஒன்றரை லட்சம் பேர். கிராமங்களில் பிளாஸ்டிக் டம்ளர், கேரி பை, கழிவு இறைச்சி உள்ளிட்ட அனைத்து குப்பைகளையும் தரம் பிரிக்காமல் ஒரே இடத்தில் மலை போல் குவித்து வைக்கின்றனர். பின்னர் இடப்பற்றாக்குறை ஏற்படும் சூழலில் தீ வைத்து அழிக்கின்றனர். பின்னர் நீர்நிலைகளின் குப்பை கொட்டி வருகின்றனர். இதனால் சுற்றுப்புற சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

மக்கள் வரிப்பணத்திலிருந்து பணத்தை பெறும் தனியார் நிறுவனங்கள் தமிழகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்துவது கிடைய்£து.
அர்பேசர், ப்ரீமியர். ராம்கி போன்ற நிறுவனங்கள் குப்பை மேலாண்மைக்கு சில 1000 கோடிகளை அரசிடமிருந்து பெற்றுக்கொண்டு குறைவான ஊதியத்தில் ஆட்களை வேலை வாங்கும் சூழலில் அதை ஏன் உள்ளாட்சி கட்டமைப்பை வைத்து செய்யக்கூடாது. அல்லது ஏன் இதற்கென்று தனி கட்டமைப்பை உருவாக்கக்கூடாது என்ற கேள்வி இன்னும் காத்திரமாக எழவில்லை.

1 டன் குப்பையில் 2 சிலிண்டர் என்றால் 1 லட்சம் டன் குப்பையில் 4 லட்சம் கிலிண்டர்கள் உருவாக்க முடியும்.
50 லட்ச டன் இயற்கை உரம் (50 லட்சம் ஏக்கர் விவசாய நிலத்திற்கு உரமிட முடியும்), மீதமிருக்கும் குப்பையின் உலோகங்களை தயாரிக்கலாம். குப்பையிலிருந்து கிடைக்கும் மீத்தேனிலிருந்து மின்சாரம் தயாரிக்கலாம்.
எஞ்சிய பொருட்களிலிருந்து கல் மற்றும் மண் போன்ற பொருட்கள் தயாரித்து சாலைக்கு பயன்படுத்தலாம்.

குப்பைகளை பிரித்து ஒவ்வொன்றையும் அதன் தன்மைக்கு ஏற்ப மறுசுழற்சி செய்யலாம். இப்படியாக இதன் பின்னால் மிகப்பெரிய வணிகமும் வேலைவாய்ப்பும் இருக்கிறது.
ஆனால் மிக முக்கியம். தரம் பிரிக்கப்பட்ட பொருட்களிலிருந்து கட்டுமானம் மேற்கொள்ள முடியும். ஏன் என்றால் எரிக்கப்பட்ட பொருட்களிலிருந்து எஞ்சும் சாம்பல், எரியும் போது ஏற்படும் புகை, சாம்பல் படிமம் மிகவும் ஆபத்தானது. அதுபோலத்தால் பிரிக்கப்படாமல் குப்பைகளிலிருந்து தயாரிக்கப்படும் மணல், கல்லும் மழைநீர் வெளியில் சுற்றுச் சூழலை மனிதரக்ளை பாதிக்கும்.
ஆகையால் எரிப்பது மிகவும் ஆபத்தானது என்பது சுற்றுச்சூழல் ஆய்வாளர்களின் கருத்து. அதற்கு மாற்று ஏற்பாட்டை அவர்கள் குறிப்பிடவில்லை. ஆக அதற மாற்றையும் நாம் ஆராய வேண்டும்.

அதாவது பிளாட்டிக் பாட்டில், மெடிக்கல், தூர்நாற்றம், மரம், சமையல் கழிவு, பழைய மரச்சாமான்கள், பேப்பர் இதனை தரம்பிரித்து யாரும் கொட்டுவதும் கிடையாது. முடிந்த அளவு துப்புரவு பணியாளர்கள் அதனை தரம் பிரித்து எடுத்தாலும் அதில் 80% அந்த வேலையை கறாறராக செய்வதில்லை என்பதுதான¢ உண்மை.
ஆனால் அரசு தரப்போ கழிவை வார்டுக்கு ஏற்ப எடுத்துக்கொண்டுபோய் கொட்டி மீண்டும் ஒரு குழுவால் கறாராக தரம் பிரிக்கப்படுகிறது என்கிறது.
வீட்டுக்கு வீடு குப்பைகளை சேரித்தாலும் பொதுவாக ஒவ்வொரு தெருவிலும் இருக்கிறது பெரிய இருப்பு கண்ட்டெய்னரில் அதை நாம் போடுகிறோம். வண்டி வந்து அதைத் எடுத்துக்கொண்டு போய் கிடங்கில் போட்டு விடும். அந்த லாரியில் கழிவுகள் சிதறி கொண்டு கொண்டு துர்றாற்றம் வீசக்கூடிய கழிவு நீர் வடிந்துக்கொண்டே போகும்.
இதனை நாம் எல்லோரும் அறிந்ததுதான்.

இவ்வாறு இல்லாமல் துர்நாற்றம் வீசாமல், வடியாமல் இருக்கும் புதிய தொழில் நுட்ப வண்டிகள் 10 ஆண்டுக்கு பின்பு தற்போதுதான் உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால் இதனை தமிழகம் முழுவதும் அதனை அமல்படுத்தவில்லை. புதிய வண்டிகள் வாங்குவதற்கு நிதிகள் வேண்டும். வாங்கிய பழைய வண்டிகளை என்ன செய்வது என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.
பெரிய பெரிய குப்பைக் கிடங்கை தனியார் கம்பெனிக்கு லீசுக்கு விட்டுவிடுகிறது அரசு. ஆனால் அவர்களால் தரம் பிரிக்கும் வேலை தாமதமாக நடைபெறுகிறது.
தரம் பிரித்து ரீ சைக்கினிங் செய்வது குப்பைகளை எரித்து கல், மண்ணாக பயன்படுத்துவது, எரித்து அதை சாம்பலாக கான்கிரிட்டில் பாதுகாப்பது என்ற பல வழிகளில் கையாளப்படுகிறது.

தரப் பிரிக்கும் பணிகளை ஆமை வேகத்தில் செய்தால் குப்பைகளால் மூளை, நரம்பு மண்டலம் பாதிப்பு, புற்றுநோய், நிலத்தடி நீர் பாதிப்பு, மழைக் காலங்களில் குடிநீரில் சாக்கடை நீர் மற்றும் குளங்களில் இந்த சாறு கலப்பதை தடுக்க முடியாமல் போகிறது.
இந்தியாவிடம் ஸ்வச் பாரத் மிஷன்- நகர்ப்புறம், கோபர்தன் 16 அமைச்சகங்களின் திட்டங்கள் செயல்படுத்திவதில் அதிகாரிகள் தோல்வி கண்டுள்ளனர். இந்தியாவில் ‘திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026’ ன்படி, வீடுகள் மற்றும் ஹோட்டல்களிலேயே குப்பைகளை மக்கும், மக்காத குப்பை எனப் பிரிப்பது சட்டப்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பணிகள் கறாராக அமல்படுத்துவது இல்லை. இதற்கு காரணம் அரசு அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களின் கட்டிங்தான் முக்கிய காரணம்.
இன்றும் ஒப்பந்தக்காரர்களுக்கு, குப்பையின் ‘தரம்’ அடிப்படையில் பணம் தராமல், ‘எடை’ அடிப்படையில் பணம் தருகின்றன. அதனால் தரம் பிரிக்கப்படாத கலவைக் கழிவுகள் நேராக குப்பைக் கிடங்குகளில் கொட்டப்பட்டு அழுகுகின்றன. இந்தக் கழிவுகளைத் திறந்தவெளியில் எரிக்கும்போது, நகரங்களில் உயிருக்கே ஆபத்தான றிவி2.5 மாசுபாடு ஏற்படுகிறது. இது ஆண்டுக்கு ஆண்டு 10% வரை அதிகரிக்கிறது. அதைப்போல அழுகும் குப்பைகளிலிருந்து வெளியாகும் மீத்தேன் வாயு, கார்பன் டை ஆக்சைடை விட பல மடங்கு அபாயகரமானது.
இதற்கு தீர்வு என்னவென்றால்…

தனியார் காண்ட்ராக்டிடம் கொடுத்து அரசே 2000 கோடி பணத்தை தாரமல் சுய உதவிக் குழுக்கள் மூலம் சம்பளத்திற்கே அல்லது இதில் தினசரி 20 கோடி வணிகம் தினமும் 400 கொடுக்க முடியும்.
மறுசுழச்சி, பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை என்று கணக்கிட்டால் அவர்களாகவே பிழைத்துக்கொள்ள முடியும். காண்ட்ராட் போட்டு கமிஷன் வாங்கி வேலையே நடக்காமல் நாட்டை சீரழிக்காமல் சுய உதவிக்குழுக்கள் அல்லது வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஆட்களை பணியமர்த்தி 5 லட்சம் பேருக்கு வாழ்வளிக்கலாம்.
அதற்கு மகளிர் சுய உதவிக்குழுக்களை அல்லது நிரந்தர பணியாளர்களை ரூ.30000 மேல் சம்பளம் கொடுத்து இந்த தரம் பிரிக்கும் பணிகளை செய்யலாம். 1 முதல் 5 லட்சம் பணியாளர்கள் வரை இந்தப் பணிக்கு ஈடுபடுத்தலாம்.

வீடுகளில் வரும் பிளாஸ்டிக் கழிவுகளை கிலோவிற்கு ரூ. 8 கொடுக்கலாம். மேலும் ஒவ்வொரு வாரத்திற்கு ஒரு நாள் ஒவ்வொரு குப்பைகளை பழைய துணிகள், பாட்டில்கள் என பிரித்து வாங்குவதன் மூலம் அதனை மறுசுழற்சிக்கு எளிதில் கொண்டு செல்ல முடிகிறது.
ஆங்காங்கே பட்டில்களை துகளாக்கும் மெஷின்கள், காய்கறி கழிவுகள் மற்றும் மக்கும் குப்பைகளை வீடுகளில் பெண்களே உரமாக செய்யும் மிஷின்களையும் பயோ கேஸ் உற்பத்தி கருவிகளை பயிற்சியும் வழங்கினால் சூழலும் மாறுபடும்.
வேலையில்£த்திண்டாட்டம் பணப்புழக்கம் இல்லாத சூழல், விலைவாசி ஏற்றத்தை சமாளிக்கு இது ஒரு நல்வாய்ப்பாக இருக்கும். வரும் முன் காக்க வரும் முன் யோசிப்பது சிறந்தது.

இதைத் தாண்டி தரம் பிரிக்கப்பட்ட பொருட்களை மெஷினில் போட்டு துகள்களாக மாற்றுவது, அதிலிருந்து மாற்று பொருட்கள் செய்வது, விற்பனை செய்வது, லாரியில் எடுத்துக்கொண்டு போவது, மார்க்கெட்டிங் செய்வது என்று மேலும் பல வேலைவாய்ப்பு உருவாகும். இதனால் பணப்புழக்கம் அதிகமாகும்.
கல்குவாரி, ஆற்றுமணல் போன்று இயற்கை வளங்கள் சுரண்டப்படுவது போலல்ல. இது குப்பைகளை உருவாவதை தடுக்க முடியாது. உருவாவதை தேக்கி வைத்து காலத்தை வீணாக்கி அதனை கார்ப்பரேட்டிடம் கொடுப்பதற்கு பதிலாக அன்றைக்கு அன்றைக்கு வருகிற கழிவை மேலாண்மை செய்வதற்கு தெருவுக்கு இருவரை பணியில் அமர்த்தினால் எளிதாகும்.

அதோடு வீட்டிற்கு வீடு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பல்வேறு சேவைகளை வழங்குவது போன்ற பல பணிகளுக்கு இந்த செட்டப் அரசுக்கு பளனளிக்கும்.
குறைந்த சம்பளம் கொடுப்பதால் வறுமையில் இருக்கும் தலித் மக்கள் இதில் அடிபட்டு இதில் சாதித்தொழிலாக மாறிவிட்டதோடு இன்னும் இழிவு அவர்களை தொடர்கிறது. அதிக சம்பளம் கொடுத்தால் தலித் மற்றும் பிற சமூகத்தவரும் இதில் வேலை செய்யும் வாய்ப்பும். அதனால் சமூக ஒருங்கிணைப்பும் ஏற்படும்.

ந,ரமேஷ்குமார்
பத்திரிக்கையாளர் மற்றும் பதிப்பாளர்
தொடர்புக்கு 9791103949