மிரட்டும் எபோலா: இந்தியாவிலும் தீவிர கவனம் மற்றும் கண்காணிப்பு தேவை

0
54

இதுகுறித்து ஓய்வு பெற்ற மருந்தாளுநர்கள் நல சங்க மாநில அமைப்பாளர் வே பழனி வேலன் கூறியதாவது: எபோலா வைரஸ் முதன் முதலில் 1976 ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ ஜனநாயக குடியரசில்(DRC) எபோலா நதிக்கு அருகில் கண்டறியப்பட்டது.
எபோலா நதிகரைக்கு அருகே முதலில் தொற்று கண்டறியப்பட்டதால் இவ் நதியின் பெயரே வைரஸுக்கு சூட்டப்பட்டது.
இது விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு அரிய வகை ஆனால் மிகவும் ஆபத்தான வைரஸ்.
1976 க்கு பின் உருமாற்றம் கண்ட வைரஸ் ஆப்பிரிக்காவை மிரட்டி வந்தது.
தற்போது வரை சுமார் 15,000 உயிர்களை பலிக் கொண்டிருக்கிறது இவ்வகை தொற்று.
வைரஸ் ஆப்பிரிக்காவை மீண்டும் அச்சுறுத்த தொடங்கி இருப்பதால் தற்போது சர்வதேச சுகாதார அவசர நிலை அறிவித்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம்.
எபோலா தொற்றின் சராசரி இறப்பு விகிதம் 50 சதவீதமாக இருக்கிறது.
மேலும் கடந்த கால எபோலா தொற்றுக்களை வைத் து பார்க்கும் போது இறப்பு விகிதம் 25% முதல் 90 சதவீதம் வரை இருந்துள்ளன என சுகாதார அவசர நிலை அறிவித்த சுகாதார நிறுவனம் கூறுகிறது.
பாதிக்கப்பட்ட நபரின் ரத்தம் வாந்தி மலம் உமிழ் நீர் சிறுநீர் வியர்வை தாய்ப்பால் உள்ளிட்டவை மூலம் இந்த வைரஸ் அடுத்தவருக்கு பரவலாம்.
இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் ஏதும் இன்று வரை கண்டறியப்படாததால் தனிமைப்படுத்துதல் மட்டுமே தற்போதைக்கு இருக்கும் ஒரே வழியாகும்.
உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல் படி நமது நாட்டில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துதல் வேண்டும்.
மேலும் மத்திய மாநில அரசுகள் விமான நிலையத்தில் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் பயணிகளை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தல் வேண்டும்.
எபோலா தொற்று குறித்து பயம் தேவையில்லை அதே நேரம் அலட்சியம் காட்டாமல் விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும் என்கிறார்.