இணையத்தில் பரவலாக பெரும் வைரலாகி வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி யார்? பின்னணி என்ன? – எழுத்தாளர் வே பழனி வேலன்

0
81

இளைஞர்கள் மற்றும் கரப்பான் பூச்சிகள் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் அவர்கள் கூறிய கருத்துக்களைத் தொடர்ந்து கரப்பான் பூச்சி ஜனதா எனும் கட்சி (cockroach janata party ) சமூக ஊடகங்களில் பெரும் விவாத பொருளாக மாறி வைரல் ஆகிறது.

நீதிபதி சூரியகாந்தின் கருத்துக்களை தொடர்ந்து சமூக ஊடகங்களில் நையாண்டி பிரச்சாரத்தை இளைஞர்கள் பலரும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தின் மையமாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி(CJP) தற்போது ஊடகங்களில் வளம் வந்து கொண்டிருக்கின்றன.

மேற்காணும் பெயரில் இணையம் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் இன்று வரை ஐம்பது லட்சத்திற்கும் மேலானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

மேலும் இக்கட்சியில் சேர 5 லட்சத்திற்கும் மேல் இளைஞர்கள் இணையத்தில் பதிவு செய்துள்ளனர்.

வேலை வாய்ப்பின்மை கடுமையான விலைவாசி உயர்வு போன்ற அன்றாட வாழ்வாதார பிரச்சனைகள் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி இக்கட்சி இளைஞர்கள் தினம் மீம்ஸ் மூலம் மற்றும் இணையதளம் வாயிலாக பெரும் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளனர்.

இணையத்தையும் தாண்டி நிஜ உலகில் தற்போது இவரது மீம்ஸ்கள் இளைஞர்களின் குரலாக நம் நாட்டில் உருவெடுத்துள்ளன.

சி பி ஜெ எனும் இக்கட்சி இந்திய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதோடு மட்டுமல்லாமல் நம் நாட்டு இளைஞர்கள் ஏதோ ஒன்றை தேடுகிறார்கள் என்பதன் அறிகுறியாக இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த இயக்கத்தை தொடங்கிய அபிஜித் தி ப்கே என்பவர் அமெரிக்காவில் தனது படிப்பை முடித்துவிட்டு நாடு திரும்பி உள்ள இவர் தற்போது தில்லி ஜந்தர் மந்தரில் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் புதிய கல்விக் கொள்கையில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டி போராட்டத்தையும் கையில் எடுத்துள்ளார்.