நாய்க்கடி தற்போது தேசிய பிரச்சனை – எழுத்தாளர் மதிப்புரு முனைவர் வே. பழனிவேலன்

0
64

நாய்க்கடி என்பது இன்றைக்கு நம் நாட்டின் தேசிய பிரச்சினையாக உள்ளது.
நம் நாட்டில் நாய் கடிகளால் பாதிப்புக்கு உள்ளாகிறவரின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் பெருமளவு அதிகமாக உள்ளன.

கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் நம் நாடு முழுவதும் தோராயமாக சுமார் 38.18 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
நமது நாட்டில் ஆண்டுதோறும் தோராயமாக22000 ராபீஸ் மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

புது தில்லியில் நடைபெற்ற அதிகமான நாய்க்கடி இறப்பால் நம் நாட்டின் உச்ச நீதிமன்றமே இந்தப் பிரச்சினையை வழக்காக தானாக எடுத்தது.
பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் உள்ள அனைத்து நாய்களையும் எட்டு வாரங்களுக்குள் பிடித்து காப்பங்களில் அடைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தது.

மேலும் உச்ச நீதிமன்றம் தெரு நாய் கடி பிரச்சினையை சாதாரணமாக பார்க்க முடியாது என்று கூறியதோடு மட்டுமல்லாமல் வெறி நாய்கள் மற்றும் ஆக்ரோஷமாக உளவும் நாய்களை கருணை கொலை செய்யவும் உத்தரவிட்டிருந்தது.

இந்தத் தீர்ப்புக்கு வரவேற்பும் எதிர்ப்பும் எழுந்து வருகிற சூழலில் விலங்கு ஆர்வலர்கள் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடுதல் வேண்டும் மற்றும் கருத்தடை செய்தல் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.