தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள தவெக தலைவர் ஜோசப் விஜய்க்கு ஓய்வுபெற்ற மருந்தாளுநர்கள் நலசங்க அமைப்பாளர் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் குறுகிய காலத்தில் கட்சி துவங்கி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள ஜோசப் விஜய்க்கு ஓய்வுபெற்ற மருந்தாளுநர்கள் நலசங்கம் நல்வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஜோசப் விஜய் அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளவாறு பழைய ஓய்வூதிய திட்டம், அரசு ஊழியர் நலவாரிகம், தற்காலிக பணி நிரந்தரம், பதவி நீயர்வு மற்றும் பணியிட மாறுதலில் வெளிப்படைத்தன்மை, 8ஆம் ஊதியக்குழுவின் உடனடி அமலாக்கம் ஆகிய கோரிக்கைகளை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களின் முக்கிய கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தினை விரைவாக அமல்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.












